- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபண வரவை அதிகரிக்கும் அமாவாசை பரிகாரம்

பண வரவை அதிகரிக்கும் அமாவாசை பரிகாரம்

- Advertisement -

காலையில் எழுந்ததும் அவசர அவசரமாக அனைத்து வேலைகளையும் பார்த்துவிட்டு அலுவலகத்திற்கு சென்று மறுபடியும் வீடு திரும்பி உறங்குவதற்கு நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டு இருப்பவர்கள் இந்த உலகத்தில் நூற்றுக்கு 99.9% இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் இப்படி ஓடுவதற்கு காரணமாக இருக்கக்கூடியது பணம் மட்டும்தான். எவ்வளவுதான் ஓடி ஓடி சம்பாதித்தாலும் பணவரவில் பலவிதமான தடைகள் இருந்து கொண்டே இருக்கிறது என்று புலம்புவர்களும், பண வரவே இல்லை என்று புலம்புபவர்களும் சனிக்கிழமையோடு வரக்கூடிய அமாவாசை தினத்தன்று செய்ய வேண்டிய பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

அமாவாசை பரிகாரம்

கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய அமாவாசை தினத்தன்று தான் மகாலட்சுமி தாயார் அவதரித்தார் என்று கூறப்படுகிறது. இந்த வருடம் கார்த்திகை அமாவாசை என்பது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்று 2 நாட்களிலும் வருகிறது. சனிக்கிழமை காலை 11:04 மணிக்கு ஆரம்பித்து ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12:05 மணிக்கு நிறைவடைகிறது. அதனால் நாம் மகாலட்சுமி பூஜை செய்வதாக இருக்கும் பட்சத்தில் சனிக்கிழமை அன்றே செய்து விட வேண்டும். இந்த பரிகாரத்தையும் சனிக்கிழமை அன்றே செய்து விட வேண்டும்.

- Advertisement -

பணவரவை அதிகரிப்பதற்காக மகாலட்சுமி தாயார் அவதரித்த கார்த்திகை அமாவாசை தினத்தன்று அதுவும் சனிக்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய நாளில் நாம் செய்யும்பொழுது அதற்கு அதீத பலன் என்பது உண்டாகும். இதற்கு நமக்கு மகாலட்சுமி தாயாருக்கும் பெருமாளுக்கும் உகந்த பொருட்கள் மட்டும் தான் வேண்டும். முதலில் ஒரு வெள்ளை நிற சதுரமான துணியை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அந்த துணியில் மகாலட்சுமி தாயாரின் மறு அம்சமாக திகழக்கூடிய துளசி இலைகளை வைக்க வேண்டும். அடுத்ததாக மகாலட்சுமி தாயாருக்கும் பெருமாளுக்கும் உகந்த நல்ல ஏலக்காயாக பார்த்து இரண்டு ஏலக்காயை வைக்க வேண்டும்.

இதனுடன் தெய்வீக மணம் கமலும் பச்சைக் கற்பூரம் ஒரு துண்டை வைக்க வேண்டும். இதனுடன் ஒரு ரூபாய் நாணயத்தையும் வைக்க வேண்டும். இவை அனைத்தையும் ஒரு முடிச்சாக கட்டி உங்கள் கையில் வைத்துக் கொண்டு பணவரவு அதிகரிக்க வேண்டும் என்ற வேண்டுதலை முன் வைக்க வேண்டும். பிறகு வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய மகாலட்சுமி தாயாரின் பாதத்தில் வைத்து விடுங்கள். கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்த பிறகு சிறிது நேரம் கழித்து வீட்டின் தென்மேற்கு மூலை என்று கூறக்கூடிய குபேர மூலையில் இந்த முடிச்சை கட்டிவிட வேண்டும்.

- Advertisement -

ஒரு மாத காலம் இது அப்படியே இருக்கட்டும். அடுத்த அமாவாசை வரும்பொழுது இதில் இருக்கக்கூடிய பொருட்கள் அனைத்தையும் கால்படாத இடத்தில் போட்டு விடுங்கள். ஒரு ரூபாயை எடுத்து செலவு செய்யாமல் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:சனி பெயர்ச்சி அதிர்ஷ்ட பலன் 2025
முழு நம்பிக்கையுடன் மகாலட்சுமி தாயாரை வழிபட்டு இந்த முறையில் பரிகாரம் செய்பவர்களுக்கு அவர்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு பணவரவு உண்டாகி நல்ல நிலைக்கு வருவார்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்