- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவேண்டுதல் நிறைவேற அபிஜித் நட்சத்திர வழிபாடு

வேண்டுதல் நிறைவேற அபிஜித் நட்சத்திர வழிபாடு

- Advertisement -

27 நட்சத்திரங்கள் இருக்கிறது என்று நம் அனைவருக்கும் தெரியும். 28 ஆவதாக ஒரு நட்சத்திரம் இருக்கிறது அதுதான் அபிஜித் நட்சத்திரம். இந்த அபிஜித் நட்சத்திரத்தில் நாம் எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அந்த காரியம் பல மடங்கு வெற்றியடையும் என்று கூறப்படுகிறது. மகாபாரதம் சமயத்தில் துரியோதனன் போரில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக போர் தொடங்க இந்த அபிஜித் நட்சத்திரம் வரக்கூடிய நாளை தான் தேர்வு செய்தாராம். அவர்கள் வெற்றியடையக்கூடாது என்பதற்காக கிருஷ்ண பகவான் எப்பொழுதும் போல் ஒரு சில சூழ்ச்சிகளை செய்து அந்த அபிஜித் நட்சத்திரத்தை மறைத்துக் விட்டாராம். அதனால் தான் துரியோதனன் போரில் தோல்வியடைந்தார் என்று கூறப்படுகிறது.

அவ்வளவு சிறப்பு வாய்ந்த அந்த அபிஜித் நட்சத்திரம் பிற்காலத்தில் பிறரால் தவறான பாதைக்கு வழிவகுக்கும் என்ற ஒரே காரணத்தினால் அந்த நட்சத்திரம் மாதத்தில் ஒருமுறை ஒரு குறிப்பிட்ட நிமிடங்கள் மட்டுமே வருவது போல் கிருஷ்ண பகவான் மாற்றி வைத்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. அப்படிப்பட்ட அபிஜித் நட்சத்திரம் டிசம்பர் மாதத்தில் ஐந்தாம் தேதி வருகிறது. அந்த நேரத்தில் நாம் செய்யக்கூடிய பெருமாள் வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

பிரம்ம முகூர்த்த நேரம் என்பது எப்படி விடியற்காலையில் இருக்கிறதோ அதேபோல் நண்பகலான 12 மணி என்பது அபிஜித் முகூர்த்தமாக கருதப்படுகிறது. அந்த உச்சிக்கால நேரத்தில் நாம் செய்யக்கூடிய எந்த ஒரு காரியமும் நமக்கு நன்மையை தரும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட வெற்றியை தரக்கூடிய நட்சத்திரமாக திகழ்வதுதான் இந்த அபிஜித் நட்சத்திரம். இது டிசம்பர் மாதம் ஐந்தாம் தேதி மாலை 5:14 மணிக்கு தொடங்கி 5:38 மணிக்கு நிறைவடைகிறது. 24 நிமிடங்கள் மட்டுமே இருக்கக் கூடிய இந்த அபிஜித் நட்சத்திரம் நேரத்தில் நாம் கிருஷ்ண பகவானை வழிபாடு செய்வதன் மூலம் நீண்ட நாட்களாக நமக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகள் தீர்வதற்குரிய வழி உண்டாகும் என்று கூறப்படுகிறது.

இந்த குறிப்பிட்ட நேரத்தில் வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய கிருஷ்ணரின் படத்திற்கு முன்பாக இரண்டு அகல் விளக்கில் நெய் ஊற்றி தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள். கிருஷ்ணரின் படம் இல்லை என்பவர்கள் பெருமாளின் படத்திற்கு முன்பாக இந்த வழிபாட்டை செய்யலாம். இப்படி தீபம் ஏற்றி வைத்த பிறகு அவருக்கு துளசி மாலையை சாற்றி மஞ்சள் நிற மலர்களை வைத்து உங்களுடைய நீண்ட நாள் கோரிக்கை என்னவோ, எந்த பிரச்சனை உங்களுக்கு சரியானால் நீங்கள் நிம்மதியாக வாழ முடியும் என்று நினைக்கிறீர்களோ அது சரியாக வேண்டும் என்று பெருமாளிடம் வேண்டிக் கொள்ள வேண்டும். இயன்றவர்கள் மஞ்சள் நிறத்திலான லட்டுவை பெருமாளுக்கு முன்பாக வைத்து இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். தீபமேற்றி முடித்த பிறகு இந்த அபிஜித் துதியை மூன்று முறை மனதார கூற வேண்டும் .

- Advertisement -

அபிஜித் ஸ்துதி

ஆகமாந்துதீர அபஜிதாம்பர நட்சத்ராணாம் நாததீய ஜோதீனாம் நளகங்காதர பவதாரண சிவச்ய விஷ்ணு மெய்தீனாம் பவதாவலம்சுத பரிபாலய சரணாகத பாஹிமாம்!

- Advertisement -

இந்த குறிப்பிட்ட நேரத்தில் நாம் ஏதாவது ஒரே ஒரு வேண்டுதலை அல்லது ஒரு கோரிக்கையை பெருமாளிடம் வைத்து வழிபாடு செய்தோம் என்றால் அந்த கோரிக்கை விரைவிலேயே நிறைவேறும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே:வளங்களைத் தரும் வளர்பிறை பஞ்சமி வாராகி வழிபாடு

மிகவும் சக்தி வாய்ந்த அதேசமயம் அற்புதமான நட்சத்திரமாக திகழக்கூடிய இந்த அபிஜித் நட்சத்திரத்தை தவிர விடாமல் நம்முடைய நீண்ட நாள் பிரச்சனை தீர்வதற்கு பெருமாளை வழிபாடு செய்வோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்