- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகோடீஸ்வர யோகம் தரும் பொருள்

கோடீஸ்வர யோகம் தரும் பொருள்

- Advertisement -

மார்கழி மாதம் என்பது வழிபாட்டிற்குரிய மாதம் என்று நம் அனைவருக்கும் தெரியும். பலரும் மார்கழி மாதம் முழுவதும் அருகில் இருக்கக்கூடிய விநாயகர் ஆலயத்திற்கு சென்று விநாயகரை வழிபாடு செய்வார்கள். அதிலும் குறிப்பாக அரச மரத்தடி விநாயகருக்கு தண்ணீர் ஊற்றி அபிஷேகம் செய்து வழிபாடு செய்யும் ஆண்களும் பெண்களும் பலர் இருக்கிறார்கள். இப்படி வழிபாடு செய்வதன் மூலம் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மேலும் அவர்கள் என்ன வேண்டுகிறார்களோ அது அப்படியே நிறைவேறும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த விநாயகரிடம் எந்த பொருளை வைத்து வழிபட்டால் நமக்கு கோடீஸ்வர யோகம் உண்டாகும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

கோடீஸ்வர யோகம் தரும் பொருள்

ஜனவரி மாதம் மூன்றாம் தேதி மார்கழி மாதத்தின் 19ஆம் நாள் வெள்ளிக்கிழமை அன்று வளர்பிறை சதுர்த்தி வருகிறது. சதுர்த்தி என்றாலே அது விநாயகருக்கு உரிய திதி என்று நம் அனைவருக்கும் தெரியும். இது வளர்பிறையில் வெள்ளிக்கிழமை வரக்கூடிய சதுர்த்தி என்பதால் இந்த சதுர்த்தியை சுக்கிர சதுர்த்தி என்று கூறுவது உண்டு. இந்த சதுர்த்தி நாள் அன்று நாம் விநாயகர் பெருமானை வழிபாடு செய்வதன் மூலம் சுக்கிர பகவானின் அருளும் நமக்கு கிடைக்கும் என்றே கூறப்படுகிறது. எப்படி வழிபாடு செய்தால் சுக்கிரனின் அருளால் கோடீஸ்வர யோகம் கிடைக்கும் என்று தெரிந்து கொள்வோம்

- Advertisement -

இந்த வழிபாட்டை ஜனவரி மாதம் மூன்றாம் தேதி ராகு காலம், எமகண்டம் இந்த நேரங்களை தவிர்த்து மற்ற எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம். அருகில் இருக்கக்கூடிய அரச மரத்தடி விநாயகர் அல்லது வன்னி மரத்தடி விநாயகரிடம் செய்தால் விரைவிலேயே பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஒருவேளை அருகில் அரச மரத்தடி விநாயகரோ, வன்னி மரத்தடி விநாயகரோ இல்லாத பட்சத்தில் விநாயகரின் ஆலயத்தில் கூட இந்த வழிபாட்டை செய்யலாம். இந்த வழிபாட்டிற்கு நமக்கு முக்கியமாக தேவைப்படக் கூடியது ஒரே ஒரு பொருள். அந்த பொருள் தான் அச்சு வெல்லம்.

ஐந்து அச்சு வெல்லங்களை கடையிலிருந்து வாங்கிக்கொண்டு நேராக விநாயகரின் ஆலயத்திற்கு செல்லுங்கள். அரசமரத்தடி விநாயகரின் பாதத்தில் இந்த ஐந்து அச்சு வெல்லத்தையும் வைத்து விநாயகர் பெருமானை முழுமனதோடு நினைத்துக்கொண்டு, தங்களால் இயன்ற அளவு ஒற்றைப்படை எண்ணிக்கையில் வளம் வந்து விநாயகரை வழிபாடு செய்ய வேண்டும். பிறகு அந்த அச்சுவெல்லத்தை எடுக்காமல் அப்படியே அங்கேயே விட்டுவிட்டு வீடு திரும்பி வரவேண்டும்.

- Advertisement -

வீட்டிற்கு வரும் பொழுது வேறு எங்கும் செல்லக்கூடாது, எந்த பொருட்களையும் வாங்கக்கூடாது, எந்த பொருட்களையும் தரவும் கூடாது. நேராக வீட்டிற்கு வந்து வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய விநாயகரை தரிசனம் செய்ய வேண்டும். இப்படி வளர்பிறை சுக்கிர சதுர்த்தி நாளன்று விநாயகரின் பாதத்தில் அச்சுவெல்லத்தை வைத்து வழிபாடு செய்தோம் என்றால் நமக்கு இருக்கக்கூடிய இக்கட்டான பிரச்சனைகள் அனைத்தும் தீருவதோடு சுக்கிர பகவானின் அருளும் விநாயகர் பெருமானின் அருளும் பரிபூரணமாக கிடைக்கப்பெற்று கோடீஸ்வர யோகம் பெறுவோம்.

இதையும் படிக்கலாமே:செல்வ செழிப்புடன் வாழ சுக்கிர சதுர்த்தி வழிபாடு
விநாயகர் பெருமானுக்கு பிடித்தமான இந்த பொருளை விநாயகர் பெருமானிடம் வைத்து வழிபாடு செய்பவர்களுக்கு விநாயகப் பெருமானின் அருளால் கோடீஸ்வர யோகம் உண்டாகும். முழு மனதுடனும், முழு நம்பிக்கையுடனும் முயற்சி செய்து பலன் பெறலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்