12 பிரதோஷங்கள் விரதம் இருந்த பலனை தரக்கூடியது தான் ஒரு சனி மகா பிரதோஷ வழிபாடு. இந்த சனி மகா பிரதோஷ நாளன்று நாம் விரதம் இருந்து வழிபாடு செய்தோம் என்றால் கண்டிப்பான முறையில் சனி பகவானின் தாக்கத்திலிருந்து நம்மால் வெளியில் வர முடியும். சனி பகவான் தான் கர்ம வினைகளின் அடிப்படையில் நமக்கு தண்டனைகளை தரக்கூடியவர் என்றும் அவரால் நமக்கு பலவிதமான கஷ்டங்களும் தோஷங்களும் உண்டாகும் என்றும் நம் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட தோஷங்களையும் கஷ்டங்களையும் நீக்குவதற்கு சனிமகா பிரதோஷ நாளன்று செய்ய வேண்டிய பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
சனி மகா பிரதோஷ நாளன்று சிவபெருமானை அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு சென்று பிரதோஷ நேரத்தில் வழிபாடு செய்ய வேண்டும். அவ்வாறு நாம் வழிபாடு செய்தோம் என்றால் அந்த நேரத்தில் வரக்கூடிய அனைத்து தேவர்களின் அருளையும் நம்மால் பெற முடியும். அதிலும் குறிப்பாக சனி பகவானின் அருளை நம்மால் பெற முடியும். சனி கொடுக்க யார் தடுப்பார் என்ற ஒரு பழமொழி கேள்விப்பட்டு இருக்கிறோம். அவர் எவ்வளவுதான் நமக்கு கஷ்டங்களை கொடுத்தாலும் கடைசியாக நமக்கு சேர வேண்டியதை கொடுத்துவிட்டு தான் செல்வார் என்றும் கேள்விப்பட்டிருக்கிறோம். இருந்தாலும் நம்மால் தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு தான் கஷ்டங்கள் என்பது ஏற்படும். அவற்றை நீக்குவதற்கு செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை பார்ப்போம்.
இதற்கு நாம் சிவபெருமானின் ஒரு மந்திரத்தை கூற வேண்டும். இந்த மந்திரத்தை காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் அதாவது நான்கு மணியிலிருந்து ஆறு மணிக்குள் 108 முறை கூறலாம் அல்லது மாலை பிரதோஷ நேரமான நான்கு முப்பது மணியிலிருந்து ஆறு மணிக்குள் 108 முறை கூறலாம். அவ்வாறு கூறும் பொழுது கையில் நான்கு மஞ்சள் வாழைப்பழங்களை வைத்துக்கொண்டு கூறவேண்டும். இப்படி கூறி முடித்த பிறகு இந்த மஞ்சள் வாழைப்பழத்தை பசு மாட்டிற்கு தானமாக தரவேண்டும். அப்படி தானமாக தந்தோம் என்றால் பணம் தொடர்பான அனைத்து விதமான பிரச்சனைகளும் நீங்கி ஐஸ்வர்யம் பெருகும்.
இதே மஞ்சள் வாழைப்பழத்தை எருமை மாட்டிற்கு தானமாக தந்தோம் என்றால் நமக்கு ஏற்பட்டிருக்க கூடிய நோய் நொடிகள் முற்றிலும் நீங்கும். மரண பயம் நீங்கும். ஜாதகத்தில் கண்டம் இருக்கிறது என்று சூழ்நிலை இருக்கும் பொழுது இந்த தானத்தை தரும் பொழுது அந்த கண்டம் அகலும். அடுத்ததாக வீட்டில் இருக்கக்கூடிய சுபகாரிய தடைகளும், குடும்பத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகளும் தீர வேண்டும் என்றால் இந்த மஞ்சள் வாழைப்பழத்தை பஞ்சாமிர்தமாக பிணைந்து நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து அந்த பஞ்சாமிர்தத்தை வீட்டில் இருக்கக்கூடிய அனைவருக்கும் பிரசாதமாக தர வேண்டும்.
இந்த மஞ்சள் வாழைப்பழத்தோடு 11 எண்ணிக்கையில் எள்ளுருண்டையை கையில் வைத்துக்கொண்டு இந்த மந்திரத்தை கூறிய பிறகு இந்த எள்ளுருண்டையை சிவாலயத்திற்கு வரக்கூடிய பக்தர்களுக்கு தானமாக தந்தோம் என்றால் சனிபகவானால் ஏற்படக்கூடிய அத்தனை தோஷங்களும் கஷ்டங்களும் நீங்கி சனிபகவானின் அருளை பரிபூரணமாக பெற்றுக்கொள்ள முடியும்.
மந்திரம்
ஓம் சிவ சிவ ஓம்
இதையும் படிக்கலாமே: கோடி புண்ணியம் தரும் மகா சனி பிரதோஷ வழிபாடு
இந்த எளிமையான மந்திரத்தை இந்த பழத்தை வைத்துக்கொண்டு முழு நம்பிக்கையுடன் சிவபெருமானை நினைத்து கூறி இந்த பரிகாரங்களை நாம் செய்தோம் என்றால் கண்டிப்பான முறையில் சிவபெருமானின் அருளால் சனிபகவானால் ஏற்பட்ட தோஷங்களும் கஷ்டங்களும் நீங்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்