- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalமார்கழி மாதம் சொல்ல வேண்டிய பணம் தரும் மந்திரம்

மார்கழி மாதம் சொல்ல வேண்டிய பணம் தரும் மந்திரம்

- Advertisement -

மற்ற மாதங்களோடு ஒப்பிட்டு பார்க்கும்போது, இந்த மார்கழி மாதத்திற்கு என்று ஒரு தனித்துவம் இருக்கிறது. மார்கழி மாதம் தேவர்களுக்கு பிரம்ம முகூர்த்த வேலையாக சொல்லப்பட்டுள்ளது. இந்த மார்கழியில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் இறைவனிடம் என்ன வேண்டுதல் கேட்டாலும் அது உடனே கிடைக்கும் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம். தான். அந்த வகையில் பண பிரச்சனைக்கு தீர்வு காண ஒரு பரிகாரத்தை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

பணப்பிரச்சனை தீர்க்கும் மந்திரம்

நீங்கள் யாரிடமாவது பணத்தை கொடுத்து ஏமாந்திருக்கலாம். கடனாக கொடுத்த பணம் திரும்பும் வராமல் இருக்கலாம். சில பேர் சொந்த பந்தத்திற்காக அவசரத்திற்கு பணம் கொடுத்து, உதவி செய்திருப்பார்கள். ஆனால் அந்த பணத்தை திரும்பவும் கேட்டு வாங்க முடியாத சூழ்நிலை இருக்கும். சொந்த பந்தங்களே நம்முடைய நிலைமையை புரிந்து கொண்டு, வாங்கிய பணத்தை சரியான நேரத்திற்கு திரும்ப கொடுக்கவும் மாட்டார்கள்.

- Advertisement -

அந்த பணத்தை திருப்பி கேட்கவும் முடியாமல், நம்முடைய கஷ்டத்தை பொறுத்துக் கொள்ளவும் முடியாமல் பெரும்பாடு படுவோம். இப்படிப்பட்ட சூழ்நிலை நிறைய பேருக்கு இருக்கிறது. உங்களுக்கும் இப்படிப்பட்ட பண பிரச்சனை இருந்தால், வரவேண்டிய பணம் உங்கள் கையை வந்து சேர வேண்டும் என்றால், மார்கழி மாதத்தில் ஒரு 11 நாள் தொடர்ந்து வெறும் வயிற்றில் இந்த மந்திரத்தை சொல்லி பாருங்கள். வராத பணம் கூட உங்கள் வீடு தேடி வரும்.

நீங்கள் சுத்த பத்தமாக இருக்கிறீர்கள் என்றால், மார்கழியில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளிக்க கூட தேவையில்லை. அதிகாலை  எழுந்து பல் தேய்த்து முகம் கை கால்களை மட்டும் கழுவிக்கொண்டு, பெண்களாக இருந்தால் நெற்றியில் போட்டு, கொஞ்சம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். ஆண்களாக இருந்தால் கொஞ்சம் விபூதி வைத்துக்கொண்டு, வரவேற்பு அறையில் கூட அமர்ந்து கொள்ளலாம். பூஜை அறைக்கு  செல்ல வேண்டும் என்று அவசியம் இல்லை.

- Advertisement -

முடிந்தால் வரவேற்பறையிலேயே ஒரு மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். தீபம் ஏற்ற முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. தவறு கிடையாது. கிழக்கு பார்த்த வாரு அமர்ந்து உங்கள் முதுகு தண்டுவடம் நேராக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். தரையில் ஒரு விரிப்பு விரித்து அமர்ந்து கொள்ளுங்கள்.

உங்கள் முன்பாக ஒரு டம்ளரில் சுத்தமான தண்ணீர் வைத்துக் கொள்ளவும். பிறகு கண்களை மூடி உங்களுக்கு வரவேண்டிய பணம் எவ்வளவு, யார் உங்களுக்கு பணம் தர வேண்டும், அந்த பணம் சீக்கிரம் வரவேண்டும் என்று பிரார்த்தனை வைக்க வேண்டும்.

- Advertisement -

யாரிடம் பணம் கொடுத்திருக்கிறீர்களோ, எவ்வளவு தொகை கொடுத்திருக்கிறீர்களோ, அந்த நபரின் பெயர் அந்த தொகையை சொல்லியே வேண்டுதல் வைக்கலாம். பிறகு 27 முறை ‘ஏராளம் தனம் தானியம் தாராளம்’ இந்த மந்திரத்தை சொல்லுங்கள். இந்த பிரார்த்தனை வைக்கும் போதும் இந்த மந்திரத்தை சொல்லும்போதும், உங்கள் முன்பாக டம்ளர் தண்ணீர் இருக்க வேண்டும். நீங்கள் சொன்னதை எல்லாம் அந்த டம்ளர் தண்ணீர் தன்னகத்தே ஈர்த்துக் கொள்ளும். பிரார்த்தனையை செய்து முடித்துவிட்டு இந்த டம்ளர் தண்ணீரை நீங்கள் குடித்து விட வேண்டும். இவ்வளவுதான் பரிகாரம்.

அதற்கு பிறகு காபி டீ எதுவும் வேண்டும் என்றாலும் நீங்கள் குடிக்கலாம் தவறு கிடையாது. வெறும் வயிற்றில் மந்திரத்தை சொல்லி சுத்தமான 1 டம்ளர் தண்ணீரை குடித்த பிறகு உங்களுடைய வேலையை வழக்கம் போல செய்யலாம். ஆனால் மார்கழி மாதம் பிரம்ம முகூர்த்த நேரத்தில் 4:00 மணியிலிருந்து 4:30 மணிக்குள் இந்த வேண்டுதலை முடித்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: மார்கழி வெள்ளி வாசலில் தெளிக்க வேண்டிய தண்ணீர்

இதுபோல வழிபாட்டை மார்கழி மாதம் முழுவதும் செய்ய முடியும் என்றாலும் செய்யலாம், முடியாதவர்கள் 11 நாள் மட்டும் செய்தாலும் கூட கூடிய சீக்கிரத்தில் நீங்கள் எதிர்பார்த்த பணம் உங்கள் கையை வந்து சேரும். தாறுமாறாக இருந்த பண பிரச்சனை ஓரளவுக்கு சரியாகி, நீங்கள் மனநிம்மதியை அடையும் அளவுக்கு பிரச்சனைக்கு ஒரு தீர்வை அந்த கடவுள் நிச்சயம் காண்பித்துக் கொடுப்பான் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்