நாளை 13-1-2025 போகி பண்டிகை. அனைவரும் அதிகாலை வேலையில் எழுந்து வீட்டு வாசலுக்கு முன்பு தேவையற்ற பொருட்களை போட்டு நெருப்பில் பொசுக்குவார்கள். இதோடு சேர்த்து உங்கள் மனதில் இருக்கும் போட்டி, பொறாமை, தீய குணம், பகை இவைகளையும் போட்டு அந்த நெருப்பில் எரித்து விடுங்கள். கெட்ட எண்ணங்களையும் நெருப்போடு நெருப்பாக பொசித்து விடுங்கள்.
தை திருநாள் பிறக்கும் நாளில், உங்கள் மனது தூய்மையாக இருக்க வேண்டும். நாளைய தினம் போகி பண்டிகை அன்று அந்த நெருப்போடு குறிப்பிட்ட இந்த ஒரு பொருளை எரிக்கும் போது, உங்கள் கடன் சுமை குறையும் என்று சொல்லப்பட்டுள்ளது. அந்த பொருள் என்ன இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா.
கடன் தீர போகி பரிகாரம்
நாளை அதிகாலை 4:00 மணிக்கு முன்பாகவே போகி ஏற்றப்பட்டு இருக்க வேண்டும். வீட்டில் இருக்கும் ஆண்கள் போகி கொளுத்துவது ரொம்ப ரொம்ப சிறப்பு. ஒரே ஒரு பிரியாணி இலை எடுத்துக் கொள்ளுங்கள். பிரியாணி இலை இல்லை என்றால், வெள்ளை காகிதம் எடுத்துக் கொள்ளுங்கள். அதன் மேலே உங்கள் கடன் சுமைகளை எல்லாம் எழுதி விடுங்கள். எவ்வளவு கடன் தொகை இருக்கிறது, அந்த கடன் சீக்கிரம் அடைய வேண்டும் என்று எழுதுங்கள்.
அதை அந்த பிரியாணி இலையின் மேலே எழுதி, உங்கள் தலையை சுற்றி அந்த பிரியாணியிலையை நெருப்பில் போட்டு விட வேண்டும். பிரியாணி இலை இல்லாதவர்கள், பேப்பரில் உங்கள் பிரச்சனைகளை எழுதி உங்கள் தலையை மூன்று முறை சுற்றி அந்த நெருப்பில் போட்டு விட வேண்டும். இவ்வளவுதான். இது தவிர உங்களுக்கு மனதில் நீங்காத துன்பங்கள் துயரங்கள் ஏதேனும் இருந்தால் கூட, அதை ஒரு பேப்பரில் எழுதி நெருப்பில் போட்டு பொசுக்கினால் அந்த துன்பங்கள். தீரும் நோய்நொடி பிரச்சனைகள் தீரும் என்பது குறிப்பிடத்தக்கது.
சில வீடுகளில், சில ஊர்களில் போகி எரிக்கும் வழக்கம் இருக்காது. அப்படி இருந்தாலும் பரவாயில்லை. நீங்கள் வீட்டிற்கு வெளியே ஒரு மண் அகல் விளக்கோ அல்லது மெழுகுவர்த்தியோ ஏற்றி வைத்து, இந்த நெருப்பில் பிரியாணி இலையை, பேப்பரை கொடுத்து விட வேண்டும். நெருப்பில் அதை பொசிக்கிவிட்டால் உங்கள் பிரச்சனைகள் தீரும். போகி கொளுத்தாமல் விளக்கு நெருப்பில் இந்த பரிகாரத்தை செய்வதாக இருந்தாலும், நாளை அதிகாலை 4 மணிக்கு முன்பாக இந்த பரிகாரத்தை செய்து பிரார்த்தனை வைத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
பொங்கல் என்றாலே அந்த காலங்களில் சீர் செய்வது மிக மிக சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது. வீட்டில் இருக்கும் ஆண் மகன்கள், தங்களுடைய அக்கா தங்கைகளுக்கு கட்டாயம் செய்ய வேண்டிய சீரை மறக்காமல் செய்ய வேண்டும். உங்களால் முடிந்த, உங்கள் வருமானத்திற்கு உகந்த சீரை செய்து விடுங்கள். பிறந்த பெண்களின் மனம் குளிர்ந்தால் தான், பிறந்த வீடு சுபிட்சம் பெறும் என்பதும் ஒரு நம்பிக்கை.
பொங்கல் சீரை, போகி அன்றே கொண்டு போய் உங்கள் உடன் பிறந்த சகோதரிகளுக்கு செய்து விடுங்கள். சொந்தத்தில் பிறந்த சகோதரி இல்லை என்றாலும் சரி, சகோதரி உறவில் யார் இருக்கிறார்களோ, அவர்களுக்கு கட்டாயம் ஒரு ஆண் மகன், போகி என்று பொங்கல் சீர் செய்ய வேண்டும். இது ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம்.
இதையும் படிக்கலாமே: வீட்டை காக்கும் கடவுளின் அருளை பெற வழிபாடு
ஆனால் இன்றைய சூழ்நிலையில் இந்த சீர் செய்யும் வழக்கம் அழிந்து வந்து கொண்டிருக்கிறது. மேலே சொன்ன விஷயங்களை இந்த வருட போகி அன்று பின்பற்றி பாருங்கள். இந்த வருடம் முழுவதும் உங்கள் வாழ்க்கை ஓஹோ என இருக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.