மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் கோபம், தாபம், அழுகை, சிரிப்பு, இரக்கம், கருணை என்று எல்லா விதமான உணர்வுகளும், உணர்ச்சிகளும் இருக்கத் தான் செய்யும். அதில் ஒவ்வொருவருக்கும் ஒரு சில உணர்வுகள் அதிகமாக இருக்கவே அவதிப்பட வேண்டி இருக்கும். இந்த வகையில் கோப குணம் கொண்டவர்கள் அதிலிருந்து தணிந்து சாந்தமாக இருக்க தெரிந்து வைத்திருக்க வேண்டிய மந்திரம் என்ன? என்னும் ஆன்மீகம் சார்ந்த தகவலை தான் இப்பதிவில் தெரிந்து கொள்ள போகிறீர்கள்.
கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும் என்பார்கள். அதிகம் கோபப்படுபவர்கள் இடத்தில் நல்ல குணநலன்கள் கொட்டி கிடக்கும். ஆனால் அவர்களுடைய கோபம் தான் அவர்களுக்கு மிகப் பெரிய எதிரியாக துன்புறுத்தும். சிலரின் பலமும் அதுவே! சிலரின் பலவீனமும் அதுவே ஆகும். கோபம் எக்காலத்திலும் கட்டுக்குள் இருக்க வேண்டும். அளவுக்கு மீறிய கோபம் மனிதனை அழித்துவிடும்.
கோபம் வரும் நேரத்தில் “மற்றவர்கள் செய்யும் தவறுக்கு உங்களுக்கு நீங்களே கொடுத்துக் கொள்ளும் தண்டனை தான் இந்த கோபம்” என்று புத்த பிரான் கூறியதை நினைவில் கொண்டு வாருங்கள், கோபமே தணிந்துவிடும். அடிக்கடி நீங்கள் கொள்ளும் கோபத்தால் உங்கள் உடல் நிலையும், மனநிலையையும் கெட்டுப் போகும். ஆரோக்கிய பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய இந்த கோபத்தை தணிக்க, ஒரு சிலர் பல விதமான வழிமுறைகளை மேற்கொள்வார்கள்.
உதாரணத்திற்கு கோபம் வரும் பொழுது தியானம் செய்வது, இன்னிசையில் மூழ்குவது, உடற்பயிற்சி மேற்கொள்வது, கவிதை எழுதுவது, பாடல் கேட்பது போன்றவற்றை செய்வார்கள். கோபம் குறைய ஒன்றிலிருந்து நூறு வரை எண்ண கூட செய்வார்கள். உங்களுக்கு எதை செய்தால் கோபம் தணியுமோ, அதை நீங்கள் செய்ய பழகுங்கள். கோபம் நியாயமானதாக இருக்க வேண்டும். அர்த்தமற்ற கோபம் பல உறவுகளை உங்களிடமிருந்து பிரித்து விடும்.
அதிக கோபம் கொள்பவர்கள் கீழ் வரும் இந்த மகேஸ்வரி காயத்ரி மந்திரத்தை முறையாக சொல்லும் பொழுது கொஞ்சம் கொஞ்சமாக உங்களுடைய கோப குணமே குறைய ஆரம்பிக்கும். உங்களிடன் இருந்த உங்களுடைய கோபம் வெளியேறிவிடும். சக்தி வாய்ந்த இந்த மந்திரத்தை வடகிழக்கு திசை நோக்கி அமர்ந்து கொண்டு 108 முறை தியானம் செய்யும் முறையில் முதுகு வளையாமல் நேராக நிமிர்ந்து கொண்டு உச்சரிக்க வேண்டும்.
மகேஸ்வரி காயத்ரி மந்திரம்:
ஓம் ச்வேத வர்ணாய வித்மஹே
சூல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ மகேஸ்வரி ப்ரசோதயாத்!
இதையும் படிக்கலாமே:
பெருமாள் கோவில் சொர்க்கவாசல் திறப்பு 2025
உங்களை நேசிப்பவர்கள் உங்களுடைய கோபத்தை புரிந்து கொண்டு எப்போதும் பொறுத்துக் கொள்கிறார்கள் என்று உங்கள் குணத்தை நீங்கள் மாற்றிக் கொள்ளாமல் இருக்கக் கூடாது. எல்லா சமயங்களிலும் அவர்கள் உங்களுடைய கோபத்தை பொறுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. சிறிது சிறிதாக ஆழ்மனதில் உங்கள் மீது வெறுப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு, எனவே கோபம் என்னும் அரக்கனை மகேஸ்வரி காயத்ரி மந்திரத்தை உச்சரித்து விரட்டி அடித்து விடுங்கள். கோபம் நம்மை மட்டும் அல்லாமல் நம்மை சுற்றி இருப்பவர்களையும் வதை செய்யும் கொடுமையான ஒரு விஷயம். எவ்வளவு நல்ல குணங்கள் உங்களிடம் இருந்தாலும் கோபம் என்ற ஒன்று உங்கள் இலக்கை அடைய விடாமல் தடை செய்யும். கோபத்தால் சாதிக்க முடியாததை அன்பான குணத்தால் சாதித்து காட்டுங்கள்.