- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகடன் தீர்க்கும் கந்தர் அநுபூதி பாடல் வரிகள்

கடன் தீர்க்கும் கந்தர் அநுபூதி பாடல் வரிகள்

- Advertisement -

கண் முன்னே நின்று கஷ்டத்தை கொடுக்கும் கடன் சுமை கூட ஒரு நொடியில் ஒன்றுமே இல்லாமல் காணாமல் போகும். முருகனின் திருப்பாதங்களை பற்றி கொண்டு வழிபாடு செய்பவர்களுக்கு. அதிலும் ஒரு சிறப்பு வாய்ந்த பரிகாரத்தை இன்று நாம் பார்க்கப் போகின்றோம். அருணகிரிநாத சுவாமிகள் அருளிய கந்தர் அனுபூதி பாடல்களில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு பாடல் தான் இது.

இந்த பாடலை தினம் தோறும் முருகப்பெருமானை நினைத்து பாடி வருபவர்களுக்கு கடன் சுமையே இருக்காது. அந்த கந்தர் அனுபூதி பாடல் வரிகள் என்ன, அந்த பாடல் வரிகளை எந்த நேரத்தில் படித்தால் பலன் இரட்டிப்பாக கிடைக்கும், ஆன்மீகம் சார்ந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

எந்த பாடல் படிப்பதாக இருந்தாலும் சரி, எந்த மந்திரத்தை உச்சரிப்பதாக இருந்தாலும் சரி, கஷ்டம் தீர என்ன வழிபாடு செய்ய வேண்டும் என்றாலும் சரி, அதை பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்வது சிறப்பு. முருகனுக்கு உகந்த நாள் என்றால், அது செவ்வாய்க்கிழமை. செவ்வாய்க்கிழமை அதிகாலை பிரம்ம முகூர்த்த வேளையில் எழுந்து குளித்துவிட்டு, முருகப்பெருமான் முன்பு ஒரு விளக்கு ஏற்றி வைத்து, பூஜை அறையில் அமர்ந்து இந்த பாடலைப் படித்தால் நீங்கள் பெரும் கடன் சுமையிலிருந்து கூட சர்வசாதாரணமாக சுலபமாக வெளிவரலாம்.

கோடிக்கணக்கில் கடன் இருக்கிறது. இதை திருப்பி அடக்க முடியுமா, என்பதே சந்தேகம்தான். உயிரை மாய்த்துக்கொள்ள கூட யோசனை வருகிறது என்ற அளவுக்கு கடன் துன்பம் இருப்பவர்களுக்கும் இந்த பாடல் கைகொடுக்கும்.

- Advertisement -

கடன் தீர்க்கும் கந்தர் அநுபூதி பாடல் வரிகள்

வடிவும் தனமும் மனமும் குணமும்
குடியும் குலமும் குடிபோ கியவா
அடி அந்தம் இலா அயில் வேல் அரசே
மிடி என்று ஒரு பாவி வெளிப்படினே!

இதையும் படிக்கலாமே: கஷ்டம் தீர்க்கும் பச்சை கற்பூர பரிகாரம்

இந்த பாடலை செவ்வாய்க்கிழமை குறிப்பிட்ட பிரம்ம முகூர்த்த நேரத்தில் தான் படிக்க வேண்டுமா. அப்படி கிடையாது. எங்களுக்கு பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து படிப்பதில் சிரமம் இருக்கிறது என்றால், நேரம் உங்களுக்கு எப்போது கொடுக்கிறதோ அப்போது இந்த பாடலை படித்து கந்தா கடம்பா கதிர்வேலா என் கடனை அடைக்க சீக்கிரம் வழியை காட்டுங்கள் என்று பிரார்த்தனை செய்யுங்கள். நிச்சயம் கந்த கடவுள் உங்கள் கடன் சுமையை கண்ணுக்குத் தெரியாமல் கரைத்து விடுவான். நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த ஆன்மீகம் பதிவு சமர்ப்பணம்.

சற்று முன்