- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதடைகளை நீக்கும் தை ஞாயிறு வாராகி வழிபாடு

தடைகளை நீக்கும் தை ஞாயிறு வாராகி வழிபாடு

- Advertisement -

நம்முடைய வாழ்க்கையில் நாம் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் ஒவ்வொன்றும் நல்ல முயற்சிகளாக இருக்க வேண்டும். அப்படி நல்ல முயற்சிகளை செய்து, அந்த முயற்சிகளில் எந்தவித தடைகளும் இல்லாமல் முழுமை அடையும் பொழுதுதான் நம்முடைய வாழ்க்கை சிறப்பான வாழ்க்கையாக அமையும். அப்படி ஒரு சிறப்பான வாழ்க்கை அமைவதற்கும் நாம் செய்யக்கூடிய செயல்களில் வெற்றிகள் கிடைப்பதற்கும் தை மாத ஞாயிற்றுக்கிழமை என்பது மிகவும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது. தை மாத ஞாயிற்றுக்கிழமை அன்று வாராகி அம்மனை ராகு காலத்தில் எந்த முறையில் வழிபட்டால் நம் வாழ்வில் இருக்கும் தடைகள் நீங்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

தை ஞாயிறு வாராகி வழிபாடு

தை மாதத்தில் செவ்வாய் கிழமையும், வெள்ளிக்கிழமையும் எந்த அளவிற்கு சிறப்பு வாய்ந்ததோ அதேபோல்தான் ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பு வாய்ந்தது. ஞாயிற்றுக்கிழமை என்பது சூரிய பகவானிற்குரிய கிழமை என்று நம் அனைவருக்கும் தெரியும். அந்த நாளில் சூரிய பகவானை நாம் வழிபாடு செய்யும்பொழுது நம் வாழ்வில் அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும் என்று கூறப்படுகிறது. அதே ஞாயிற்றுக்கிழமை அன்று வாராகி அம்மனை நாம் வழிபாடு செய்தோம் என்றால் நமக்கு இருக்கும் தடைகள் நீங்கும் என்று கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக வாராகி அம்மனுக்கு உகந்த ராகு காலத்தில் வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

- Advertisement -

அந்த வகையில் ஜனவரி மாதம் 26 ஆம் தேதி தை மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்று ராகு காலமான நான்கு முப்பது மணியிலிருந்து ஆறு மணிக்குள் வீட்டிலேயே வாராகி அம்மனை நினைத்து இந்த முறையில் பூஜை செய்பவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் தடைபட்ட அனைத்து விதமான காரியங்களும் தடை இன்றி நடைபெறும்.

ராகு கால நேரத்தில் வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய வாராகி அம்மனின் படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். வாராகி அம்மனுக்கு துளசி செவ்வரளி போன்றவற்றையால் மாலை கட்டி போட்டு விடுங்கள். பிறகு படத்திற்கு முன்பாக ஒரு சிறிய தாம்பாள தட்டை வைத்து அதில் பச்சரிசி பரப்பிக் கொள்ளுங்கள். அதற்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்றுக்கொள்ளுங்கள்.

- Advertisement -

வாராஹி அம்மனுக்கு நெய்வேத்தியமாக பானகத்தை வைக்க வேண்டும். இந்த பானகத்தை எலுமிச்சை பழச்சாறு, சுக்கு, வெல்லம், ஏலக்காய், பச்சை கற்பூரம் இவற்றால் தயார் செய்ய வேண்டும். மேலும் அந்த பானகத்தின் மேல் இரண்டு வேப்ப இலையை போட்டு வைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு வைத்துவிட்டு நாம் ஏற்று வைத்த தீபத்திற்கு முன்பாக ஒரு வெற்றிலையை வைத்துக் கொள்ளுங்கள். சிறிது தாழம்பூ குங்குமத்தை எடுத்துக்கொண்டு வாராகி அம்மனின் இந்த மந்திரத்தை 11 முறை கூறி குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

இவ்வாறு அர்ச்சனை செய்து முடித்த பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டு நிறைவு செய்துவிட்டு பானகத்தை வீட்டில் இருக்கக் கூடிய அனைவரும் பகிர்ந்து உண்ண வேண்டும். அந்த குங்குமத்தை தினமும் நெற்றியில் வைத்துக்கொள்ள வேண்டும். ஏதாவது முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது கண்டிப்பாக முறையில் இந்த குங்குமத்தை வைத்துக்கொண்டு செல்வதன் மூலம் அந்த காரியங்களில் இருக்கக்கூடிய தடைகள் நீங்கி வெற்றிகள் உண்டாகும்.

- Advertisement -

மந்திரம்

“ஓம் கச்சபேசாய வித்மஹே
மகாபலாய தீமஹி
தன்னோ கூர்ம பிரச்சோதயாத்”

இதையும் படிக்கலாமே:27-1-2025 தை பிரதோஷ வழிபாடு

வாராகி அம்மனை முழுமனதோடு நினைத்து இந்த முறையில் தை மாத ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் வழிபாடு செய்பவர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கையில் வெற்றிக்கு மேல் வெற்றி கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்