- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஏகாதசி விரதம் பூர்த்தியடைய துவாதசி அன்று செய்ய வேண்டியது

ஏகாதசி விரதம் பூர்த்தியடைய துவாதசி அன்று செய்ய வேண்டியது

- Advertisement -

வைகுண்ட ஏகாதசி அன்று பலரும் விரதம் இருந்து கண் விழித்து பெருமாளை வழிபாடு செய்வார்கள். இந்த விரதம் என்பது மூன்று நாட்கள் அனுஸ்டிக்க வேண்டியது என்று கூறப்படுகிறது. ஏகாதசிக்கு முதல் நாளே மதிய நேரத்தில் உறங்காமல் இருக்க வேண்டும் என்றும் ஏகாதசி அன்று ஏதாவது ஒரு முறையில் விரதம் இருக்க வேண்டும் என்றும் அன்று இரவு கண் விழித்து துவாதசி அன்று மதியம் தான் விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் பலரும் பல விதங்களில் வழிபாடு மேற்கொள்வார்கள். இப்படி வழிபாடை செய்வதற்கு முக்கியமான காரணம் பெருமாளின் அருள் வேண்டும் என்பதுதான். அப்படி பெருமாளின் அருள் பெறவும் வைகுண்ட ஏகாதசி விரதத்தின் முழுமையான பலனை பெறுவதற்கு துவாதசி அன்ற செய்ய வேண்டிய சில முக்கியமான காரியங்களை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

துவாதசி அன்று செய்ய வேண்டியது

எந்த ஒரு சுப நிகழ்ச்சியாக இருந்தாலும் விரத நாளாக இருந்தாலும் அந்த நாளில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்பது இருக்கிறது அந்த நாளுக்கு முதல் நாள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் பலரும் கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். பொதுவான விரதத்திற்கு முதல் நாள் எளிமையான ஆகாரத்தை உண்ண வேண்டும் என்றும் இரவு சுத்தமாக தனி படுக்கையில் படுக்க வேண்டும் என்றும் கூறுவார்கள்.

- Advertisement -

அதே போல் விரதம் இருக்கக்கூடிய அந்த நாளில் காலையில் எழுந்து பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே தலைக்கு குளித்துவிட்டு எந்த தெய்வத்தை நினைத்து விரதம் இருக்கிறோமோ அந்த தெய்வத்திற்கு தீபம் ஏற்றி வைத்து விரதம் இருக்க ஆரம்பிக்க வேண்டும் என்றும் மேலும் அன்றைய தினத்தில் அந்த தெய்வத்தின் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வது என்பதும் கூறப்படுகிறது.

மேலும் மாலை நேரத்தில் அந்த விரதத்தை பூர்த்தி செய்யும் வகையில் அந்த தெய்வத்திற்கு பூஜைகள் செய்து நெய்வேத்தியம் வைத்து விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்று கூறுவோம். இவை அனைத்தும் பொதுவாக அனைத்து விரதங்களுக்கும் கடைப்பிடிக்க வேண்டியது. வைகுண்ட ஏகாதசி அன்றும் இதே வழிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும் என்றாலும் இதோடு சற்று கூடுதலாக ஏகாதசிக்கு மறுநாள் ஆன துவாதசி அன்று இரண்டு முக்கியமான வழிமுறையை பின்பற்ற வேண்டும். அந்த வழிமுறையை நாம் பின்பற்றினோம் என்றால் வைகுண்ட ஏகாதசியின் பலனை நம்மால் முழுமையாக அடைய முடியும். மேலும் பெருமாளின் அருளையும் பரிபூரணமாக பெற முடியும்.

- Advertisement -

வைகுண்ட ஏகாதசி அன்று விரதத்தை பூர்த்தி செய்த பிறகு மறுநாள் துவாதசி அன்று அருகில் இருக்கக்கூடிய செடிகள் விற்கும் இடத்திற்கு சென்று ஒரு துளசிச் செடியை வாங்கி வந்து வீட்டில் வைக்க வேண்டும். அந்த துளசி செடிக்கு தினமும் காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் ஒரு தீபத்தை ஏற்றி வைத்து வழிபாடு செய்ய வேண்டும். இப்படி நாம் துளசிச் செடியை வாங்கி வைத்து வழிபாடு செய்தோம் என்றால் பெருமானின் அருளை நம்மால் பரிபூரணமாக பெற முடியும்.

அதேபோல் ஏகாதசிக்கும் மறுநாளான துவாதசி அன்று அருகில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு பசு மாட்டிற்கு தங்களால் இயன்ற உணவுப் பொருட்களை தானமாக கொடுக்க வேண்டும். மேலும் இவ்வாறு கொடுத்து முடித்த பிறகு பசுமாட்டில் மகாலட்சுமி தாயார் வீட்டிற்கு கூடிய இடத்தை நம்முடைய இரண்டு கைகளாலும் தொட்டு வணங்க வேண்டும். ஒரு வேளை நம்மால் தானம் தர முடியவில்லை என்றால் அருகில் இருக்கக்கூடிய கோசாலையில் பசு மாட்டிற்கு உணவு தருவதற்குரிய செலவை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே:கடன் என்னும் கர்ம வினை தீர
விரதம் இருப்பதோடு முடிந்து விட்டது என்று நினைக்காமல் விரதம் இருந்த மறுநாள் இந்த இரண்டு எளிமையான காரியங்களை செய்பவர்களுக்கு பெருமாளின் அருள் கண்டிப்பான முறையில் கிடைப்பதோடு ஏகாதசி விரதத்தின் பலனும் முழுமையாக கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்