- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதானம் செய்யும் பொழுது மறக்க கூடாதது

தானம் செய்யும் பொழுது மறக்க கூடாதது

- Advertisement -

பெற்றோர்களுடைய சொத்தில் குழந்தைகளுக்கு பங்கு இருப்பது போல, அவர்கள் செய்யும் பாவங்களிலும் குழந்தைகளுக்கு பங்கு இருக்கும். குழந்தைகளின் ஒரு குறிப்பிட்ட வயது வரை புண்ணிய கணக்கு அவர்களுடைய பெற்றோர்களிடம் தான் இருக்கும் என்பது சாஸ்திரங்கள் கூறும் மெய்யாகும். தான, தர்மங்கள் செய்யும் பொழுது இந்த விஷயத்தை தவறாமல் செய்வதன் மூலம், குழந்தைகளுக்கு புண்ணியம் சேரும் என்பது நம்பிக்கை. அதைப் பற்றிய தகவல்களை இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் அறிவோம் வாருங்கள்.

தானம், தர்மம், நன்கொடைகள் போன்றவற்றை செய்யும் பொழுது இதையும் கொஞ்சம் மனதில் வைத்து இனி செயலாற்றுங்கள். கோவில்களுக்கு அரிசி, பருப்பு போன்றவற்றை மூட்டையாக தானம் செய்பவர்கள், பணமாகவோ, காசோலையாகவோ நன்கொடை கொடுப்பவர்கள், நவீன காலத்தில் மணி டிரான்ஸ்பர், மொபைல் டிரான்ஸ்பர் போன்றவற்றை செய்பவர்கள் உங்களுடைய பிள்ளைகளின் பெயரில் செய்யுங்கள்.

- Advertisement -

குறிப்பிட்ட வயது அடையும் வரை பெற்றோர்கள் செய்யும் பாவங்கள் பிள்ளைகளுக்கு வருவதில்லை. ஆனால் பெற்றோர்கள் செய்யும் புண்ணியங்கள் பிள்ளைக்கு அப்படியே சென்றடைகிறது. எனவே நீங்கள் செய்யக்கூடிய தான, தர்மங்கள் குறிப்பாக கோவிலுக்கு செய்யக்கூடிய நன்கொடைகள் போன்றவற்றை உங்களுடைய பிள்ளைகளின் பெயரில் செய்யுங்கள். எப்பொழுதும் கோவிலுக்கு செய்யும் தர்ம காரியங்களுக்கு ரசீது போட்டுக் கொடுப்பார்கள். நோட்டு புத்தகங்களில் எழுதியும் வைப்பார்கள். இது போன்ற விஷயங்களில் நம்முடைய குழந்தைகளின் பெயரில் செய்யும் பொழுது அவர்களுக்கு அந்த புண்ணிய பலன்கள் முழுமையாக சென்றடையும்.

குறிப்பிட்ட வயதை தாண்டியதும், அவர்கள் நல்வழியில் செல்லவும், ஆபத்து கட்டத்தில் இருக்கும் பொழுது உதவிக்கரம் நீட்டவும் இது போன்ற புண்ணிய காரியங்கள் உதவியாக இருக்கும். நாம் இல்லாவிட்டாலும், நம் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்க இந்த புண்ணிய காரியம் அவர்களுக்கு துணையாக காத்து நிற்கும் என்பது நியதி. தவறான வழியில் செல்லும் குழந்தைகள், குடிப்பழக்கத்திற்கு அடிமையாகும் குழந்தைகள், எது சரி எது தவறு என்று தெரியாமல் பாவ செயல்களில் ஈடுபடுபவர்கள் போன்றோர்களை ஏதோ ஒரு தெய்வீக சக்தி ஏதாவது ஒரு ரூபத்தில் வந்து அவர்களை காப்பாற்றுவதை பார்த்திருப்போம்.

- Advertisement -

கடவுள் நேரடியாக யாருக்கும் வந்து உதவி செய்வது கிடையாது. மனித ரூபத்திலும், மற்ற விதத்திலும் தான் திடீரென எதிர்பாராத நேரத்தில் நம்மை காப்பாற்ற வருகிறார்கள். பெற்றோர்கள் செய்த இந்த புண்ணிய காரியங்கள், பிள்ளைகளின் பெயரில் இருக்கும் பொழுது அந்த பலன் பிள்ளைகளை சேருகிறது. எனவே ஆபத்தான இக்கட்டான சூழ்நிலையில் அவர்கள் தவிக்கும் பொழுது நாம் இல்லாவிட்டாலும் நாம் செய்த புண்ணியம் நம் குழந்தைகளை பல ரூபங்களில் வந்து நம்மை விட பன்மடங்கு பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும்.

இதையும் படிக்கலாமே:
துஷ்ட கிரகங்கள் விலக ஹனுமன் மந்திரம்

இந்த ஒரு விஷயத்தை அறிந்தவர்கள், எந்த ஒரு தான தர்மத்தையும் இனி அவர்களுடைய பிள்ளைகளின் பெயரில் தான் செய்வார்கள். காசு, பணம் சேர்க்க முடியாவிட்டாலும், பெற்றோர்களுடைய கடமை ஒரு குழந்தையை நன்கு படிக்க வைப்பதும், புண்ணியத்தை சேர்ப்பதும் மட்டுமே ஆகும். புண்ணியத்தை சேர்காவிட்டாலும் பரவாயில்லை, பாவங்களை மூட்டை மூட்டையாக சேர்த்து வைத்து விட்டு செல்லாதீர்கள். வருங்காலம் சிறப்பாக இருக்க பெற்றோர்களின் செயல்களும் முக்கியம்.

சற்று முன்