- Advertisement -

கூடாரவல்லி 2025

- Advertisement -

இது மார்கழி மாதம். மார்கழி மாதத்தின் 27-வது நாள் கூடாரவல்லி வைபவம் நடைபெறும். அதிலும் குறிப்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இந்த கூடாரவல்லி வைபவம் மிக மிக விமர்சையாக நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றும் மார்கழி மாதம் 27ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சென்றால், இந்த வைபவத்தை நீங்கள் நேரில் தரிசனம் செய்யலாம்.

கூடாரவல்லி என்றால் என்ன தெரியுமா. ஆண்டாள் ரங்கனை திருமணம் செய்வதற்கு மார்கழி மாதம் 2ஆம் தேதி தன்னுடைய விரதத்தை துவங்குகின்றாள். மார்கழி 27ஆம் தேதி ஆண்டாள் அரங்கனை திருமணம் செய்து கொண்டதாக, அதாவது ஆண்டாள் ரங்கனிடம் ஐக்கியமான நாள் இந்த மார்கழி 27ஆம் தேதி. இதைத்தான் கூடாரவல்லி வைபவமாக கொண்டாடுகின்றோம்.

- Advertisement -

மார்கழி மாதம் 27 நாள் நோன்பிருந்து ரங்கனை கரம் பிடித்த ஆண்டாளை, பெண்கள் வழிபாடு செய்தால் அவர்களுடைய விருப்பமும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. குறிப்பாக திருமணம் ஆகாத பெண்கள் இந்த நாளில் ரங்கநாதரையும் ஆண்டாளையும் வழிபாடு செய்யும் போது நீங்கள் வேண்டிய வரங்கள் அப்படியே கிடைக்கும். திருமணமாகாத பெண்களுக்கு நல்ல வரன் அமையும். திருமணம் ஆன பெண்களுக்கு கணவரோடு இல்லற வாழ்க்கை சிறப்பாக அமையும்.

மார்கழி மாதத்தில் ஆண்டாள் பாவை நோன்பு இருந்தபோது, கள்ளழகர் இடம் வேண்டுதல் வைத்தாலாம். எனக்கும் ரங்கனுக்கும் திருமணம் நடந்து விட்டால், கள்ளழகருக்கு நூறு அண்டாவில் அக்கார அடிசலும், நூறு அண்டாவில் வெண்ணெயும் சாத்துவதாக ஆண்டாளின் வேண்டுதல் இருந்தது. ஆனால் இந்த வேண்டுதலை கள்ளழகருக்கு நிறைவேற்றுவதற்கு முன்பாகவே ஆண்டாள், ரங்கனிடம் ஐக்கியம் ஆகிவிட்டால்.

- Advertisement -

இதெல்லாம் எப்படி நமக்கு தெரியும். ஆண்டாள் பாடிய திருப்பாவை பாடலில் இதற்கான சான்றுகள் எல்லாம் இருக்கிறது. ஆண்டாள் ரங்கனை கரம் பிடித்து திருமணம் செய்து கொண்டு, 2000 ஆண்டுகள் கடந்து விட்டது. 2000 ஆண்டுகளாக ஆண்டாள் வேண்டிக்கொண்ட வேண்டுதல் நிறைவேறவே இல்லை. 2000 ஆண்டுகள் கழித்து ராமானுஜர் இந்த பாடலை படிக்கின்றார். ஆண்டாளுடைய இந்த வேண்டுதல் நிறைவேறவில்லையா என்று ஆதங்கப்பட்டு, ஆண்டாளுடைய வேண்டுதலை ராமானுஜர் நிறைவேற்றி வைக்கிறார். எப்போது 2000 ஆண்டுகள் கழித்து.

ஆண்டாளின் வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக ராமானுஜர், கள்ளழகர் கோவிலுக்கு செல்கிறார். அங்கு இருக்கும் அர்ச்சகர் இடம் அனுமதி வாங்கி நூறு அண்டாவில் அக்கார அடிசலும் நூறு அண்டாவில் வெண்ணையும் கள்ளர்களுக்கு சாற்றி இந்த வேண்டுதலை நிறைவேற்றி வைக்கின்றார்.

