- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalமார்கழி வளர்பிறை சஷ்டியில் முருகன் வழிபாடு

மார்கழி வளர்பிறை சஷ்டியில் முருகன் வழிபாடு

- Advertisement -

மாலை நேரத்தில் நிலை வாசல் கதவை திறந்து வைத்தால், கொசு தான் படை எடுத்து நிலை வாசலுக்குள் வருகிறது. பணம் எங்கே வருகிறது என்று நீங்கள் சிந்திப்பது நன்றாக புரிகிறது. ஆனால் நாளைய தினம் முருகனுக்கு உகந்த சஷ்டி திதி, மார்கழி மாதம் 21ஆம் தேதி, ஜனவரி 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து இந்த வளர்பிறை சஷ்டிதிதியானது வந்திருக்கிறது.

நாளைய தினம் நிலை வாசலில் இந்த 2 பொருளை வைத்தால் நிச்சயம் உங்கள் வீட்டிற்குள் பணவரவு அதிகரிக்கும். கடன் சுமை குறையும். நாளைய தினம் செய்ய வேண்டிய முருகர் வழிபாடு, செய்ய வேண்டிய பரிகாரம் பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவலை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

வளர்பிறை சஷ்டி முருகன் வழிபாடு

நாளை மார்கழி மாதத்தில் வந்திருக்கக்கூடிய வளர்பிறை சஷ்டி. இந்த நாள் ஒரு இனிய நாள். நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதும் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது அசைவ சாப்பாடு தான். நாளை ஒருநாள் அசைவ சாப்பாட்டை தவிர்த்து விட்டு முருகனை வழிபாடு செய்து பாருங்கள் கிடைக்கும் நிம்மதி வானளவு இருக்கும்.

நாளை காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்து விடவும். பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, விரதம் இருப்பவர்கள் இருக்கலாம். நாளை மாலை 6 மணிக்கு பூஜை அறையில் முருகப்பெருமானுக்கு விளக்கு ஏற்றி, இரண்டு வாழைப்பழம் நெய்வேத்தியமாக வைத்து விடுங்கள். 2 மண் அகல் விளக்குகள் எடுத்துக் கொள்ளுங்கள். அது நிரம்ப கல் உப்பை கொட்டி, அதன் மேலே 5 மிளகு வைத்து, நிலை வாசலின் இரண்டு பக்கமும் வைக்க வேண்டும். ஒவ்வொரு மண் அகல் விளக்கிலும் 5 மிளகுகள் மொத்தமாக பத்து மிளகுகள் பரிகாரத்திற்கு உங்களுக்கு தேவைப்படும்.

- Advertisement -

நிலை வாசலில் இரண்டு பக்கமும் இந்த தயார் செய்யப்பட்ட கல் உப்பை மண் அகல் விளக்கில் வைத்துவிட்டு, அதற்கு பக்கத்திலேயே ஒரு மண் அகல் விளக்கை சின்ன தட்டின் மேல் வைத்து நல்லெண்ணெயோ அல்லது நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். (பஞ்ச தீபக் கூட்டு எண்ணையை வீட்டில் விளக்கு ஏற்ற பயன்படுத்தாமல் இருப்பது நல்லது).

முருகப்பெருமானை மனதார நினைத்து விளக்கு ஏற்றுங்கள். நிலை வாசலில் இரண்டு பக்கமும் கல் உப்பு, சின்ன சின்ன மண் அகல்விளக்குகளில், நிலை வாசலில் இரண்டு பக்கமும் மண் அகல் விளக்கு எறிய வேண்டும் இவ்வளவுதான் பரிகாரம். பிறகு பூஜை அறையில் விளக்கு ஏற்றி முருகப்பெருமானுக்கு நெய்வேத்தியம் செய்து வைத்து கற்பூர ஆரத்தை காண்பித்து விரதத்தை நிறைவு செய்து கொள்ளுங்கள். நாளைய தினம் வளர்பிறை சஷ்டி திதியில் இந்த பரிகாரத்தை செய்தால் உங்கள் வீட்டில் செல்வ வளம் பல மடங்கு உயரும். கடன் சுமை படிப்படியாக குறையும்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை சஷ்டி திதி அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை செய்கிறீர்கள். ஞாயிற்றுக்கிழமை மாலை நிலை வாசலில் விளக்கும் ஏற்றி விட்டீர்கள். விளக்கு எரிந்து குளிர்ந்து விட்டது. அந்த எரிந்து முடிந்த விளக்கை மட்டும் எடுத்து வீட்டிற்குள் வைத்துக் கொள்ளலாம். ஆனால் மண் அகல் விளக்கில் வைத்த கல் உப்பு மிளகு இருக்கிறது அல்லவா. அதை எடுக்கக் கூடாது.

ஞாயிறு மாலை, திங்கள் மாலை, செவ்வாய் கிழமை மாலையில் மூன்று நாளும் அந்த கல்லுப்பு உங்கள் வீட்டு நிலை வாசல் படியிலேயே தான் இருக்க வேண்டும். செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்குள்ளாக, ஒரு பாத்திரத்தில் சுத்தமான தண்ணீரை எடுத்து இந்த அகல் விளக்கில் போட்டு வைத்திருக்கும் உப்பையும் மிளகையும் அதில் கொட்டி உங்கள் கையால் கரைத்து விடுங்கள்.

என்னுடைய கஷ்டங்கள் எல்லாம், பணக்கஷ்டம் எல்லாம் என்னை விட்டு விலகி செல்ல வேண்டும், பண வரவு அதிகரிக்க வேண்டும் என்று முருகனை நினைத்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அந்த தண்ணீரில் மிளகு மட்டும் கரையாது. இதை எடுத்து அப்படியே கால் படாத இடத்தில் மண் பாங்கான இடத்தில் ஊற்றி விடுவும்.

இதையும் படிக்கலாமே: பசுவிற்கு அகத்திக்கீரை யார் கொடுக்கக்கூடாது?

உங்கள் வீட்டில் தொட்டியில் செடி இருந்தால் கூட அந்த செடி மண்ணில் இந்த தண்ணீரை ஊற்றுங்கள் தவறு கிடையாது. இந்த பரிகாரத்தை செய்தால் உங்கள் கஷ்டம் நிச்சயம் விலகும். வருமானம் நிச்சயம் அதிகரிக்கும். நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.

சற்று முன்