- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval2025 ல் உற்சாகம் தரும் மந்திர வார்த்தை

2025 ல் உற்சாகம் தரும் மந்திர வார்த்தை

- Advertisement -

புது வருடம் பிறந்து விட்டது. 5 தேதிகளும் கலந்து விட்டது. புது வருடம் பிறந்த நாளில் நிறைய உறுதிமொழிகள், எடுத்துட்டோம். இந்த குறிக்கோளை அடைந்தே ஆக வேண்டும் என்று, உற்சாகத்தோடு புது வருடத்தை துவங்கினோம். ஆனால் நாங்கள் எடுத்த உறுதி மொழிகளை ஒரு நாள் கூட நிறைவேற்ற சரியான முயற்சிகள் எடுப்பதில்லை. சரியாக எதுவுமே நடக்கவில்லை. சோம்பேறித்தனம் தான் எங்களோடு தங்கி இருக்கிறது.

ஒரு நோக்கம் கூட நிறைவேற்றப்படாமல், இப்படியே இந்த வருடமும் கடந்து சென்று விடுமோ, வாழ்க்கையை தொலைத்து விடுவோமோ என்ற எண்ணத்திற்குள் நீங்கள் போகவே கூடாது. அப்படியே உங்கள் வாழ்க்கையை தலைகீழாக புரட்டி போட்டு உங்களை உற்சாகத்தின் உச்சிக்கே கொண்டு போய் சேர்க்கும் ஒரு சுவிட்ச் வோர்டை தான் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

- Advertisement -

கடந்த வருடத்தைப் போலவே இந்த வருடமும் சென்று விடுமோ என்ற  பயம் ஒரு துளி உங்கள் மனதில் இருந்தாலும் அதை தூக்கி வெளியில் போடுங்கள். இந்த வருடம் நமக்கு நல்லது மட்டும்தான் நடக்கும் நல்லது மட்டும்தான் நடக்கும் என்று மனதில் முதலில் பதிய வையுங்கள். முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். நிச்சயம் நீங்களும் வெற்றியாளர்களாக மாறுவீர்கள்.

அதற்கு தூண்டுகோலாக ஒரு சுவிட்ச் வோர்ட். காலையில் எழுந்து கண்விழித்ததும் அப்படியே உற்சாகத்தோடு இந்த மந்திர வார்த்தைகளை 11 முறை சொல்லுங்கள். இந்த வார்த்தைகளை சொல்லும் போதே உங்களுக்குள் உற்சாகம் வர வேண்டும். அப்படியே 1000 வாட்ஸ் பல்ப் எரிய வேண்டும். இது என்ன வார்த்தை தெரியுமா.

- Advertisement -

“Yes Amazing Jackpot” இந்த வார்த்தைகளை சொல்லும் போதே சோர்வாக சொல்லக்கூடாது. அப்படியே எனர்ஜியோடு சொல்ல வேண்டும். வாயைத் திறந்து சத்தம் போட்டு சொல்லலாம். காலையில் எழுந்து பல் தேய்த்து முகம் கழுவி குளித்துவிட்டு பிறகு சொன்னாலும் தவறு கிடையாது. இந்த வார்த்தையை சொல்லிவிட்டு அந்த நாளின் வேலைகளை துவங்கி பாருங்கள். நீங்கள் வியாபாரியாக இருந்தால் வியாபாரம் அமோகமாக நடக்கும். சீக்கிரம் லாபம் சம்பாதிப்பீர்கள்.

வேலையில் சோர்வடைந்து ஒருபோதும் அமரவே மாட்டீர்கள். நீங்கள் அலுவலகத்தில் பணிபுரிபவர்களாக இருந்தால், உங்கள் வேலையில் நீங்கள் தான் நம்பர் 1 இடத்தில் இருப்பீர்கள். அடுத்தவர்களுடைய வேலையையும் இழுத்துப் போட்டு செய்வீர்கள். திறமையாக செயல்படுவீர்கள். சோம்பேறித்தனம் ஒரு துளியும் உங்கள் பக்கத்தில் வராது. நீங்கள் மாணவர்களாக இருந்தாலும் இந்த வார்த்தையை தினமும் சொல்லலாம். படிப்பில் நல்ல ஆர்வம் வரும்.

- Advertisement -

வீட்டில் இருக்கும் பெண்கள் இந்த வார்த்தையை சொன்னால் எல்லா வேலைகளிலும் திறமையாக இருப்பீர்கள். வீட்டை பராமரிப்பது முதல், குழந்தைகள் கணவரை பார்த்துக் கொள்வது வரை உங்களுக்குள் ஒரு உத்வேகம் வந்துவிடும். இப்படி இந்த வார்த்தைகளை யார் வேண்டுமென்றாலும் பயன்படுத்தலாம். இந்த வார்த்தைகளை சொல்பவர்களுக்கு அதிர்ஷ்டம் மேல் அதிர்ஷ்டம் கொட்டிக் கொண்டே இருக்கும். தேவைப்படுபவர்கள் முயற்சி செய்து பாருங்கள்.

இதையும் படிக்கலாமே: அதிர்ஷ்டத்தை தேடி வர வைக்கும் மார்கழி சஷ்டி வழிபாடு

நம்பிக்கை இல்லாதவர்கள் இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டாம். நம்பிக்கை இல்லாமல் நாம் எதை செய்தாலும் அதன் மூலம் பணம் கிடைக்காது. தொடர்ந்து ஏழு நாள் இந்த வார்த்தையை சொல்ல துவங்கும் போதே, உங்கள் வாழ்வில் நடக்கும் நல்ல மாற்றங்கள் தெரிய துவங்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்