- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஆசைகள் நிறைவேற நினைத்தது நடக்க கார்த்திகை பௌர்ணமி வழிபாடு

ஆசைகள் நிறைவேற நினைத்தது நடக்க கார்த்திகை பௌர்ணமி வழிபாடு

- Advertisement -

ஒவ்வொரு தமிழ் மாதமும் சிறப்பு மிகுந்த மாதமாகவே திகழ்கிறது. அப்படிப்பட்ட ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய பௌர்ணமிக்கு என்று தனி சிறப்புகள் இருந்து கொண்டு தான் இருக்கின்றன. அந்த வகையில் கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமிக்கும் தனி சிறப்புகள் இருக்கிறது. மேலும் இதில் கூடுதலான சிறப்பு என்னவென்றால் ரோகிணி நட்சத்திரம் வரக்கூடிய நாளில் தான் இந்த கார்த்திகை பௌர்ணமி என்பது தொடங்குகிறது. அதுவும் சனிக்கிழமையில் வருகிறது என்பது பல மடங்கு நன்மைகளை தரக்கூடியதாக திகழ்கிறது. அப்படிப்பட்ட நாளில் எந்த தெய்வத்தை எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

கார்த்திகை பௌர்ணமி வழிபாடு

பௌர்ணமி என்றாலே அன்றைய நாளில் சந்திரனின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் என்று கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படிப்பட்ட சந்திரனுக்கு மிகவும் பிடித்தமான நட்சத்திரமாக திகழ்வதுதான் ரோகினி நட்சத்திரம். ரோகினி நட்சத்திரத்தில் வரக்கூடிய பௌர்ணமிக்கு அதிக அளவில் பலன் இருக்கிறது என்றே கூற வேண்டும். மேலும் அது சனிக்கிழமையில் வருவது என்பது கூடுதல் விசேஷத்தை தருகிறது. அப்படிப்பட்ட நாளில் நாம் காவல் தெய்வத்தை வழிபாடு செய்வதன் மூலம் நமக்கு பலவிதமான நன்மைகள் உண்டாகும் என்றே கூறப்படுகிறது. அந்த வழிபாட்டை பற்றி இப்பொழுது பார்ப்போம்.

- Advertisement -

ரோகினி நட்சத்திரத்திற்கு உரிய கிரகமாக திகழக்கூடியது ராகு என்பதால் ராகுவால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கி சிறப்புடன் வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் காவல் தெய்வத்தை வழிபட வேண்டும் என்று கூறப்படுகிறது. மேலும் அன்றைய தினம் சனிக்கிழமை. சனி பகவானுக்குரிய உலோகமாக திகழ்வது இரும்பு. காவல் தெய்வங்களின் கையிலும் இரும்பால் செய்யப்பட்ட ஆயுதங்கள் என்பது இருக்கும். அதனால் சனிக்கிழமை அன்று பௌர்ணமி தொடங்கிய பிறகு நாம் இருக்கக்கூடிய இடத்தின் காவல் தெய்வ ஆலயத்திற்கு சென்று பால் பொங்கல் வைத்து வழிபாடு செய்ய வேண்டும். காவல் தெய்வத்திற்கு சுருட்டு, சாராயம் போன்ற படையல் ஏதாவது வைக்கும் வழக்கம் இருக்கும் பட்சத்தில் அதையும் வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

இப்படி வழிபாடு செய்வதன் மூலம் நாம் நம்முடைய வாழ்க்கையில் எந்தவித நாட்டமும் இல்லாமல் இருந்தாலும் அந்த வாழ்க்கையில் ஒருவித பிடிப்பை ஏற்படுத்துவதற்கு இது உதவும். நம்முடைய ஆசைகள் நிறைவேறும். நினைத்தது நடக்கும். மனநோய் சரியாகும். உடல் வலி நீங்கும். நீண்ட நாட்களாக மருந்து மாத்திரை சாப்பிட்டும் எந்த பலனும் இல்லை என்பவர்கள் இந்த வழிபாட்டை செய்யும்பொழுது அந்த மருத்துவத்தின் பலன் என்பது கிடைக்கும்.

- Advertisement -

மேலும் செல்வநிலை உயர்வதற்கும் இது வழிவகை செய்யும். கண் திருஷ்டி, தொழில் முடக்கம் போன்ற பிரச்சனைகள் தீர்க்கவும் இது வழிகாட்டும். மேலும் கணவன் மனைவிக்கிடையே எப்பேற்பட்ட மன கசப்பு இருந்து பிரிந்து வாழும் சூழ்நிலையில் இருந்தாலும் விவாகரத்து செய்யும் நிலையில் இருந்தாலும் இந்த முறையில் பெண்கள் காவல் தெய்வத்திற்கு பொங்கல் இட்டு வழிபாடு செய்ய அவர்களுடைய கணவன் அவர்கள் வசம் வந்து இருவரும் ஒற்றுமையுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்வார்கள்.

இதையும் படிக்கலாமே:எதிர்காலம் சிறப்பாக அமைய கார்த்திகை பௌர்ணமி வழிபாடு

இவ்வளவு சிறப்பு மிகுந்த கார்த்திகை மாத பௌர்ணமி தினத்தன்று இந்த முறையில் காவல் தெய்வத்தை வழிபாடு செய்பவர்களுக்கு மேல் சொன்ன அனைத்து நன்மைகளும் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்