- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபிரச்சினைகளை தீர்க்கும் அரச இலை பரிகாரம்

பிரச்சினைகளை தீர்க்கும் அரச இலை பரிகாரம்

- Advertisement -

பிரச்சனை இல்லாத மனிதன் என்று இந்த உலகத்தில் யாருமே இல்லை. ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு ரூபத்தில் ஏதாவது ஒரு பிரச்சனை என்பது இருந்து கொண்டு தான் இருக்கும். அந்த பிரச்சனை தீர்வதற்கு பல விதங்களில் நாம் முயற்சி செய்தாலும் தெய்வத்தின் அருள் இருந்தால் தான் அந்த முயற்சிகள் வெற்றி அடையும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் நமக்கு இருக்கக்கூடிய எப்பேர்ப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும் அந்த பிரச்சனை தீர்வதற்கு சனிக்கிழமை அன்று ஆஞ்சநேய வழிபாடு செய்யும் முறையைப் பற்றி நான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

அரச இலை பரிகாரம்

ஆஞ்சநேயர் வழிபாடு என்பது மிகவும் சிறப்பு பெற்ற வழிபாடு என்று நம் அனைவருக்கும் தெரியும். ஆஞ்சநேரிடம் எந்த ஒரு வேண்டுதலை முன்வைத்து நாம் வழிபாடு செய்தாலும் அந்த வேண்டுதல் விரைவிலேயே நிறைவேறும் என்று கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக காரிய தடையை நீக்கக்கூடிய அற்புதமான தெய்வம் ஆக தான் ஆஞ்சநேயர் திகழ்கிறார். அப்படிப்பட்ட ஆஞ்சநேரிடம் பிரச்சினைகள் தீர்வதற்கு செய்ய வேண்டிய ஒரு வழிப்பாட்டு முறையை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை ஒவ்வொரு வாரம் வரக்கூடிய சனிக்கிழமை அன்று செய்ய வேண்டும். தொடர்ச்சியாக 5 சனிக்கிழமை செய்தால் போதும். ஏதாவது ஒரு பிரச்சனையை மனதில் நினைத்துக் கொண்டு இந்த வழிபாட்டை தொடர்ச்சியாக 5 சனிக்கிழமை செய்யும்பொழுது 5 சனிக்கிழமை நிறைவடைவதற்கு உள்ளாகவே அந்த பிரச்சினை தீர்வதற்குரிய வழி என்பது கிடைத்துவிடும் என்று கூறப்படுகிறது.

இதற்கு நமக்கு தேவைப்படக்கூடிய பொருள் ஒன்றே ஒன்றுதான். அதுதான் அரச இலை. சனிக்கிழமை அன்று காலையில் ஒரு சொம்பு தண்ணீரை எடுத்துக்கொண்டு அருகில் இருக்கக்கூடிய அரசமரத்திற்கு செல்ல வேண்டும். அந்த அரச மரத்திற்கு தண்ணீரை ஊற்றிவிட்டு முழு மனதோடு வழிபாடு செய்து விட்டு அந்த அரச மரத்தில் இருந்து 9 அல்லது 21 என்று எண்ணிக்கையில் நல்ல இலைகளாக பார்த்து பறித்துக் கொள்ளுங்கள். பறித்து வந்த இந்த இலைகளை வீட்டிற்கு எடுத்து வந்து சுத்தம் செய்து ஈரம் இல்லாமல் துடைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்ததாக ஒரு சிறிய கிண்ணத்தில் மஞ்சளை போட்டு அதனுடன் ஜவ்வாது, பச்சை கற்பூரம் இவற்றை சேர்த்து சிறிதளவு மட்டும் பன்னீர் ஊற்றி கெட்டியாக குழைத்துக் கொள்ளுங்கள். இந்த மஞ்சளை ஒரு குச்சியில் எடுத்து ஒவ்வொரு இலையிலும் “ஸ்ரீ ராமா” என்று எழுத வேண்டும். இவ்வாறு எழுதி முடித்த பிறகு ஒரு சிவப்பு நிற நூலால் இந்த இலைகளையும் மாலையாக கட்ட வேண்டும். கட்டிய இந்த இலைகளை அருகில் இருக்கக்கூடிய ஆஞ்சநேயரின் ஆலயத்தில் ஆஞ்சநேயருக்கு சாற்ற வேண்டும். பிறகு உங்களுடைய பிரச்சினை என்னவோ அந்த பிரச்சினையை கூறி அது விரைவிலேயே தீர வேண்டும் என்று ஆஞ்சநேயரிடம் உங்களுடைய வேண்டுதலை வைக்க வேண்டும்.

இந்த முறையில் தொடர்ச்சியாக 5 வாரங்கள் முழுமனதோடு செய்பவர்களுக்கு கண்டிப்பான முறையில் அவர்களுடைய பிரச்சினைகள் தீரும் என்று கூறப்படுகிறது. ஐந்து வாரங்கள் நிறைவடைந்த பிறகு ஒரு சில வாரங்கள் விட்டுவிட்டு மறுபடியும் திரும்ப வேற ஏதாவது பிரச்சினைக்காக இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே:29-01-2025 அபிஜித் நட்சத்திர பரிகாரம்

கடவுளை வணங்கி விட்டோம் அனைத்தும் நடந்துவிடும் என்று நினைக்காமல் எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் அந்த பிரச்சினை தீருவதற்குரிய முயற்சியை மேற்கொள்வதோடு தெய்வ வழிபாட்டை செய்தோம் என்றால் தான் அந்த பிரச்சனைகள் தீரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்