- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilமுகப்பொலிவை அதிகரிக்க உதவும் பச்சரிசி

முகப்பொலிவை அதிகரிக்க உதவும் பச்சரிசி

- Advertisement -

நம்முடைய முன்னோர்கள் காலத்தில் ஒரு பெண்ணை பார்த்ததும் அழகாக இருக்கிறாள் என்று கூற மாட்டார்கள். கலையாக இருக்கிறாள் என்றுதான் கூறுவார்கள். கருப்பாக இருந்தாலும் கலையாக இருக்கிறாள் என்று கூறி நாமும் கேள்விப்பட்டு இருக்கிறோம். அன்றைய காலத்தில் நிறத்திற்கு முக்கியத்துவம் தரவில்லை முகம் எந்தளவிற்கு கலையாக இருக்கிறது என்பதற்கு தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். அப்படி முகம் கலையாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்களும் பொழிவை இழந்து சோர்வாக இருக்கக்கூடிய முகத்தையும் புத்துணர்ச்சியுடன் மாற்றுவதற்கும் பச்சரிசியை வைத்து செய்யக்கூடிய ஒரு அளவு குறிப்பை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

நாம் ஒவ்வொருவரும் அன்றாடம் வெளியில் சென்று வருகிறோம். நம் ஒவ்வொருவருக்கும் சூரிய ஒளி கதிர்களால் பலவிதமான பாதிப்புகள் நம்முடைய தோளில் ஏற்படத்தான் செய்யும். அதை அவ்வப்பொழுது நீக்கிக் கொண்டே இருக்க வேண்டும். இல்லை என்றால் அதனால் நம்முடைய சருமம் பலவிதமான பாதிப்பிற்கு ஆளாகும். இப்படி நம்முடைய சருமத்தில் இருக்கக்கூடிய தேவையற்ற கழிவுகளை நீக்கினாலேயே நம்முடைய முகம் புதுப்பொலிவுடன் திகழும் என்றே கூறலாம். அப்படி நீக்குவதற்குரிய ஒரு குறிப்பு தான் இது.

- Advertisement -

இதற்கு நமக்கு பச்சரிசி மாவு இருந்தால் போதும். இரண்டு ஸ்பூன் அளவிற்கு பச்சரிசி மாவை எடுத்துக் கொள்ளுங்கள். இதில் அரிசி கழுவிய தண்ணீரை ஊற்றி பேஸ்ட் ஆக தயார் செய்து கொள்ள வேண்டும். அரிசி கழுவிய தண்ணீரை தான் பயன்படுத்த வேண்டும். வேறு எதையும் பயன்படுத்தக் கூடாது. அரிசி கழுவிய தண்ணீரை பயன்படுத்தினால் தான் அதனுடைய முழு பலனையும் நம்மால் பெற முடியும். இப்பொழுது பேஸ்ட் தயாராகிவிட்டது.

இந்த பேஸ்ட்டை உங்களுடைய முகத்தில் நன்றாக வட்ட வடிவில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். ஐந்து நிமிடம் நன்றாக மசாஜ் செய்த பிறகு பத்து நிமிடம் அப்படியே வைத்திருந்து முகத்தை கழுவி விடுங்கள். வேறு எதுவும் செய்ய வேண்டாம்.வறண்ட சருமம் இருப்பவர்கள் இதற்கு பிறகு பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை தடவ வேண்டும்.

- Advertisement -

இப்படி நாம் செய்வதன் மூலம் நம் முகத்தில் இருக்கக்கூடிய இறந்த செல்கள் முற்றிலும் நீங்கிவிடும். முகத்தில் இருக்கக்கூடிய அழுக்குகளும் கழிவுகளும் நீங்கும். மேலும் முகத்தில் இருக்கக்கூடிய தளர்வுகள் நீங்கி முகம் புதுப்பொலிவுடன் அழகாக திகழும். சூரிய ஒளிக் கதிர்களால் ஏற்பட்ட கருமை நிறமும் மாறும்.மேலும் முகப்பருக்கள் வராமல் தடுக்க முடியும். இப்படி பல நன்மைகளை நாம் கூறிக் கொண்டே செல்லலாம்.

இதையும் படிக்கலாமே:ஒரே வாரத்தில் பாத வெடிப்பு நீங்கி மிருதுவான பாதத்தை பெற

பலவிதமான கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்துவதற்கு பதிலாக இந்த முறையில் இயற்கையிலேயே இருக்கக்கூடிய அற்புதமான பொருட்களை நாம் பயன்படுத்துவதன் மூலம் நம்முடைய முகம் எப்பொழுதும் பிரகாசமாகவும், கலையாகவும், புத்துணர்ச்சியுடன் திகழும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்