- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகுலதெய்வ அருள் கிடைக்க கார்த்திகை அமாவாசை வழிபாடு

குலதெய்வ அருள் கிடைக்க கார்த்திகை அமாவாசை வழிபாடு

- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கையில் எந்த ஒரு நல்லது நடக்க வேண்டும் என்றாலும் அதற்கு முதலில் குலதெய்வத்தின் அருள் என்பது வேண்டும். குலதெய்வத்தின் அருள் இருந்தால்தான் அவர்கள் வாழ்க்கையில் எந்த ஒரு நல்ல நிகழ்வும் நடைபெறும். குலதெய்வத்தின் அருள் இல்லை என்றால் அவர்கள் வாழ்க்கையில் பல விதமான தடைகளையும் பிரச்சினைகளையும் சந்திக்க வேண்டி இருக்கும். அதனால் தான் குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது.

குலதெய்வத்தின் அருள் ஒருவருக்கு கிடைத்துவிட்டால் குலதெய்வத்தின் அருளோடு மட்டுமல்லாமல் அவர்களின் முன்னோர்களின் அருளும் சேர்ந்தே கிடைக்கும் என்பதால் அனைத்து விதமான தடைகளும் நீங்க பெற்று வீட்டில் சுப நிகழ்ச்சிகளும் நன்மைகளும் உண்டாகும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட குலதெய்வத்தின் அருளை பெறுவதற்கு கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய அமாவாசை தினத்தன்று செய்ய வேண்டிய ஒரு வழிப்பாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

கார்த்திகை அமாவாசை வழிபாடு

இந்த வழிபாட்டை 30 11 2024 சனிக்கிழமை அன்று மாலை 5 30 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் செய்ய வேண்டும். இந்த வழிப்பாட்டிற்கு குலதெய்வத்தின் படமோ சிலையோ இருக்க வேண்டும் என்ற நிபந்தனை இல்லை. குலதெய்வமே தெரியவில்லை என்பவர்கள் கூட இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். வீட்டு பூஜை அறையில் ஒரு இடத்தை சுத்தம் செய்து பச்சரிசி மாவினால் கோலம் போட்டுக் கொள்ளுங்கள்.

அதற்கு மேல் ஒரு வாழை இலையோ அல்லது தட்டையோ வைத்து அதற்கு மேல் குங்குமத்தை கொட்டி பரப்பிக் கொள்ளுங்கள். அந்த குங்குமத்திற்கு மேல் புள்ளிகள் இல்லாத நல்ல எலுமிச்சம் பழமாக பார்த்து ஒரு எலுமிச்சம் பழத்தை வைக்க வேண்டும். அந்த எலுமிச்சம் பழத்தை உங்களுடைய குலதெய்வமாக நினைத்து மஞ்சள் குங்குமம் வைக்க வேண்டும். குலதெய்வத்திற்கு நெய்வேத்தியமாக வடித்த பச்சரிசி சாதத்தில் நெய் அல்லது தேன் கலந்து வைக்க வேண்டும். ஒரு கைப்பிடி அளவு வைத்தால் கூட போதும். அந்த சாதம் எச்சில் படாத சாதமாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. முடிந்த அளவிற்கு அந்த நேரத்தில் வடித்த சாதத்தை வைக்க வேண்டும்.

- Advertisement -

இந்த அடுத்ததாக ஒரு அகல்விளக்கில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி குலதெய்வத்திற்காக ஒரு தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய விருப்பத்திற்கு ஏற்றார் போல் வேறு ஏதாவது நெய்வேத்தியம் வைப்பதாக இருந்தாலும் வைத்துக் கொள்ளலாம். இதோடு ஒரு சொம்பு நிறைய சுத்தமான தண்ணீரையும் பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். இப்படி அனைத்தையும் தயார் செய்து வைத்த பிறகு உங்களுடைய குலதெய்வத்தை மனதார நினைத்துக் கொண்டு உங்கள் குடும்பத்தில் அனைத்து விதமான நன்மைகளும் நடைபெற வேண்டும், இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் விலக வேண்டும், கஷ்டங்கள் அனைத்தும் அகல வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.

வேண்டுதல்கள் நிறைவடைந்த பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ள வேண்டும். வழிபாடு நிறைவு செய்த பிறகு நெய்வேத்தியமாக வைத்த பொருட்களை எடுத்து வீட்டில் இருக்கும் அனைவருக்கும் பிரசாதமாக தர வேண்டும். சொம்பில் இருக்கக்கூடிய தண்ணீரை எடுத்து வீட்டில் இருப்பவர்களுக்கு அருந்த கொடுத்துவிட்டு மீதமிருக்கும் தண்ணீரை வீடு முழுவதும் தெரிந்து விட வேண்டும். எலுமிச்சம் பழத்தை குலதெய்வமாக நாம் வைத்திருந்தோம் அல்லவா? அது அன்று இரவு முழுவதும் அப்படியே இருக்கட்டும்.

மறுநாள் காலையில் நாம் எப்பொழுதும் போல் விளக்கேற்றுவோம் அல்லவா? அப்பொழுது அந்த எலுமிச்சம் பழத்தை எடுத்து நறுக்கி சாறு பிழிந்து உப்பு, இனிப்பு என்று எதுவும் சேர்க்காமல் தண்ணீரை மட்டும் கலந்து வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் பருக வேண்டும். அதில் இருக்கக்கூடிய குங்குமத்தை தினமும் நெற்றியில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே:பண வரவை அதிகரிக்கும் அமாவாசை பரிகாரம்
இந்த முறையில் அமாவாசை தினத்தில் செய்யக்கூடிய குலதெய்வ வழிபாடு என்பது குலதெய்வத்தின் அருளை பரிபூரணமாக பெற உதவும். அதனால் நமக்கு இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளும் தீரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்