இன்றைய கால சூழ்நிலையில் ஒரு குழந்தைக்கு நல்ல படிப்பு தான் பெரிய சொத்து. நீங்கள் பணம் காசை, உங்கள் குழந்தைகளுக்கு சேர்த்து கொடுக்கிறீர்களோ இல்லையோ, நல்ல படிப்பையும், இந்த உலகத்தில் எப்படி வாழ வேண்டும் என்ற அனுபவ அறிவையும் கற்றுக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் எதிர்காலம் நன்றாக இருக்கும்.
இன்றைய சூழ்நிலையிலேயே, இந்த பூமியில் நாம் வாழ்வதற்கு கஷ்டப்படுகின்றோம். இன்னும் 10 வருடங்கள் கழித்து, 20 வருடங்கள் கழித்து இந்த பூமி எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. இப்படிபட்ட சூழ்நிலையில், நம்முடைய பிள்ளைகள் வாழ, அவர்களுக்கு கல்வி அறிவு மிக மிக முக்கியம்.
பிள்ளைகள் நன்றாக படிக்க வழிபாடு
எல்லா பிள்ளைகளும் கல்வியில் ஆர்வம் காட்டி நன்றாக படிப்பார்கள் என்று சொல்ல முடியாது. ஒரு பிள்ளைகளுக்கு கல்வியில் ஆர்வம் இருக்கும். ஒரு சில பிள்ளைகளுக்கு படிப்பு என்பது எட்டாக்கடியாக இருக்கும். உங்களுடைய பிள்ளைகளும் கல்வியில் ஆர்வம் காட்டாமல் நேரத்தை வீணடிக்கிறார்களா. எவ்வளவு தான் படித்தாலும் அவர்களுக்கு படிப்பு மண்டையில் ஏறவில்லையா. வகுப்பில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களை கூட, முதல் நிலை மாணவர்களாக மாற்றக்கூடிய சக்தி இந்த விநாயகர் வழிபாட்டிற்கு உண்டு.
குழந்தைகள் நன்றாக படிக்க புதன்கிழமை காலை 7:30 மணியிலிருந்து 9:00 மணிக்குள் வீட்டு பக்கத்தில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு செல்ல வேண்டும். 5 மண் அகல் விளக்குகளில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, தீபம் ஏற்றி விட வேண்டும். விநாயகருக்கு அருகம்புல் வாங்கி கொடுத்து, மூன்று தோப்பு கரணம் போட்டு, பிள்ளையாரை 3 முறை வலம் வந்து நன்றாக படிக்க வேண்டும் என்று பிரார்த்தனை வைத்தால், படிக்காத பிள்ளைகளுக்கு கூட படிப்பில் ஆர்வம் வரும்.
படிப்பில் பின்தங்கி இருக்கும் பிள்ளைகள், நம்பர் ஒன் இடத்திற்கு வர, நிறையவே வாய்ப்புகள் உள்ளது. நினைவாற்றல் இல்லாமல், படித்ததை எல்லாம் மறந்து போகும் பிள்ளைகளை இந்த வழிபாட்டை செய்யச் சொல்லுங்கள். நிச்சயம் அவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். அறிவுத்திறனும் அதிகரிக்கும்.
எத்தனை புதன்கிழமை இப்படி செய்வது. உங்களால் எப்போதெல்லாம் முடிகிறதோ, அப்போதெல்லாம் உங்கள் பிள்ளைகளை அழைத்துச் சென்று, கோவிலில் இந்த விளக்கை ஏற்றச் சொல்லுங்கள். விநாயகரை வழிபடச் செய்யச் சொல்லுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.
இதையும் படிக்கலாமே: மார்கழி முதல் நாள் ஏற்ற வேண்டிய தீபம்
ரொம்பவும் சிறு பிள்ளைகளாக இருந்தால், குழந்தைகளுக்கு பதில், தாய் தந்தையர் இந்த விளக்கை ஏற்றலாம் தவறு கிடையாது. நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த பரிகாரம் நிச்சயம் நல்ல பலனை தரும் என்ற தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.