- Advertisement -

2000 ஆண்டுகளுக்குப் பின்பாக ராமானுஜரால், ஆண்டாளின் வேண்டுதல் நிறைவேறியது. கள்ளழகருக்கு நெய்வேதியம் வைத்து வழிபாட்டை முடித்துவிட்டு, இந்த பிரசாதத்தை எடுத்துக்கொண்டு ஆண்டாளை பார்ப்பதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் செல்கிறார் ராமானுஜர். ஆண்டாளின் மனது குளிர்ந்தது. 2000 வருடத்திற்கு முன்பாக நான் வேண்டிக் கொண்ட வேண்டுதலை நிறைவேற்றிய ராமானுஜரை பார்க்கும்போது, ஆண்டாளுக்கு சந்தோஷம் அளவில்லாமல் பொங்கியது.

தனக்கான வேண்டுதலை நிறைவேற்றி விட்டு, ஸ்ரீவில்லிபுத்தூருக்கு தன்னை காண வந்த ராமானுஜரை ஆண்டாள் “அண்ணனே வருக வருக! ராமானுஜ அண்ணனே வருக வருக!” என்று அழைத்து வரவேற்றதாக தல புராணங்கள் கூறுகிறது.

கூடாரவல்லி வழிபாடு

நீங்கள் திருமணம் ஆன பெண்களாக இருந்தாலும் திருமணம் ஆகாத பெண்களாக இருந்தாலும் கூடாரவல்லி அன்று அழகாக அலங்காரம் செய்து கொண்டு, பூக்கள் வைத்துக் கொண்டு, வளையல் அணிந்து கொண்டு, புத்தாடை அணிந்து கொண்டு, பக்கத்தில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு செல்ல வேண்டும்.

இப்படி கோவிலுக்கு செல்லும்போது பாலால் செய்த அக்கார அடிசில் கொஞ்சம், வெண்ணையும் நெய்வேத்தியமாக வைத்து பெருமாளையும் ஆண்டாளையும் வழிபாடு செய்ய வேண்டும். உங்களுடைய வேண்டுதலை இந்த நாளில் பெருமாளிடம் ஆண்டாளிடம் சொன்னால் நீங்கள் வைத்த வேண்டுதல் கூடிய சீக்கிரம் நிறைவேறும் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது.

குறிப்பாக திருமணமாகாத கன்னிப்பெண்கள் இந்த நாளில் பெருமாளையும் ஆண்டாளையும் வழிபாடு செய்யுங்கள். பின் சொல்லக்கூடிய இந்தப் பாடலை பாடி, இந்த நாள் வழிபாட்டை நிறைவு செய்வது மிக மிக சிறப்பு. மார்கழி மாதம் 27 வது நாள் பாட வேண்டிய திருப்பாவை பாடல் இதோ.

திருப்பாவை 27 ஆவது பாடல்

கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்தன்னைப்
பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே

பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவார
கூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

ஆண்டாள் கள்ளழகருக்கு நூறு அண்டாவில் பால் பொங்கலும், நூறு அண்டாவில் வெண்ணையும் சாத்துவதாக வேண்டிக் கொண்டால் என்பதற்கு சான்று உள்ளதாக சொல்லப்பட்டது அல்லவா. அந்த பாடல் இதோ. நாச்சியார் திருமொழி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பாடலை எல்லாம் ஆண்டாள் தன் கையாலேயே எழுதிய பாடல்கள் என்பது இந்த இடத்தில் பதிவு செய்து கொள்வோம்.

நாச்சியார் திருமொழி

நாறுநறும் பொழில்மா லிருஞ்சோலை நம்பிக்குநான்
நூறுதடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவிவைத்தேன்
நூறுதடா நிறைந்த அக்கார வடிசில்சொன்னேன்
ஏறுதிருவுடையான் இன்றுவந்திவை கொள்ளுங்கொலோ

இதையும் படிக்கலாமே: வாழ்க்கை பயம் நீங்க பரிகாரம்

மார்கழி மாதம் பாவை நோன்பு இருந்ததால் ஆண்டாள் விருப்பம் நிறைவேறியது. ஆண்டாள் நாச்சியார் ரங்கனை ஐக்கியமானாள். நீங்கள் இந்த மார்கழி மாதம் கூடாரவல்லி அன்று விரதம் இருந்து ஆண்டாளை வழிபாடு செய்தால், உங்களுடைய விருப்பத்தை அந்த ஆண்டாள் நிறைவேற்றி வைப்பாள் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்