- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபணம் தேடி வர கிராம்பு பரிகாரம்

பணம் தேடி வர கிராம்பு பரிகாரம்

- Advertisement -

கார்த்திகை மாதம் என்பது முருகப்பெருமானுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. கார்த்திகை மாதத்தின் முதல் நாள் என்பது முருகப்பெருமானுக்குரிய நட்சத்திரமான கிருத்திகை நட்சத்திரத்துடன் சேர்ந்து வருவது என்பது அதீத விசேஷமான பலனை தரக்கூடியதாக திகழ்கிறது. இதோடு மட்டுமல்லாமல் கார்த்திகை ஒன்று என்பது விஷ்ணுபதி புண்ணிய காலமாக கருதப்படுகிறது. இந்த விஷ்ணுபதி புண்ணிய காலம் என்பது பெருமாளுக்கு உரிய சனிக்கிழமையில் வருகிறது என்பதும் அதிக பலனை தரக்கூடிய ஒன்றாக திகழ்கிறது. இவை அனைத்தும் சேர்ந்து வரக்கூடிய இன்றைய நாளில் கிராம்பை வைத்து இந்த முறையில் பரிகாரம் செய்தால் நம்முடைய பணம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் தீரும் என்று கூறப்படுகிறது. அந்த பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பணம் தேடி வர கிராம்பு பரிகாரம்

செல்வ வளம் அதிகரிக்க வேண்டும் என்றால் அதற்காக நாம் வழிபடக்கூடிய தெய்வங்களாக திகழ்பவர்கள் தான் முருகப்பெருமானும் பெருமாளும். இவர்கள் இருவருக்கும் உரிய நாள், நட்சத்திரம் அனைத்தும் ஒருசேர வந்ததுதான் இந்த கார்த்திகை ஒன்றாம் தேதி. இன்றைய தினத்தில் நாம் தெய்வங்களை வசியப்படுத்தக்கூடிய சக்தி மிகுந்த கிராம்பை வைத்து எந்த முறையில் பரிகாரம் செய்தால் பணம் நம்மை தேடி வரும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை இரவு படுக்கச் செல்வதற்கு முன் எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம். இதற்கு ஏழு கிராம்பு வேண்டும். அது மொட்டு உடையாத நல்ல கிராம்பாக இருக்க வேண்டும். கிராம்பு அதீத மருத்துவ குணம் மிகுந்தது. அதேபோல் அதிக அளவில் நேர்மறை ஆற்றல்களை ஈர்க்கக் கூடியதாகவும், பணத்தை ஆகர்ஷணம் செய்வதற்குரிய ஈர்ப்பு சக்தி அதனிடம் இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த கிராம்பை வைத்து நாம் செய்யக்கூடிய எந்த ஒரு தாந்திரீக பரிகாரமாக இருந்தாலும் அவை முழுமையாக வெற்றி பெறும் என்றும் கூறப்படுகிறது.

முதலில் வீட்டு பூஜை அறையில் ஒரு விளக்கை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். ஏழு மொட்டு உடையாத கிராம்பை எடுத்துக் கொள்ளுங்கள். வீட்டில் பச்சை கற்பூரம் இருக்கும் பட்சத்தில் அந்த பச்சைக் கற்பூரத்தை நுணுக்கி நம்முடைய கையில் போட்டுக்கொள்ள வேண்டும். பச்சை கற்பூரம் இல்லாத பட்சத்தில் ஜவ்வாது, புனுகு போன்ற ஏதாவது ஒன்றையாவது எடுத்துக் கொள்ளலாம். முடிந்த அளவிற்கு பச்சை கற்பூரத்தை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். இப்பொழுது பச்சை கற்பூரத்தில் இந்த ஏழு கிராம்பையும் போட்டு நன்றாக தேய்க்க வேண்டும். மொட்டு உடைய கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இப்பொழுது பச்சை கற்பூரத்தின் வாசம் என்பது கிராம்பில் நன்றாக போய் சேர்ந்திருக்கும். இந்த ஏழு கிராம்பையும் ஒன்றாக வைத்து பச்சை நிற நூலால் பூ கட்டுவது போல் கட்ட வேண்டும் அல்லது சாதாரணமாக சுத்தி முடிச்சுக்கூட போடலாம். இப்படி நாம் முடிச்சு போடும் பொழுது ஏழு என்ற எண்ணிக்கையில் முடிச்சு போட வேண்டும். பூ கட்டி முடிச்சு போடுவதாக இருந்தாலும் ஏழு முறை கட்டி முடிச்சு போட வேண்டும். பிறகு சிறிது நூலை விட்டு நறுக்கிக் கொள்ளுங்கள்.

இதை உங்களுடைய வீட்டு நிலை வாசலில் உள்புறத்தில் கட்டி தொங்கவிட வேண்டும். அல்லது எந்த இடத்தில் பீரோ வைத்திருக்கிறோமோ அந்த இடத்தில் இருக்க கூடிய ஜன்னல் கம்பியில் கட்டி தொங்கவிடலாம். அல்லது எந்த பீரோவில் பணம் வைத்திருப்போமோ அந்த பீரோவின் கைப்பிடியில் தொங்குவது போல் கட்டிவிட வேண்டும். இது கண்டிப்பாக முறையில் தொங்குவது போல் தான் கட்டிவிட வேண்டுமே தவிர்த்து வைக்கக்கூடாது. இது ஒரு மாதம் வரை அப்படியே இருக்கட்டும். அடுத்த மாத பிறப்பன்று இதை எடுத்து எரித்து விட வேண்டும். இந்த முறையில் நாம் கிராம்பு, பச்சை கற்பூரத்தை சேர்த்து வைத்து கட்டும்பொழுது அங்கு இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் நீங்கும். நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும். பணம் நம்மை தேடி வருவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே:தங்கம் பெருக ஆன்மீக குறிப்பு

மிகவும் எளிமையான அதே சமயம் சக்தி வாய்ந்த இந்த பரிகாரத்தை இன்று இரவுக்குள் செய்பவர்களுக்கு பணம் நாலா பக்கமும் அவர்களைத் தேடி வரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்