- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகுபேர சம்பத்து பெற கைசிக ஏகாதசி வழிபாடு

குபேர சம்பத்து பெற கைசிக ஏகாதசி வழிபாடு

- Advertisement -

பெருமாளுக்கு உரிய திதியாக கருதப்படுவது ஏகாதசி திதி என்று நம் அனைவருக்குமே தெரியும். ஒவ்வொரு மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை தேய்பிறை ஏகாதசிக்கு ஒவ்வொரு பெயர் இருக்கிறது. அந்த பெயருக்கேற்ப சிறப்புகளும் இருக்கிறது என்றும் நம் அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை ஏகாதசியை கைசிக ஏகாதசி என்று கூறுவது உண்டு. இந்த நாளில் நாம் பெருமாள் ஆலயத்தில் எந்த பொருளை வைத்து வழிபட்டால் நமக்கு குபேர சம்பத்து உண்டாகும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

கைசிக ஏகாதசி வழிபாடு

கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை ஏகாதசி திதியை நாம் கைசிக ஏகாதசி என்று குறிப்பிடுகிறோம். இந்த நாளில் அனைத்து பெருமாள் ஆலயங்களிலும் பெருமாளுக்கு சிறப்பான பாடல்கள் பாடப்படும் என்றும் அந்த பாடல்களை கேட்டு பெருமாளை வழிபாடு செய்பவர்களுக்கு வாழ்கின்ற இந்த உலகத்திற்கு தேவையான அனைத்தும் கிடைக்கும். அதே போல் இந்த உலகத்தை விட்டு பிரிந்து மேலோகம் செல்லும் பொழுதும் அங்கு என்னென்ன தேவைப்படுகிறதோ அவை அனைத்தும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் குபேர சம்பத்து பெறுவதற்கு உகந்த ஏகாதசியாகவும் திகழ்கிறது.

- Advertisement -

புதன்கிழமை என்பது பெருமாளுக்கு உரிய நாள் என்று நம் அனைவருக்குமே தெரியும். அப்படிப்பட்ட புதன்கிழமை அன்று வளர்பிறை ஏகாதசி வருவது நம்முடைய செல்வ வளத்தை இன்னும் அதிக அளவில் வளர்க்கும் என்றே கூற வேண்டும். அன்றைய தினத்தில் காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு விரதம் இருக்க வேண்டும். ஆண்களாக இருக்கும் பட்சத்தில் கண்டிப்பான முறையில் நல்லெண்ணெய் வைத்து குளிக்க வேண்டும். காலையிலேயே அருகில் இருக்கக்கூடிய கடைக்கு சென்று ஒரு கிலோ நாட்டுச்சர்க்கரை வாங்கிக் கொண்டு அருகில் இருக்கக்கூடிய பெருமாள் கோவிலுக்கு செல்ல வேண்டும்.

இந்த நாட்டு சர்க்கரையை கருடர் முன்பாக வைத்து மனதார வழிபாடு செய்துவிட்டு பெருமாளின் பாதத்தில் வைத்து தரும்படி கேட்க வேண்டும். இப்படி வைத்துக் கொடுத்த அந்த நாட்டு சர்க்கரையில் சிறிதளவை எடுத்து பெருமாளின் ஆலயத்தில் இருக்கக்கூடிய கொடிமரத்திடம் அல்லது தல விருச்சத்தில் தூவி விட வேண்டும். பிறகு அதை வீட்டிற்கு எடுத்து வந்து பூஜையறையில் வைக்க வேண்டும். மாலை நேரத்தில் பெருமாளை வழிபாடு செய்யும்பொழுது அந்த நாட்டு சர்க்கரையை பயன்படுத்தி ஏதாவது ஒரு நெய்வேத்தியத்தை செய்து பெருமாளுக்கு வைத்து ஓம் நமோ நாராயணா என்னும் மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு மகாலட்சுமி அஷ்டகத்தை ஐந்து முறை பாராயணம் செய்ய வேண்டும். இப்படி செய்து முடித்த பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து விட வேண்டும். நெய்வேத்தியமாக வைத்த பிரசாதத்தில் இருந்து சிறிதளவு எடுத்து எறும்புகளுக்கு தானமாக கொடுத்துவிட்டு அந்த பிரசாதத்தை உண்டு விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும். மீதம் இருக்கக்கூடிய நாட்டுச் சர்க்கரையை அடுத்து வரக்கூடிய ஏகாதசி வரை வைத்திருந்து தினமும் சிறிதளவு நாம் உட்கொண்டு வருவதன் மூலம் பெருமாளின் அருள் ஆசி நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். இதன் மூலம் நமக்கு செல்வ வளமும் அதிகரிக்கும். குபேரனுக்கு நிகரான செல்வத்தை பெறுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும்.

இந்த வழிபாட்டை நாம் செய்யும்பொழுது ஒரு குறிப்பிட்ட தொகை வேண்டும் என்று பெருமானிடம் மனதார கேட்டு வழிபாடு செய்யும்பொழுது அந்த தொகை நம் கைக்கு வருவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். அதற்காக ஒரு கோடி இரண்டு கோடி என்று கேட்காமல் தற்சமயம் நமக்கு தேவைப்படக்கூடிய பணத் தேவையை கேட்டு வழிபாடு செய்வதன் மூலம் அந்த பணத்தேவை பூர்த்தியாகும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே:வராத பணம் வர செய்யும் வெந்தயம்
விரதங்களிலேயே மிகவும் சிறந்த விரதமாக திகழக்கூடிய இந்த ஏகாதசி விரத நாளன்று பெருமாள் ஆலயத்தில் இந்த ஒரு பொருளை வைத்து வழிபாடு செய்தவர்களுக்கு குபேரனுக்கு நிகரான செல்வ வளம் பெருகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்