டல் ஆன முகத்திற்கு இன்ஸ்டன்ட் ஆக பேசியல் எதுவும் செய்யாமலேயே பொலிவு கொடுக்க, வீட்டில் ஒரே ஒரு தக்காளி இருந்தால் போதும். தக்காளியுடன் இந்த மூன்று பொருட்களை சேர்த்து மசாஜ் செய்யும் போது கிடைக்கக் கூடிய பொலிவு, வேறு எந்த விலை அதிகம் உள்ள பொருட்களிலும் கிடைக்கப் போவதில்லை! அந்த அளவிற்கு முகத்திற்கு நல்ல ஒரு பொலிவை கூட்டக்கூடிய இந்த ஃபேஸ் மசாஜ் பற்றிய ரகசியத்தை தான் தொடர்ந்து இந்த அழகு குறிப்பு பகுதியில் அறிந்து கொள்ள போகிறோம்.
தலை மற்றும் முகம் இந்த இரண்டுக்குமே முதலில் மசாஜ் எனும் விஷயத்தை செய்து வந்தாலே, அது எப்போதும் நமக்கு இளமையான தோற்றத்தை கொடுக்கும். தலைக்கு மசாஜ் செய்யாமல் இருப்பதால் ரத்த ஓட்டம் சரியாக பாயாமல் பெரும்பாலானோருக்கு தலைமுடி கொட்டுகிறது. கூடுதலாக ஸ்ட்ரெஸ் என்னும் ஒன்றையும் அதற்கு ஊட்டி விடுகிறோம். அது போல முகத்திற்கும் மசாஜ் செய்யாமல் இருப்பதால் முகம் விரைவிலேயே தன் இளமை தன்மையை இழந்து விடுகிறது.
முகம் கலை இழந்து போகும் பொழுது இந்த ஒரு மசாஜ் செய்து பாருங்கள், இன்ஸ்டன்ட் ஆன பொலிவு கிடைக்கும். இது தொடர்ந்து செய்யும் பொழுது, உங்கள் சருமம் எப்போதும் இளமையுடன் ஜொலிக்கும். இதற்கு வீட்டில் இருக்கும் ஒரே ஒரு தக்காளியை நன்கு பழுத்தும், பழுக்காமலும் இருப்பதாக எடுத்துக் கொள்ளுங்கள். நான்கைந்தாக வட்டமாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
முதலில் ஒரு வட்ட தக்காளியை கையில் எடுத்துக் கொண்டு அதில் சிறிதளவு சர்க்கரையை மேற்புறமாக தூவி விடுங்கள். இதனை மென்மையாகவும், ஜென்டில் ஆகவும் முகத்திற்கு மசாஜ் செய்து வர வேண்டும். ஒரு ஐந்து நிமிடம் இடைவிடாமல் சர்க்கிள் மோஷனில், வட்ட வடிவத்தில் முகம் முழுவதும் சுற்றி சுற்றி மசாஜ் செய்து வாருங்கள். இது முகத்தில் இருக்கும் இறந்த செல்களையும், கரும்புள்ளி, வெண்புள்ளி போன்றவற்றையும் அகற்ற உதவும்.
பின்பு ஈரமான துணியில் முகத்திற்கு அழுத்தம் கொடுக்காமல் துடைத்து எடுத்து விட்டு, அடுத்த வட்ட தக்காளியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சிறிதளவு தேனை ஊற்றி அதே போல வட்டமாக சுற்றி மசாஜ் செய்து வர வேண்டும். ஐந்து நிமிடம் அது போல தேனால் தக்காளியை மசாஜ் செய்யும் பொழுது முகத்தில் இருக்கும் எரிச்சல் நீங்கி, முகம் மென்மையான, மிருதுவான சருமத்தை பெறும். பிறகு இதையும் துடைத்து எடுத்துவிட்டு அடுத்த தக்காளியை எடுங்கள். இந்த தக்காளியில் சிறிதளவு காபி பவுடரை சேர்க்க வேண்டும்.
இதையும் படிக்கலாமே:
காரியசித்தி தரும் மந்திரம்
பின்பு மீண்டும் முகத்திற்கு மென்மையாக வட்ட வடிவில் பட்டும் படாமல் ரொட்டேட் செய்து தேய்த்து வாருங்கள். மூக்கு பகுதியில் தேய்க்கும் பொழுது சற்று கவனமாக இருங்கள். மூக்கின் இடுக்குகள், உதட்டின் கீழ் புற பகுதிகளில் அழுத்தம் அதிகமாக கொடுத்து விடக்கூடாது. மென்மையாக தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். இந்த கடைசி மசாஜ் மட்டும் உலறும் வரை காத்திருங்கள். நன்கு உலர்ந்த பின்பு சுத்தமான துணியால் துடைத்து விடுங்கள். அவ்வளவுதாங்க, இப்போ கண்ணாடியில் உங்கள் முகத்தை பாருங்கள். கலை இழந்து போன உங்க முகம் எப்படி பொலிவாக இருக்கிறது என்று! இதை வாரம் ஒருமுறை செய்யும் பொழுது, உங்களுடைய சருமத்திற்கு எப்போதும் எவ்வளவு வயதானாலும் இளமை தன்மையை கொடுக்கலாம்.