- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilஆரோக்கியமான முடியை பெற உதவும் ஹேர் பேக்

ஆரோக்கியமான முடியை பெற உதவும் ஹேர் பேக்

- Advertisement -

பெண்களாக இருந்தாலும் ஆண்களாக இருந்தாலும் தங்களுடைய தலை முடிக்கு என்று சில பக்குவத்தை மேற்கொள்வார்கள். இது சிறுவயதிலிருந்து வயதானவர்கள் வரை இருக்கக்கூடிய ஒரு செயல்தான். அதிலும் குறிப்பாக முடி உதிர்தல் என்பது ஏற்பட்டு விட்டால் கவலை அடைந்து மேலும் முடி உதிர்வை அதிகமாகிக் கொள்ளும் நபர்கள் பலர் இருக்கிறார்கள். முடி உதிர்தல் பிரச்சனை என்பது ஏற்படுகிறது என்றால் முதலில் எதனால் ஏற்படுகிறது என்பதை ஆராய வேண்டும். பிறகு கவலைப்படுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் மன அழுத்தம் அதிகமாக இருக்கக்கூடிய நபர்களுக்கு முடி உதிர்தல் என்பதும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதே சமயம் ஆரோக்கியமான உணவுகளை உண்கிறோமா என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். இவற்றில் கவனம் செலுத்திய பிறகும் முடி உதிர்தல் என்பது இருக்கிறது என்றால் நம்முடைய முடியின் வேர்க்கால்கள் வலுவிழந்து விட்டது என்று அர்த்தம். அப்படி வலுவிழந்த முடியை வலிமையான முடியாக மாற்றுவதற்கு உதவக்கூடிய ஒரு ஹேர் பேக்கை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

ஆரோக்கியமான முடியை பெற உதவும் ஹேர் பேக்

ஒருவருடைய முடி எந்த அளவிற்கு உறுதியாக இருக்கிறதோ அந்த அளவிற்கு நீண்ட நாட்களுக்கு முடி உதிராமல் இருக்கும். மேலும் முடி உதிர்ந்த இடத்தில் புதிய முடிகள் உருவாவதற்குரிய வாய்ப்பும் உண்டாகும். அந்த அளவிற்கு ஆரோக்கியமாக நம்முடைய தலைமுடியை நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் முடியின் நுனியில் பிளவு ஏற்படுவதன் மூலம் முடியின் அடர்த்தியானது குறைய ஆரம்பிக்கும். இந்த பிரச்சனை இருப்பவர்களுக்கு முடி அடர்த்தியாகவே இருக்காது. விரைவிலேயே முடி உதிர்வும் ஏற்படும். அதோடு மட்டுமல்லாமல் வறண்ட கேசத்தை கொண்டிருப்பவர்களுக்கு அதிக அளவில் முடி உதிர்தல் என்பது ஏற்படும். இந்த பிரச்சனைகள் அனைத்தையும் சரி செய்வதற்குரிய ஒரு ஹேர் பாக்கை தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இந்த ஹேர் பேக்கை நம்முடைய முடியின் வேர்க்கால்களில் இருந்து முடியின் நுனி வரை நாம் உபயோகப்படுத்த வேண்டும் என்பதால் அவர் அவர்களின் முடியின் அளவிற்கு ஏற்றவாறு இந்த ஹேர் பேக்கின் அளவையும் தீர்மானித்து கொள்ள வேண்டும். இப்பொழுது அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒன்றரை டம்ளர் தண்ணீரை ஊற்றுங்கள். இதில் மூன்று ஸ்பூன் அளவிற்கு பச்சரிசி மாவை சேர்க்க வேண்டும். சேர்த்த உடனேயே நன்றாக கலந்து விடுங்கள். அப்பொழுது தான் அது கட்டி விழுகாமல் இருக்கும். இது நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும், இதனுடன் இரண்டு ஸ்பூன் அளவிற்கு ஆளி விதையை சேர்க்க வேண்டும்.

குறைந்த தீயில் வைத்து நன்றாக கிண்ட வேண்டும். இது வற்ற ஆரம்பிக்கும். வற்றிய பிறகு இதை ஒரு வடிகட்டியை பயன்படுத்தி வடிகட்டி ஆளி விதையை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது இதனுடன் இரண்டு ஸ்பூன் அளவிற்கு விளக்கெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் இவை மூன்றில் ஏதாவது ஒரு எண்ணையை ஊற்றி நன்றாக கலந்து கொள்ளுங்கள். இப்பொழுது இந்த ஹேர் பேக் தயாராகிவிட்டது. ஆனால் சூடாக இருக்கும்.

- Advertisement -

இது முற்றிலும் குளிர்ந்த பிறகு இதை நம்முடைய தலைமுடியின் வேர்கால்களில் இருந்து நுனி வரை ஒரு இடம் விடாமல் நன்றாக தடவ வேண்டும். பிறகு அரை மணி நேரம் அப்படியே இதை ஊற வைத்து விடுங்கள். அரை மணி நேரம் கழித்து நாம் எப்பொழுதும் போல் உபயோகப்படுத்தும் ஷாம்பு, சிகக்காயை பயன்படுத்தி நம்முடைய தலையை அலசிக் கொள்ளலாம். இப்படி வாரத்திற்கு ஒரு நாள் இந்த ஹேர் பேக்கை நாம் உபயோகப்படுத்துவதன் மூலம் பச்சரிசி மற்றும் ஆளிவிதையில் இருக்கக்கூடிய சத்துக்கள் அனைத்தும் நம்முடைய தலைமுடியை ஆரோக்கியமாகவும் பட்டு போல மிருதுவான முடியை பெறுவதற்கும் உதவும்.

இதையும் படிக்கலாமே:கலங்கமற்ற முகத்தை பெற

கண்ட கண்ட கெமிக்கல் நிறைந்த ஷாம்புகளையும் கண்டிஷனர்களையும் பயன்படுத்துவதற்கு பதிலாக இயற்கையிலேயே நமக்கு கிடைத்த பொருட்களை வைத்து இந்த முறையில் ஹேர் பேக் தயார் செய்து பயன்படுத்துவதன் மூலம் நம்முடைய தலைமுடியை வலுவாகவும் அடர்த்தியாகவும் மிருதுவாகவும் மாற்ற முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்