இந்த கலியுகத்தில் பலரும் வணங்கக்கூடிய தெய்வமாக திகழக்கூடியவர்தான் முருகப்பெருமான். அதிலும் முருகப் பெருமான் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்பவர்களுக்கு பல நன்மைகள் உண்டாகிறது என்று பலரும் கூறி கேள்விப்பட்டு இருக்கிறோம். எந்த ஒரு வேண்டுதலாக இருந்தாலும் அந்த வேண்டுதலை முருகப் பெருமானிடம் வைத்து வழிபாடு செய்பவர்களுக்கு அந்த வேண்டுதல் நிறைவேறும் என்று கூறப்படுகிறது. இதை பலரும் அனுபவரீதியாக உணர்ந்திருந்தாலும் ஒரு சிலருக்கு அந்த வேண்டுதல் நிறைவேறாமல் இருந்திருக்கும். என்ன தவறு செய்தோம் நமக்கு மட்டும் ஏன் அந்த வேண்டுதல் நிறைவேறவில்லை என்று புலம்பிக்கொண்டே இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் முருக வழிபாட்டில் எந்த தீபத்தை ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
முருகப்பெருமானுக்கு ஏற்ற வேண்டிய தீபம்
முருகப்பெருமானை வழிபாடு செய்ய வேண்டும் என்று நினைத்த உடனே வழிபாடு செய்ய இயலாது. முருகப்பெருமானுக்காக விரதம் இருக்க வேண்டும் என்று நினைத்த உடனேயே விரதம் இருக்கவும் முடியாது. முருகப் பெருமானின் ஆலயத்திற்கு செல்ல வேண்டும் என்று நினைத்தாலும் உடனே செல்ல முடியாது. முருகப் பெருமானின் அருள் இருந்தால்தான் முருகப்பெருமானை வழிபாடு செய்ய முடியும், முருகப்பெருமானின் ஆலயத்திற்கு செல்ல முடியும், முருகப்பெருமானுக்கு என்று விரதம் இருக்க முடியும். அப்படி நாம் விரதம் இருந்தும் வழிபாடு செய்தும் ஆலயத்திற்கு சென்றும் நம்முடைய வேண்டுதல் நிறைவேறவில்லை என்னும் பட்சத்தில் இந்த ஒரு தீபத்தை ஏற்றினால் போதும்.
முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமாக கார்த்திகை நட்சத்திரம் திகழ்கிறது. பலரும் கார்த்திகை நட்சத்திர தினத்தன்று முருகப்பெருமானை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள். அதே போல் முருகப்பெருமானுக்கு உகந்த திதியாக சஷ்டி திதி திகழ்கிறது. இந்த சஷ்டி திதியிலும் விரதம் இருந்து வழிபாடு செய்பவர்களும் இருக்கிறார்கள். இதைவிட அதிக அளவில் பலரும் விரதம் இருக்கக்கூடிய ஒன்றுதான் செவ்வாய்க்கிழமை விரதம். முருகப்பெருமானுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை அன்று முருகப்பெருமானை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்யும்பொழுது முருகப்பெருமானின் அருளால் நம்முடைய வேண்டுதல்கள் நிறைவேறும். மேலும் நம்முடைய ஜாதகத்தில் செவ்வாய் பகவான் எந்த அளவிற்கு மோசமாக இருந்தாலும் அவை அனைத்தும் நீங்கி நமக்கு நல்ல பலனை தருவார் என்று கூறப்படுகிறது.
அப்படிப்பட்ட செவ்வாய்க்கிழமை அன்று நாம் முருகப் பெருமானை வழிபாடு செய்யும்பொழுது இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். செவ்வாய்க்கிழமை மட்டும் தான் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். அதிலும் குறிப்பாக காலை 6:00 மணியிலிருந்து 7 மணிக்குள் தான் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். மற்ற நேரங்களில் ஏற்றக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. செவ்வாய் பகவானுக்குரிய தானியமாக திகழக்கூடியது துவரம் பருப்பு என்று நம் அனைவருக்கும் தெரியும். இந்த துவரம் பருப்பை ஒரு தட்டில் பரப்பி அதன் மேல் இரண்டு அகல் விளக்கை வைத்து நெய் ஊற்றி சிவப்பு நிறத்திரி போட்டு வடக்கு பார்த்தவாறு முருகப்பெருமானுக்கு முன்பாக இந்த தீபத்தை வைத்து ஏற்ற வேண்டும்.
பிறகு உங்களுடைய வேண்டுதல் என்னவோ அந்த வேண்டுதலை முருகப்பெருமானிடம் கூறி வழிபாடு செய்துவிட்டு விரதம் இருக்க ஆரம்பிக்க வேண்டும். இந்த முறையில் நீங்கள் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் தீபமேற்றி விரதம் இருந்து வழிபாடு செய்தீர்கள் என்றால் உங்களுடைய வேண்டுதல் முழுமையாக நிறைவேறுவதற்கு முருகப்பெருமான் அருள் புரிவார் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே:லக்ஷ்மி கடாட்சம் உண்டாக்கும் 3 விஷயங்கள்
முருகப்பெருமானை நினைத்து முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வேண்டுதலை வைப்பவர்கள் முருகப்பெருமானுக்கு இந்த தீபத்தை ஏற்றி வழிபடுவதன் மூலம் முருகப்பெருமானின் அருளையும் பரிபூரணமாக பெற முடியும் நம்முடைய வேண்டுதலும் நிறைவேறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.