- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஎதிர்மறை ஆற்றல் விலக கார்த்திகை ஞாயிறு பரிகாரம்

எதிர்மறை ஆற்றல் விலக கார்த்திகை ஞாயிறு பரிகாரம்

- Advertisement -

சூரியன் அஸ்தமனமான பிறகு, கார்த்திகை மாதம் முழுவதுமே வீட்டில் பிரகாசமாக தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். கார்த்திகை மாதம் வீடு இருள் நிறைந்து இருக்கக் கூடாது. மின் விளக்குகள் எத்தனை எரிந்தாலும், தீபச்சுடரிலிருந்து வெளியேற்றப்படும் வெளிச்சமானது, நம்முடைய வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை விளக்கக் கூடியது.

கார்த்திகை மாதம் என்று மட்டும் கிடையாது. தினம் தினம் வீட்டில் தீப வழிபாடு செய்வது வீட்டில் இருக்கும் இருளை அகற்றும். வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலையும் அகற்றும். இன்று கார்த்திகை மாதத்தில் வந்திருக்கும் ஞாயிற்றுக்கிழமை. எதிர்மறை ஆற்றலை விளக்க இந்த நாள் மிகவும் சக்தி வாய்ந்த நாளாக சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

எதிர்மறை ஆற்றல் விலக பரிகாரம்

உங்களுடைய வீட்டில் இன்று கட்டாயம் தீபம் ஏற்றி பூஜை அறையில் வழிபாடு மேற்கொள்ள வேண்டும். இது தவிர எதிர்மறை ஆற்றலை விளக்க இன்னொரு சக்தி வாய்ந்த பரிகாரமும் நமக்கு சொல்லப்பட்டுள்ளது. உங்களுடைய வீட்டின் மின்விளக்குகளை எல்லாம் அணைத்து விடுங்கள். அதாவது லைட் ஆஃப் பண்ணிடுங்க.

அடுத்தபடியாக ஒரு தாம்பூல தட்டின் மேல் மண் அகல் விளக்கை வைத்து, அதில் ஒரு கட்டி கற்பூரம் போட்டு, ஏற்றிக் கொள்ளுங்கள். இதில் பச்சை கற்பூரம் சேர்க்கலாம் இன்னும் சிறப்பு. கிராம்பு போட்டால் இன்னும் சிறப்பு. இந்த பொருட்கள் எல்லாம் எங்கள் வீட்டில் இல்லை என்றால், வெறும் கற்பூரத்தை மட்டும் ஏற்றி அந்த நெருப்பை வீட்டின் மூளை முடுக்குகளில் எல்லா இடங்களிலும் காட்ட வேண்டும்.

- Advertisement -

சமையலறை, படுக்கையறை, வரவேற்பறை என்று நான்கு மூலைகள் ஒவ்வொரு அரைக்கும் தனி தனியாக இருக்கும் அல்லவா. நான்கு இடத்திலும் இந்த கற்பூரத்தை கொண்டு போய் காண்பிக்க வேண்டும். எல்லா இடத்திலும் காண்பித்து விட்டு அந்த கற்பூரத்தை கொண்டு வந்து நிலை வாசலுக்கு வெளியில் அப்படியே வைத்து விடுங்கள். தானாக எரிந்து குளிரட்டும் இவ்வளவுதான் பரிகாரம்.

இந்த பரிகாரத்திற்கு பயன்படுத்தும் கற்பூரம் மெழுகு கற்பூரமாக இருக்க வேண்டாம். கட்டிக் கற்பூரம் பூ கற்பூரம் என்று கடைகளில் விற்கும் அந்த கற்பூரத்தை வாங்கி பரிகாரத்திற்கு பயன்படுத்துங்கள் இந்த புகையானது வீட்டின் மூளை முடுக்குகளில் எல்லாம் பட்டால், கண்ணுக்கு தெரியாமல் தங்கி இருக்கும் கண் திருஷ்டி எதிர்மறை ஆற்றல் எல்லாம் விலகும்.

இதையும் படிக்கலாமே: புகழும், செல்வாக்கும் உயர கார்த்திகை ஞாயிற்றுக்கிழமை வழிபாடு

வீட்டில் நிம்மதியற்ற சூழ்நிலை நிலவுகிறது. எப்போதும் சண்டை வந்து கொண்டே இருக்கிறது எனும் பட்சத்தில், இந்த பரிகாரத்தை இன்று மாலை, சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு, அதாவது மாலை 6:30 மணிக்கு பிறகு வெளிச்சம் முழுமையாக குறைந்த பிறகு உங்களுடைய வீட்டில் செய்து பாருங்கள். நிச்சயம் நல்ல மாற்றம் தெரியும். நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த பதிவு நல்ல பலனை தரும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்