ஒருவருடைய முகத்தில் இருக்கக்கூடிய பருக்களும், பருக்களால் ஏற்பட்ட வடுக்களும், கரும்புள்ளிகளும் அவர்களுடைய தன்னம்பிக்கையை குறைக்க கூடிய ஒன்றாகவே திகழ்கிறது. பலருக்கும் இந்த பருக்களும், பருக்களால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளும் பலவிதமான பாதிப்புகளை தருகின்றன. ஒரு சிலர் இதற்காகவே வீட்டை விட்டு வெளியே வராமல் தங்களுடைய முகத்தை மறைத்துக் கொள்கிறார்கள். இன்னும் சிலரோ இதை போக்க வேண்டும் என்பதற்காக ஏதேதோ முயற்சிகள் செய்து அதன் மூலம் அந்த பிரச்சினையை அதிகரித்து மோசமான நிலைக்கு கொண்டு செல்கிறார்கள். இப்படி இந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்குவதற்கும் கலங்கமற்ற பிரகாசமான முகத்தை பெறுவதற்கும் மஞ்சள் தூளுடன் சேர்த்து முகத்திற்கு தடவ வேண்டிய ஒன்றைப் பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.
கலங்கமற்ற முகத்தை பெற
பொதுவாக ஒருவருக்கு தங்களுடைய முகத்தில் ஒரு சிறிய பரு வந்தால் கூட அது வரக்கூடாது என்பதற்காக என்னென்னமோ செய்வார்கள். அப்படி செய்வதன் மூலம் என்னவாகும்? அந்த பருப்போகாது அது இன்னும் அதிகரிக்கும் அல்லது அந்த பரு இருந்த இடத்தில் ஒரு வடு போல ஏற்பட்டு அது நீங்காமல் கரும்புள்ளியாக மாறிவிடும். அந்த மாதிரி தவறுகளை செய்யாமல் இயற்கையில் கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து நாம் பரு வராமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
அப்படி பருக்களில் இருக்கக்கூடிய கிருமிகள் அழிவதற்கு உதவக்கூடிய ஒன்றாக திகழ்வதுதான் மஞ்சள் தூள், மஞ்சள் தூளில் ஆன்டி வைரல் இருக்கிறது என்பது நம் அனைவருக்குமே தெரியும். அதனால் மஞ்சள் துளை நாம் முகத்திற்கு பயன்படுத்தும் பொழுது முகத்தில் எந்தவித கிருமிகளின் தொற்றுகளும் ஏற்படாமல் முகம் ஆரோக்கியமாக அதே சமயம் பிரகாசமாகவும் திகழும். கரும்புள்ளிகள் மறைய வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்கு உதவக்கூடிய ஒரு பொருளாக திகழ்வதுதான் காப்பித்தூள். காபித்தூளிலும் நம்முடைய முக அழகை அதிகரிப்பதற்கும் பிரகாசமாக மாற்றுவதற்கும் இளமையான தோற்றத்தை தருவதற்கும் உதவக்கூடிய பொருட்கள் பல இருக்கின்றன.
ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு காபித்தூளை போட்டுக் கொள்ளுங்கள். அதனுடன் அரை ஸ்பூன் அளவிற்கு மஞ்சள் தூளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இது கஸ்தூரி மஞ்சளாக இருந்தால் அது இன்னும் கூடுதல் பலனையே தரும். பிறகு இதில் அரை ஸ்பூன் அளவிற்கு தேங்காய் எண்ணெய் சேர்க்க வேண்டும். பிறகு பாதி எலுமிச்சம் பழத்தை பிழிந்து இதை ஒரு நல்ல பேஸ்ட் ஆக தயார் செய்து கொள்ள வேண்டும். இப்பொழுது உங்கள் முகத்தை சுத்தம் செய்த பிறகு இதை முகத்தில் தடவ வேண்டும். தடவிய பிறகு நன்றாக உங்கள் விரல்களை வைத்தே மசாஜ் செய்து கொள்ளுங்கள்.
அரை மணி நேரம் விட்டுவிட்டு ஒரு மென்மையான துணியை வைத்து முகத்தை துடித்து எடுத்துக் கொள்ளுங்கள். டிஷ்யூ பேப்பர் இருந்தால் அதையும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதிகளவில் கரும்புள்ளிகள் இருப்பவர்கள் தினமும் இந்த முறையை பயன்படுத்தலாம். ஒரு வாரம் கழித்து வாரத்திற்கு இரண்டு முறை மட்டும் பயன்படுத்தினால் போதும். இப்படி நாம் செய்வதன் மூலம் முகத்தில் பருக்கள் ஏற்படாமல் பாதுகாக்க முடியும். பருக்களால் ஏற்பட்ட வடுக்களோ அல்லது கரும்புள்ளிகளோ நீங்கி முகம் பிரகாசமாகவும் கலங்கமற்ற முகமாகவும் திகழும்.
இதையும் படிக்கலாமே:
அனைவரின் இல்லத்திலும் இருக்க கூடிய இந்த பொருட்களை பயன்படுத்தி நம்முடைய முகத்தில் இருக்கக்கூடிய பருக்களையும், கரும்புள்ளிகளையும், வடுக்களையும் நீக்க முடியும். பிரகாசமான முகத்தை பெற முடியும் என்னும் பட்சத்தில் கடைகளில் கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.