ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் இருக்கிறது. அதேபோல் ஒவ்வொரு திதிக்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் இருக்கிறது. அதேபோல் ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு விதமான பலன் என்பது இருக்கிறது. அப்படி விசேஷமான நட்சத்திரங்களும், திதிகளும், கிழமைகளும் ஒருசேர சேர்ந்து வரும்போது அதற்கு அபரிவிதமான பலன் என்பது ஏற்படும். அந்த வகையில் ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதியும், பத்தாம் தேதியும் கிருத்திகை நட்சத்திரம் ஏகாதசி திதியும் சேர்ந்து வருகிறது. மாமனுக்கும் மருமகனுக்கும் உகந்த நாளான இந்த நாளில் எந்த முறையில் நாம் பரிகாரம் செய்தால் நம்முடைய கடன் பிரச்சினை தீரும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
கடன் என்னும் கர்ம வினை தீர
எந்த ஒரு தெய்வத்தை நாம் வழிபட்டாலும் அந்த தெய்வம் நமக்கு நன்மை செய்ய வேண்டும் என்றால் நம்முடைய கர்ம வினை என்பது குறைய வேண்டும். முதலில் நம்முடைய கர்ம வினை குறைவதற்குரிய வழிகளை காட்டிய பிறகுதான் நமக்கு நல்ல வழியை காட்டுவார்கள் என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட கர்ம வினைகளால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்வதுதான் கடன் பிரச்சனை. முன் ஜென்மத்தில் நாம் செய்த கர்ம வினையின் பலனால் தான் இந்த ஜென்மத்தில் கடன் என்னும் பிரச்சினையில் மாட்டிக் கொண்டு விழித்துக் கொண்டு இருக்கிறோம். அதிலிருந்து வெளியே வருவதற்குரிய பரிகாரத்தை பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.
இந்த பரிகாரத்தை ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதியும் செய்யலாம், ஜனவரி மாதம் 10ஆம் தேதியும் செய்யலாம். இதற்கு நாம் நம்முடைய வீட்டு பூஜை அறையில் ஒரு சிறிய தாம்பாள தட்டை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அந்த தாம்பாள தட்டில் நம்மால் இயன்ற அளவு பச்சரிசியையும், பாசிப்பருப்பையும், வெல்லத்தையும் வைக்க வேண்டும். தீபம் ஏற்றி இந்த பொருட்களை பூஜையில் சுவாமி படத்திற்கு முன்பாக வைத்து விட்டு நம்முடைய கடன் பிரச்சினை தீர வேண்டும் என்று முழுமனதோடு வழிபாடு செய்ய வேண்டும்.
வியாழக்கிழமை செய்வதாக இருக்கும் பட்சத்தில் இரவு முழுவதும் அது பூஜை அறையில் இருக்கட்டும். வெள்ளிக்கிழமை அன்று காலையில் இந்த பொருட்களை பசுமாட்டிற்கு தங்கள் கைகளால் தானமாக தர வேண்டும். ஒரு வேளை அருகில் பசுமாடு இல்லை என்பவர்கள் வறுமை நிலையில் இருக்கக்கூடியவர்களுக்கு இந்த பொருட்களை தானமாக தர வேண்டும். தங்களால் முடிந்த அளவிற்கு எவ்வளவு வேண்டுமானாலும் இதை தானமாக தரலாம். ஒரு கைப்பிடி அளவு தான் தர வேண்டும் என்று இல்லை. வெள்ளிக்கிழமை இதை வைத்து பிரம்ம முகூர்த்த நேரத்தில் வழிபாடு செய்து விட்டு கூட பசு மாட்டிற்கோ அல்லது வறுமை நிலையில் இருப்பவர்களுக்கு தானமாக தரலாம்.
இதையும் படிக்கலாமே:வைகுண்ட ஏகாதசி தீப வழிபாடு
நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு தான தர்மத்தின் வழியால் தான் நம்முடைய கர்ம வினைகள் என்பது தீரும். அதன் மூலம் தான் நம்முடைய பிரச்சினைகளும் தீரும் என்பதால் ஏகாதசியும் கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரக்கூடிய அந்த நேரத்தில் இந்த தானத்தை செய்து நம்முடைய கடன் பிரச்சனையிலிருந்து வெளியே வருவோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.