- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஐஸ்வர்யம் பெருக மார்கழி மாதத்தில் சொல்ல வேண்டிய வார்த்தை

ஐஸ்வர்யம் பெருக மார்கழி மாதத்தில் சொல்ல வேண்டிய வார்த்தை

- Advertisement -

மாதங்களிலேயே மிகவும் சிறப்பு பெற்ற மாதமாக திகழக்கூடிய மாதம் தான் மார்கழி மாதம். தெய்வங்களின் வழிபாட்டிற்கு உரிய மாதமாகவும் இந்த மாதம் திகழ்கிறது. அப்படிப்பட்ட இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கும், நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெற்று நமக்கு ஐஸ்வரியமும் 16 வகையான செல்வங்களும் பெருகுவதற்கும் தினமும் சொல்ல வேண்டிய வார்த்தைகளை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஐஸ்வர்யம் பெருக மார்கழி மாதத்தில் சொல்ல வேண்டிய வார்த்தை

பொதுவாக மார்கழி மாதத்தில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து வீட்டு வாசலில் கோலம் இட்டு தீபம் ஏற்ற வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். இதற்கு அவர்கள் ஆன்மீக ரீதியாக பல காரணங்களை கூறினாலும் அறிவியல் ரீதியாகவும் மார்கழி மாதத்தில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுவது என்பது உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த இந்த மார்கழி மாதம் நமக்கு மேலும் சிறப்பு மிகுந்த ஐஸ்வர்யத்தை பெருக்கக்கூடிய மாதமாக திகழ்வதற்கு சொல்ல வேண்டிய சொற்களைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

நாம் பேசக்கூடிய ஒவ்வொரு சொற்களிலும் நேர்மறை ஆற்றல்களும் எதிர்மறை ஆற்றல்களும் இருக்கின்றது என்றும், நேர்மறையாக நாம் பேசும்பொழுது நமக்கு நேர்மறையான காரியங்கள் நடைபெறும் என்றும், எதிர்மறையாக பேசினால் நமக்கு எதிர்மறையான காரியங்கள் நடைபெறும் என்றும் கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். மேலும் நம்மை சுற்றி தேவதைகள் உலவுவார்கள் என்றும் அந்த தேவதைகள் நமக்கு சதாப்து என்று கூறும் பொழுது நாம் எந்த வார்த்தை உபயோகப்படுத்தினோமோ அது நமக்கு அப்படியே நடந்து விடும் என்றும் கூறி கேள்விப்பட்டு இருக்கிறோம்.

நல்ல எண்ணங்களை நினைத்து நல்லனவற்றியே பேசுபவர்களுக்கு நல்லதே நடக்கும் என்றும் கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த வகையில் மார்கழி மாதத்தில் தினமும் காலையிலும் இரவு படுக்கச் செல்வதற்கு முன்பும் ஒரு சில வார்த்தைகளை நாம் கூறும்பொழுது அந்த வார்த்தைகளின் பலனால் நமக்கு ஐஸ்வரியம் பெருகும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இதற்கு நாம் காலையில் எழுந்ததும் குளிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. பல் துலக்கிய பிறகு ஒரு டம்ளரில் தண்ணீரை வைத்து இந்த வார்த்தைகளை நாம் உச்சரிக்கலாம். அதேபோல் இரவு படுக்கச் செல்வதற்கு முன்பும் ஒரு டம்ளர் தண்ணீரை வைத்து இந்த வார்த்தைகளை நாம் உச்சரிக்க வேண்டும். தண்ணீரை நாம் அந்த வார்த்தைகளை உச்சரித்த பிறகு குடித்துவிட வேண்டும்.

காலையில் எழுந்ததும் நம் கூற வேண்டிய வார்த்தை

“தனம் அகம் பிரப்பியாமி”

- Advertisement -

இதற்கு நான் அனைத்து வளங்களையும் செல்வங்களையும் ஈர்க்கிறேன் என்று பொருள்படும்.

இரவு கூற வேண்டிய வார்த்தை

“ஆண்டாளின் அன்பு என்னை சூழ்ந்து என் செல்வத்தையும் ஆசிர்வாதங்களையும் தினமும் பெருகுகிறது “

இதையும் படிக்கலாமே:குழந்தைகள் நன்றாக படிக்க விநாயகர் பரிகாரம்

முழுமனதோடு இந்த வார்த்தைகளை மார்கழி மாதத்தில் தினமும் காலையிலும் இரவு படுக்கச் செல்வதற்கு முன்பும் கூறிவிட்டு அந்த டம்ளரில் இருக்கக்கூடிய தண்ணீரை அருந்துவதன் மூலம் நமக்கு நேர்மறையான ஆற்றல்கள் அதிகரித்த ஐஸ்வரியம் பெருக ஆரம்பிக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்

சற்று முன்