- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஎதிர்காலம் சிறப்பாக அமைய கார்த்திகை பௌர்ணமி வழிபாடு

எதிர்காலம் சிறப்பாக அமைய கார்த்திகை பௌர்ணமி வழிபாடு

- Advertisement -

கார்த்திகை மாதம் என்பது மிகவும் சிறப்புக்குரிய மாதம் என்றும் அந்த மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு நாளும் மிகவும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது என்று நம் அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி தினத்தன்று முருகப்பெருமானை எந்த முறையில் நாம் வழிபட நம்முடைய எதிர்காலம் மட்டுமல்லாமல் நம் குடும்பத்தில் இருக்கக்கூடிய அனைவரின் எதிர்காலமும் சிறப்பாகவும் பிரகாசமாகவும் அமையும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

கார்த்திகை பௌர்ணமி வழிபாடு

சிவபெருமானுக்கும் முருகப்பெருமானுக்கும் உகந்த மாதமான இந்த கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி என்பது டிசம்பர் மாதம் 14ஆம் தேதி மாலை 4:18 க்கு ஆரம்பித்து டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி மாலை 3:13 வரை இருக்கிறது. இந்த நேரத்தில் முருகப்பெருமானை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்வதன் மூலம் பௌர்ணமி தினத்தன்று முழு நிலவு எப்படி பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் நம்முடைய எதிர்காலமும் பிரகாசமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அந்த விரதத்தை பற்றி இப்பொழுது தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

பௌர்ணமி என்பது அனைத்து தெய்வங்களுக்கும் உகந்த தினமாக கருதப்படுகிறது. அன்றைய தினத்தில் அனைத்து தெய்வ ஆலயத்திலும் சிறப்பான வழிபாடுகளும் பூஜை முறைகளும் இருக்கும். நாமும் அதே போல் வீட்டில் பௌர்ணமி தினத்தன்று சிறப்பாக வழிபாடுகளையும் மேற்கொள்வோம். எப்பொழுதும் செய்யும் வழிப்பாட்டோடு முருகப்பெருமானை இந்த பௌர்ணமி தினத்தில் வழிபாடு செய்யும்பொழுது நமக்கு பலவிதமான நன்மைகள் உண்டாகும் என்று கூறப்படுகிறது.

இந்த வழிபாட்டிற்கு கண்டிப்பாக முறையில் விரதம் இருக்க வேண்டும். பௌர்ணமி தினம் எந்த நேரத்தில் ஆரம்பிக்கிறதோ அதாவது சனிக்கிழமை மாலை நேரத்தில் ஆரம்பிக்கிறது என்னும் பட்சத்தில் அந்த நேரத்தில் இருந்து அந்த பௌர்ணமி திதி நிறைவடையும் நேரம் வரை நாம் விரதம் இருக்க வேண்டும். ராகு காலம், எமகண்டத்தை தவிர்த்து மீதம் இருக்கக்கூடிய நேரத்தில் முருகப்பெருமானுக்கு நாம் பூஜையும் வழிபாட்டையும் மேற்கொள்ளலாம்.

- Advertisement -

முருகனின் சிலை அல்லது வேல் இருக்கும் பட்சத்தில் சந்தனத்தால் அபிஷேகம் செய்ய வேண்டும். பிறகு வாசனை நிறைந்த மலர்களால் அவருக்கு அலங்காரம் செய்து கொள்ளுங்கள். அர்ச்சனைக்கும் வாசனை நிறைந்த மலர்களையே பயன்படுத்துங்கள். நெய்வேத்தியமாக பால் சாதம், இளநீர், பால் பாயாசம் போன்றவற்றை வைக்கலாம். பிறகு ஒரு தாம்பாள தட்டில் ஆறு அகல் விளக்குகளை வைத்து சுத்தமான பசு நெய் ஊற்றி திரி போட்டு வடக்கு பார்த்தவாறு தீபம் ஏற்ற வேண்டும்.

தீபம் ஏற்றி முடித்த பிறகு அந்த தீப சுடரொளியை பார்த்தவாறு ஓம் சரவணபவாய நமஹ என்னும் மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். அவ்வாறு உச்சரிக்கும் பொழுது மலர்களால் அர்ச்சனை செய்து கொள்ளலாம். அர்ச்சனை அனைத்தும் நிறைவடைந்த பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ள வேண்டும். நீங்கள் எப்பொழுது வழிபாட்டை செய்தாலும் பௌர்ணமி திதி நிறைவடைந்த பிறகு தான் உங்களுடைய விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே:உயர் பதவி கிடைக்க குரு வழிபாடு

தங்களுடைய எதிர்காலம் எப்படி இருந்தாலும் பரவாயில்லை தங்களுடைய பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்றுதான் ஒவ்வொரு பெற்றோர்களும் நினைப்பார்கள். அந்த வகையில் பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவாவது கார்த்திகை பௌர்ணமி தினத்தன்று முருகப்பெருமானை நினைத்து இந்த முறையில் விரதம் இருந்து வழிபாடு செய்யலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்