- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகோடீஸ்வர யோகம் தரும் அக்ரத சங்கடஹர சதுர்த்தி

கோடீஸ்வர யோகம் தரும் அக்ரத சங்கடஹர சதுர்த்தி

- Advertisement -

மார்கழி மாதம் பெருமாளுக்கு உரிய மாதம் என்று பலருக்கும் தெரியும். என்னதான் பெருமாளுக்கு உரிய சிறப்பு மிகுந்த மாதமாக மார்கழி மாதம் திகழ்ந்தாலும், அந்த மார்கழி மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு திதியும் அந்தந்த தெய்வங்களுக்கு மிகவும் சிறப்பு மிகுந்ததாகவே கருதப்படுகிறது. அந்த வகையில் மார்கழி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை சதுர்த்தியான சங்கடஹர சதுர்த்தியை நாம் அக்ரத சங்கடஹர சதுர்த்தி என்று கூறுகிறோம். அப்படிப்பட்ட நாளில் விநாயகர் பெருமாளை எந்த முறையில் வழிபாடு செய்தால் கோடீஸ்வர யோகம் உண்டாகும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

கோடீஸ்வர யோகம் தரும் அக்ரத சங்கடஹர சதுர்த்தி

ஒவ்வொரு மாதத்திலும் தேய்பிறையில் வரக்கூடிய சதுர்த்தியை நாம் சங்கடஹர சதுர்த்தி என்று கூறுவோம். ஒவ்வொரு மாதத்தில் வரக்கூடிய இந்த சங்கட ஹர சதுர்த்திக்கு ஒவ்வொரு விதமான பலன்கள் இருக்கிறது. அந்த பலன்கள் அனைத்தையும் பெறவேண்டும் என்று நினைப்பவர்கள் அந்த மாதத்தில் வரக்கூடிய சங்கட ஹர சதுர்த்தி நாளன்று விநாயகப் பெருமானுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டும் என்று நம் அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் சிறப்பு மிகுந்த மார்கழி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை சதுர்த்தியான சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகப் பெருமானை வழிபாடு செய்யும் முறையை பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

சங்கடஹர சதுர்த்தி என்பது டிசம்பர் மாதம் 18ஆம் தேதி மதியம் 12:55 க்கு ஆரம்பிக்கிறது. அன்றைய தினத்தில் மாலை நேரத்தில் வீட்டில் இருக்கக்கூடிய விநாயகர் சிலைக்கு தங்களால் இயன்ற அளவு அபிஷேக ஆராதனைகளை செய்ய வேண்டும். பிறகு அருகம்புல்லை விநாயகப் பெருமானுக்கு வைத்துவிட்டு அவருக்கு முன்பாக மூன்று அல்லது ஐந்து என்று எண்ணிக்கையில் தீபமேற்றி கிழக்கு பார்த்தவாறு வைக்க வேண்டும்.

பிறகு அவருக்கு ஏதாவது ஒரு இனிப்பு பொருள், பால், தேன் போன்ற பொருட்களை நெய்வேத்தியமாக வைத்து “ஓம் மஹா கணபதியே ஸ்வாகா” என்னும் மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். இவ்வாறு உச்சரித்து வழிபாட்டை நிறைவு செய்த பிறகு நெய்வேத்தியமாக வைத்த பிரசாதத்தை உண்டு தங்களுடைய விரதத்தை நிறைவு செய்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

இப்படி ஒரு வேளை வீட்டில் பூஜை செய்ய இயலவில்லை என்று நினைப்பவர்கள் அன்றைய தினம் மாலை நேரத்தில் அருகில் இருக்கக்கூடிய விநாயகர் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அப்படி செல்லும் பொழுது விநாயகப் பெருமானுக்கு வாசனை நிறைந்த மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையை வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும்.

பொதுவாக விநாயகர் பெருமானுக்கு அருகம்புல்லை தான் வாங்கி கொடுக்க வேண்டும் என்று கூறுவது வழக்கம். ஆனால் இந்த சங்கடஹர சதுர்த்தி நாளில் வாசனை நிறைந்த மலர்களை வாங்கிக் கொண்டு போய் விநாயகப் பெருமானுக்கு கொடுத்து வழிபாடு செய்து விட்டு அவருக்கு ஏற்கனவே சாற்றி இருந்த அருகம்புல்லை அர்ச்சகரிடம் கேட்டு வாங்கி வீட்டிற்கு கொண்டு வர வேண்டும். இப்படி வீட்டிற்கு கொண்டு வந்த இந்த அருகம்புல்லை நாம் பணம் வைக்கும் இடத்தில் வைப்பதன் மூலம் விநாயகப் பெருமானின் அருளால் நமக்கு கோடீஸ்வர யோகம் உண்டாகும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே:பணக்கஷ்டம் தீர வழிபாடு

வீட்டில் செய்யக்கூடிய வழிபாடாக இருந்தாலும் சரி, கோவிலுக்கு சென்று செய்யக்கூடிய வழிபாடாக இருந்தாலும் சரி முழுமனதுடன் விநாயகர் பெருமானை சரணாகதி அடைந்து செய்யக்கூடிய வழிபாட்டிற்கு முழு பலன் கிடைக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு முழு மனதுடன் விநாயகப் பெருமானை வழிபட்டு கோடீஸ்வர யோகத்தை பெறலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்