- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகோடி ரூபாய் கடனும் காணாமல் போக வழிபாடு

கோடி ரூபாய் கடனும் காணாமல் போக வழிபாடு

- Advertisement -

செல்வத்திற்கு அதிபதியாக திகழக்கூடியவர் குபேர பகவான் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இந்த குபேர பகவானிற்குரிய கிழமையாக திகழ்வதுதான் வியாழக்கிழமை. அதேபோல் பெருஞ்செல்வத்திற்கு அதிபதியாக திகழக் கூடியவர் குருபகவான். குரு பகவானுக்குரிய கிழமையாகவும் திகழக்கூடியதும் வியாழக்கிழமை தான். அதனால் தான் வியாழக்கிழமை அன்று பணம் தொடர்பான வேண்டுதல்களை முன் வைப்பவர்களுக்கு அந்த வேண்டுதல் நிறைவேறும் என்று கூறப்படுகிறது. இந்த சிறப்பு வாய்ந்த வியாழக்கிழமையோடு சிவபெருமானுக்குரிய பிரதோஷமும் சேர்ந்து வருகிறது. அந்த நாளில் நாம் செய்ய வேண்டிய வழிபாட்டை தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

கோடி ரூபாய் கடனும் காணாமல் போக வழிபாடு

பணத்தடை ஏற்பட்டிருக்கிறது, பணவரவில் பிரச்சினைகள் இருக்கிறது, கடன் பிரச்சினையால் அவதிப்பட்டு கொண்டு இருக்கிறோம் என்றால் இதற்கு காரணம் நம்முடைய ஜாதகத்தில் இருக்கக்கூடிய தோஷங்களும், கர்ம வினைகளும் தான். இந்த தோஷங்களையும், கர்ம வினைகளையும் குறைப்பதற்கு பிரதோஷ நாளன்று சிவபெருமானை வழிபாடு செய்ய வேண்டும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். வியாழக்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய பிரதோஷ நாளன்று சிவபெருமானை வழிபாடு செய்பவர்களுக்கு அவர்களுடைய தோஷங்கள் நீங்குவதோடு செல்வ செழிப்பும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த பிரதோஷ நாளில் மாலை நேரத்தில் சிவன் பெருமான் ஆலயத்தில் பிரதோஷ பூஜை என்பது நடைபெறும். அந்த பூஜையில் கலந்துகொண்டு சிவபெருமானை வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு. ஒரு வேளை அந்த நேரத்தில் பூஜையில் கலந்து கொள்ள இயலவில்லை என்றால் காலையிலேயே சென்று தங்களால் இயன்ற அபிஷேகப் பொருட்களை சிவபெருமானுக்கும், நந்தி பகவானுக்கும் வாங்கி கொடுத்து வழிபாடு செய்துவிட்டு வரவேண்டும். அதிலும் குறிப்பாக வியாழக்கிழமையோடு வரக்கூடிய பிரதோஷ நாளன்று சிவபெருமானுக்கு அபிஷேகத்திற்காக திருமஞ்சன பொடியும், மஞ்சள் தூளும் வாங்கி கொடுப்பது என்பது நல்ல பலனை தரும்.

வீட்டில் மாலை 4:30 மணியிலிருந்து 7 மணிக்குள் வீட்டில் இந்த முறையில் தீபமேற்றி இந்த மந்திரத்தை கூறி வழிபாடு செய்பவர்களுக்கு சிவபெருமானின் அருளோடு அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்கப் பெறுவதோடு மட்டுமல்லாமல் கடன் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் தீரும் என்று கூறப்படுகிறது. இந்த நேரத்தில் நாம் நம்முடைய வீட்டில் ஒரு தாம்பாள தட்டை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் விபூதியை பரப்பி அதற்கு நடுவே ஒரு ரூபாய் அல்லது ஐந்து ரூபாய் நாணயத்தை வைக்க வேண்டும்.

- Advertisement -

அந்த நாணயத்திற்கு மேலே ஒரு அகல் விளக்கை வைத்து நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபம் வடக்கு திசை பார்த்தவாறு இருக்க வேண்டும். இந்த தீபத்தை சிவபெருமானுக்கு முன்பாக வைத்து ஏற்ற வேண்டும். தங்களால் இயலும் பட்சத்தில் சிவபெருமானுக்கு வில்வமாலை சாற்றலாம் அல்லது வாசனை நிறைந்த மலர்களால் மாலை சாற்ற வழிபாடு செய்ய வேண்டும். அன்றைய தினத்தில் நெய்வேத்தியமாக கொண்டை கடலை சுண்டலை வைப்பது நல்ல பலனை தரும்.

பிறகு இந்த ஒரு மந்திரத்தை தங்களால் இயன்ற அளவு குறைந்தபட்சம் 11 முறையில் இருந்து 108 முறை வரை கூறலாம். அப்படி கூறி முடித்துவிட்டு உங்களுடைய பணம் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் தீர வேண்டும், கடன் பிரச்சனை தீர வேண்டும், பணத்தடை விலக வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். கடைசியாக கற்பூர தீப தூப ஆராதனை காட்டி நிறைவு செய்துவிட்டு நெய்வேத்தியமாக வைத்திருந்த பிரசாதங்களை வீட்டில் இருக்கும் அனைவருக்கும் கொடுத்து நாமும் உண்ண வேண்டும்.

- Advertisement -

மந்திரம்

ஓம் ஐம் மனோ வஞ்சித சிவ சித்தாய ஐம் ஐம் ஓம்

இந்த முறையில் வியாழக்கிழமை வரக்கூடிய பிரதோஷ நாளன்று இந்த மந்திரத்தை கூறி வழிபாடு செய்யும்பொழுது சிவபெருமானின் அருளாலும், குரு பகவானின் அருளாலும், குபேர பகவானின் அருளாலும் நம் வாழ்வில் இருக்கக்கூடிய பணம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் தீரும். இந்த தீபம் எரிந்து முடித்த பிறகு அதற்கு கீழே இருக்கக்கூடிய நாணயத்தை எடுத்து பணம் வைக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். விபூதியை எடுத்து தனியாக சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: குபேர யோகம் பெற பிரதோஷ நேரத்தில் ஏற்ற வேண்டிய தீபம்

யாரொருவர் சிவபெருமானை முழுமனதோடு நம்பி கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய இந்த தேய்பிறை பிரதோஷ நாளில் இந்த தீபத்தை ஏற்றி வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு பணம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் தீரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கி

சற்று முன்