- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalமன கசப்பை நீக்கும் கார்த்திகை ஞாயிற்றுக்கிழமை வழிபாடு

மன கசப்பை நீக்கும் கார்த்திகை ஞாயிற்றுக்கிழமை வழிபாடு

- Advertisement -

கார்த்திகை மாதம் என்பது விரதத்திற்கும் வழிபாட்டிற்கும் உரிய மாதம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இதில் கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமையும், திங்கட்கிழமையும் மிகவும் முக்கியமான தினங்களாக கருதப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமையும் திங்கட்கிழமையும் விரதம் இருந்து வழிபாடு செய்பவர்களுக்கு அவர்கள் வேண்டிய வரம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. எப்படி கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய திங்கட்கிழமை அன்று விரதம் இருந்து வழிபாடு செய்தால் கணவன் மனைவிக்குள் இருக்கக்கூடிய கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறதோ அதேபோல்தான் ஞாயிற்றுக்கிழமையில் விரதம் இருந்து வழிபாடு செய்வதன் மூலம் வீட்டில் இருக்கக்கூடிய அனைவரின் மனக்கசப்பும் நீங்கி மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள். அந்த வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

மன கசப்பை நீக்கும் வழிபாடு

ஒரு குடும்பம் என்று இருந்தால் ஒருவருக்கொருவர் கருத்து வேறுபாடு என்பது இருக்கும். கருத்து வேறுபாடு அந்த நேரத்தில் மட்டும் இருந்துவிட்டு மற்ற நேரத்தில் சந்தோஷமாக இருந்தால் அதனால் எந்த பிரச்சினையும் இருக்காது. ஆனால் பலரது இல்லங்களில் கணவன் மனைவிக்கு இடையே பேச்சு வார்த்தை இல்லாமல் பல வருட கணக்கில் இருப்பார்கள். இன்னும் சிலர் இல்லங்களிலோ, தந்தை மகனுக்கு இடையே பிரச்சனைகள் இருக்கும், மாமனார் மாமியாருக்கும் மருமகளுக்கும் பிரச்சனை இருக்கும், மருமகளுக்கும் மாமனார் மாமியாருக்கும் பிரச்சினை இருக்கும், உடன் பிறந்த பங்காளிகள் ரீதியாக பிரச்சனைகள் இருக்கும்,

- Advertisement -

இப்படி பல விதங்களில் குடும்பத்தில் யாராவது ஒருவருடன் மனக்கசப்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டு மனக்கசப்பு உண்டாகி பிரிந்து வாழும் சூழ்நிலையில் இருப்பார்கள். இப்படி இருக்கக்கூடிய அனைத்து விதமான மனக்கசப்புகளும் நீங்கி மகிழ்ச்சியுடனும் ஒற்றுமையுடனும் வாழ்வதற்கு கார்த்திகை ஞாயிற்றுக்கிழமை வழிபாடு என்பது பெரிதும் துணை புரியும். அந்த வகையில் கார்த்திகை முதல் ஞாயிற்றுக்கிழமை என்பது நவம்பர் மாதம் 17ஆம் தேதி வருகிறது. அன்றைய நாளில் நாம் செய்ய வேண்டிய வழிப்பாட்டு முறையை பற்றி பார்ப்போம்.

அன்றைய தினத்தில் விரதம் இருந்து வழிபாடு செய்பவர்களாக இருக்கும் பட்சத்தில் பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு விரதம் இருக்க ஆரம்பிக்க வேண்டும். மாலை 6:00 மணிக்கு மேல் வழிபாடு செய்து முடித்த பிறகு இந்த விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். விரதம் இருக்க இயலாது என்று நினைப்பவர்கள் வழிபாட்டை மட்டும் செய்யலாம். வழிபாடு மட்டும் செய்பவர்களாக இருக்கும் பட்சத்தில் கீழ் வரும் நேரத்தில் ஏதாவது ஒரு நேரத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.

- Advertisement -

பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்யலாம், காலை 7:45 இல் இருந்து 8:45 வரை செய்யலாம், காலை 10:45-ல் இருந்து 11 45 வரை செய்யலாம், மாலை 6:00 மணியிலிருந்து 9:30 மணிக்குள் இந்த வழிபாட்டை செய்யலாம். வீட்டு பூஜை அறையில் ஒரு இடத்தை பன்னீர் தெளித்து அதை சுத்தம் செய்து கொள்ளுங்கள். பிறகு பச்சரிசி மாவினால் “ஓம் நமோ நாராயணாய” என்று எழுத வேண்டும். பிறகு அதற்கு பூக்களை வைக்க வேண்டும். அந்த மந்திரத்திற்கு முன்பாக அகல் விளக்கில் நெய் ஊற்றி பஞ்சுத் திரி போட்டு வடக்கு பார்த்தவாறு தீபம் ஏற்ற வேண்டும்.

பிறகு உதிரிப்பூக்களை கையில் வைத்துக்கொண்டு மேல் சொன்ன அந்த மந்திரத்தை நூல் 108 முறை கூறி மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு தங்களால் இயன்ற ஏதாவது ஒரு பொருளை தங்கள் கைப்பட செய்து நெய்வேத்தியமாக வைத்து கற்பூர தீப தூப ஆராதனை காட்டி உங்கள் குடும்பத்தில் இருக்கக்கூடிய மனக்கசப்பு நீங்க வேண்டும் என்று வழிபாடு செய்ய வேண்டும். வழிபாட்டை நிறைவு செய்த பிறகு நெய்வேத்தியத்தை பிரசாதமாக எடுத்துக்கொண்டு விரதத்தை பூர்த்தி செய்து கொள்ளலாம். பச்சரிசியில் எழுதிய இந்த மந்திரத்தை மறுநாள் காலையில் தான் சுத்தம் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே:பணம் தேடி வர கிராம்பு பரிகாரம்
முழு மனதுடன் பெருமாளை நினைத்து கார்த்திகை முதல் ஞாயிற்றுக்கிழமை இந்த முறையில் வழிபாடு செய்பவர்களுக்கு அவர்கள் குடும்பத்தில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும், சந்தோஷமும் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்