ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஒவ்வொரு விதமான துன்பம் என்பது இருக்கும். அந்த துன்பத்திலிருந்து விடுபட வேண்டும் என்று எவ்வளவு முயற்சி செய்தாலும் அந்த துன்பம் நம்மை விடாமல் துரத்திக் கொண்டே இருக்கும். அப்படி துரத்திக் கொண்டிருக்கக் கூடிய துன்பத்திலிருந்து விடுபடுவதற்கு பல தெய்வ வழிபாட்டை நாம் மேற்கொள்வோம். கடுமையான வழிபாடுகளை கூட செய்திருப்போம். இவை அனைத்தும் செய்தும் எந்தவித பலனும் கிடைக்கவில்லை என்று நினைப்பவர்கள் பெருமாளின் இந்த ஒரு பாசுரத்தை தினமும் படித்தால் போதும். பெருமாளின் அருளால் அனைத்து விதமான துன்பங்களும் தீர்ந்து நன்மைகள் பெருகும். அந்த பாசுரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பெருமாளை வழிபாடு செய்பவர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கையில் இருக்கக் கூடிய அனைத்து விதமான துன்பங்களும் நீங்கும் என்று கூறப்படுகிறது. பெருமாளை நாம் நம்முடைய வாழ்நாளில் வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய வாழ்க்கை சிறப்பாக அமையும் என்றும் செல்வ செழிப்புடன் வாழ முடியும் என்றும் கடன் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் தீரும் என்றும் கூறப்படுகிறது. பெருமாளை வழிபடுவதன் மூலம் பெருமாளின் மனதிற்குள் இருக்கக்கூடிய மகாலட்சுமி தாயாரையும் நம்மை அறியாமலேயே வழிபடுகிறோம் என்பதால் அனைத்து விதமான நன்மைகளும் நம்மைத் தேடி வரும் என்று கூறப்படுகிறது.
எந்த ஒரு தெய்வ வழிபாட்டையும் நாம் சாதாரணமாக மேற்கொள்வதை விட அந்த தெய்வங்களுக்குரிய பாடல்களை பாடி வழிபடுவதன் மூலமும் அவர்களுடைய மந்திரத்தை கூறி வழிபடுவதன் மூலமும் அதனுடைய பலன் நமக்கு அதிகமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. விரதம் இருக்க வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை. எந்த தெய்வமாக இருந்தாலும் அந்த தெய்வத்திற்குரிய பாடலை பாடி வழிபட்டாலே அந்த தெய்வத்தின் அருள் நமக்கு கிடைக்கும்.
அப்படிப்பட்ட பெருமாளுக்கு உரிய பாடல்கள் என்று பல பாடல்கள் இருந்தாலும் ஒரு சில பாடல்கள் நம்முடைய வாழ்நாளில் இருக்கக்கூடிய பிரச்சனைகளை தீர்க்க உதவக்கூடிய பாடலாகவே திகழ்கிறது. அந்த வகையில் பெரியாழ்வார் எழுதிய இந்த ஒரு பாசுரத்தை நாம் தினமும் காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளித்து முடித்துவிட்டு பெருமாளின் படத்திற்கு முன்பாக ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்து இந்த பாடலை படிக்க வேண்டும். இப்படி தினமும் படித்துக்கொண்டே வருவதன் மூலம் திருமாலின் அருளால் நம் வாழ்வில் தீர்க்க முடியாமல் இருக்கக் கூடிய பிரச்சினைகளும் துன்பங்களும் தீர்வதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும் என்று கூறப்படுகிறது.
பாடல்
அனந்தன் பாலும் கருடன் பாலும் ஐது நொய்தாக வைத்து என் மனம் தனுள்ளே வந்து வைகி வாழச் செய்தாய் எம்பிரான், நினைந்து என்னுள்ளே நின்று நெக்குக்கண்கள் அசும் பொழுக நினைந்திருந்தே சிரமம் தீர்ந்தேன் நேமி நெடியவனே.
பொருள்
அனந்தனிடத்திலும், கருடனிடத்திலும் அன்பை
மிக கொஞ்சமாக வைத்து, என் மனத்தினுள்ளே வந்து
அமர்ந்து என்னை வாழ வைத்தாய். இந்த வைபவத்தால்,
என் மனம் உருகி, கண்களில் நீர் பெருகியது. கையில்
சக்கரம் எந்திய பெரியோனே! நீ செய்த இந்த
உபகாரத்தை நினைத்து நினைத்து என்
வருத்தமெல்லாம் தீர்ந்து விட்டது.
இதையும் படிக்கலாமே: செல்வ செழிப்பு அதிகரிக்க பஞ்சமி தீப வழிபாடு
பெருமாளை முழு மனதுடன் நம்பி இந்த ஒரு பாடலை தினமும் பாடிக்கொண்டு வருபவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் இருக்கக் கூடிய துன்பங்கள் ஒவ்வொன்றாக நீங்கி மகிழ்ச்சியான நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.