- Advertisement -

பாஞ்சராத்திர தீபம் 2024

- Advertisement -

கார்த்திகை தீபம் சிவபெருமானுக்கு எந்த அளவுக்கு மிக மிக முக்கியமான வழிபாடோ, அதே போல, இந்த பாஞ்சராத்திர தீபம் என்பது விஷ்ணு பகவானுக்கு, வைணவர்களுக்கு சிறப்பு வாய்ந்த வழிபாடாக சொல்லப்பட்டுள்ளது. காக்கும் கடவுளான விஷ்ணு ஜோதி ரூபமாக காட்சியளித்த நாளைத்தான் இந்த பாஞ்சராதர தீபத்திருநாளாக கொண்டாடி வருகின்றோம்.

இந்த பஞ்சராத்திர தீபம் என்று நாளைய தினம் வரவிருக்கிறது, இந்த நாளில் நம் வீட்டு பூஜை அறையில் விஷ்ணு பகவானை எப்படி வழிபாடு செய்தால், குடும்ப கஷ்டங்கள் தீரும் என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவலை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

பாஞ்சராத்திர தீபம்

15-12-2024 பௌர்ணமி திதியும் ஞாயிற்றுக்கிழமையும் சேர்ந்து வரக்கூடிய நாளில் தான் இந்த பாஞ்சராத்திர தீபத்திருநாள் வந்திருக்கிறது. நாளை மாலை இந்த தீபத்தை உங்கள் வீட்டு பூஜை அறையில் ஏற்றினால், அடுத்த வருடம் முழுவதும் பணக்கஷ்டம் இல்லாமல் வாழலாம், மன கஷ்டம் இல்லாமல், பொருளாதார ரீதியாக, ஆரோக்கிய ரீதியாக உயர்ந்த நிலையில் நீங்கள் வாழ வேண்டும் என்று நினைத்தால், இந்த தீபத்தை நாளை மாலை உங்கள் வீட்டில் ஏற்றி, பின் சொல்லக் கூடிய முறையில் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

சில பேர் பரணி அன்றே தீபம் ஏற்றி இருந்தால், பரணி துவங்கி மூன்று நாட்கள் மட்டும்தான் தீப வழிபாட்டை வீட்டில் மேற்கொள்ளுவார்கள். ஆனால் இந்த வருடம் நான்காவது நாள் விஷ்ணு பகவானுக்கு உகந்த இந்த பாஞ்சராத்திர தீபம் வந்திருக்கிறது. ஆகவே நாலாவது நாள் தவறாமல் இந்த தீபத்தை அனைவரும் வீட்டில் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

வீட்டில் இருக்கும் விஷ்ணு பகவானின் திரு உருவப்படத்திற்கு துளசி இலைகளால், வாசனை நிறைந்த பூக்களால் அலங்காரம் செய்து விடுங்கள். விஷ்ணுவின் முன்பு ஒரு தாம்பூல தட்டில் ஐந்து மண் அகல் விளக்குகளை வட்ட வடிவில் வைத்து நெய் ஊற்றி, பஞ்சுதிரி போட்டு தீபம் ஏற்றி வைப்பது ரொம்ப ரொம்ப நல்லது. நெய் எங்களால் வாங்கவே முடியாது, அவ்வளவு பணம் செலவு செய்ய முடியாது என்பவர்கள் மட்டும் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள்.

விஷ்ணு பகவானுக்கு பிடித்த நெய்வேத்தியம் என்றால், அது அக்காரவடிசல். நாளைய தினம் அக்காரவடிசல் செய்து நெய்வேதியும் வைப்பது ரொம்ப ரொம்ப சிறப்பு. அதுவும் உங்களால் செய்ய முடியாது என்றால் உங்களுக்கு தெரிந்த இனிப்பு வகை நெய்வேத்தியத்தை விஷ்ணு பகவானுக்கு செய்து வைத்து மனம் உருகி பிரார்த்தனை செய்தால் உங்கள் உங்கள் வேண்டுதல் சீக்கிரம் படிக்கும்.

- Advertisement -

நாளைய தினம் வீடு முழுவதும் விளக்கேற்றி அலங்கரிக்க முடியவில்லை என்று சொல்பவர்கள், பூஜையறையில் இந்த ஐந்து விளக்கை மட்டுமாவது விஷ்ணு பகவானை நினைத்து ஏற்றுங்கள். விளக்கு ஏற்றும் போது நாராயணா நாராயணா! கோவிந்தா கோவிந்தா! என்ற நாமத்தை வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் சேர்ந்து சொல்லுங்கள். வீட்டில் சுபிட்சம் நிலைத்து நிற்கும்.

இதையும் படிக்கலாமே: 14-12-2024 பூஜை அறையில் ஏற்ற வேண்டிய தீபம்

நாளை ஒரு முறையாவது வீட்டில் விஷ்ணு சகஸ்ர நாமத்தை சத்தத்தோடு ஒலிக்க விடுங்கள். டிவியில் போட்டாலும் சரி, கைபேசியில் போட்டு விட்டாலும் சரி, அது உங்களுடைய விருப்பம். நாளைய தினம் விஷ்ணு சகஸ்ரநாமம் கேட்பது, படிப்பது கோடி புண்ணியம். நாளைய தினம் இந்த வழிபாட்டை அனைவரும் தவறாமல் செய்ய அந்த விஷ்ணு பகவான் தான் ஒரு வழி காட்ட வேண்டும் ஏற்ற வேண்டும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்