தை மாதம் அமாவாசை திதியானது நல்லபடியாக நிறைவடைந்தது. அமாவாசை முடிந்து மூன்றாவது நாள், சந்திர தரிசனம் என்பது வழிபாட்டில் மிக மிக முக்கியமான நாளாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது. காரணம் இந்த பிறை நிலவு சிவபெருமானின் தலையில் இருக்கும். இந்த பிறை நிலவை பார்த்தால் அந்த ஈசனை தரிசித்த புண்ணியம் நமக்கு கிடைக்கும். பிறை நிலாவை பார்த்தால் ஈசனையே பார்த்ததாக தான் அர்த்தம்.
நாளை 30-1-2025 வியாழக்கிழமை சந்திர தரிசன நாளாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது. இதே நாளில்தான் கரிநாளும் இருக்கிறது. கடனை அடைப்பதற்கும் அந்த எம்பெருமானின் ஆசிர்வாதத்தை பரிபூரணமாக பெறுவதற்கும், நாளைய தினம் செய்ய வேண்டிய பரிகார முறை என்ன, நாளைய தினம் காலை எழுந்தவுடன் உச்சரிக்க வேண்டிய மந்திரம் என்ன, ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
தை மாத சந்திர தரிசன வழிபாடு
நாளை காலை எழுந்து கண் விழித்தவுடன் உங்களுடைய மன கண்களில் ஈசனையும் பிறை நிலவையும் பார்த்துக் கொள்ளுங்கள். “ஓம் சந்திரமவுலீஸ்வராய நமஹ” என்ற மந்திரத்தை மூன்று முறை சொல்லிவிட்டு, செல்வ வளத்தோடு வாழ வேண்டும் என்ற வேண்டுதலை மனநிறைவோடு வையுங்கள் உங்களுக்கு யாராவது தனிப்பட்ட முறையில் குரு இருந்தால் யாரையாவது நீங்கள் குருவாக ஏற்றுக் கொண்டு அவர்களுடைய கொள்கைகளை பின்பற்றி வந்தால் அந்த சமயத்தில் குருவுக்கும் வணக்கம் சொல்லுங்கள். நாளை வியாழக்கிழமை குருவுக்கு வணக்கம் சொல்லி நன்றியை தெரிவிப்பது ரொம்ப ரொம்ப முக்கியம். பிறகு அன்றாட வேலையை துவங்குங்கள் நல்லதே நடக்கும்.
அடுத்தபடியாக கடன் சுமையிலிருந்து வெளிவர ஒரு எளிய பரிகாரம், ஜோதிடர்களால் நமக்கு சொல்லப்பட்டுள்ளது. வாங்கிய கடனுக்கு கரிநாளில் வட்டி கட்டினால் அந்த கடன் சுமையிலிருந்து சீக்கிரமாக வெளி வரலாம் என்பது ஜோதிடத்தில் நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது. அதிலும் நாளைய தினம் வியாழக்கிழமை குரு நாள்.
மூன்றாம் பிறை தரிசனமும் சேர்ந்து இருக்கிறது. நவகிரகங்களில் குரு பகவான் தான் நமக்கு பண பிரச்சனையை தீர்த்து வைப்பவர். கரிநாளில் உங்களுடைய வட்டியில் இருந்து ஒரு சிறு தொகையை திரும்பவும் கட்டிப் பாருங்கள். உங்களுடைய கடன் சுமை எந்த அளவுக்கு குறைகிறது என்பதை நீங்களே அடுத்த மூன்று மாதத்திற்குள் கண்கூடாக பார்க்கலாம்.
ஒன்றுமே இல்லை. நாளை கரிநாள் என்று உங்களுக்கு தெரிந்து விட்டது. காலண்டரில் பார்த்தாலே தெரியும் கரிநாள் என்று போட்டிருக்கும். (மாதம் தோறும் வரக்கூடிய கரியநாளிலும் வட்டியை செலுத்தலாம்). குலதெய்வத்தையும் ஈசனையும் மனதார நினைத்துக் கொள்ளுங்கள். நாளை காலை 10:30 மணியிலிருந்து 11:30 மணிக்குள் வாங்கிய கடனுக்கு வட்டியை கட்டுங்கள். அவ்வளவு தான்.
கைநீட்டி ஒரு நபரிடம் ஒரு லட்ச ரூபாய் கடன் வாங்கி விட்டீர்கள். அந்த ஒரு லட்ச ரூபாய் கடனுக்கு, மாதம் ஆயிரம் ரூபாய் வட்டி கட்டுவதாக வைத்துக் கொள்வோம். அந்த ஆயிரம் ரூபாய் வட்டியை நாளைக்கு கொடுக்கணும். அவ்வளவுதான். அந்த ஒரு லட்ச ரூபாய் கடனும் சீக்கிரம் அடையும். திரும்பத் திரும்ப கடன் வாங்க கூடிய சூழ்நிலைக்கும் நீங்க தள்ளப்பட மாட்டீங்க. கரிநாளில் மேலே குறிப்பிட்ட அந்த நேரத்தில் வட்டி கட்ட முடியவில்லை என்றாலும் பரவாயில்லை.
நாளை தினம் எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் உங்களது வட்டி தொகையை செலுத்தலாம். சில பேர் லட்சக்கணக்கில் வட்டி தொகையை செலுத்துவார்கள். அப்படியாக இருந்தால் மொத்த பணத்தையும் வட்டியாக நாளை கட்ட முடியாது என்றாலும், அந்த தொகையில் இருந்து ஒரு குறிப்பிட்ட சிறு தொகையை கரிநாளில் திருப்பி கட்டும் போது, வட்டி கட்ட கூடிய சுமை நமக்கு படிப்படியாக குறையும். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இதையும் படிக்கலாமே: தை அமாவாசை வழிபாட்டை தவறவிட்டவர்கள் செய்ய வேண்டியது
சில பேர் நகையை வங்கியிலோ அல்லது அடமானக் கடையிலோ அடமானத்திற்கு வைத்திருப்பார்கள். அதற்கான வட்டியை நாளைக்கு கட்டினால் அந்த நகையை சீக்கிரம் மீட்க கூடிய வாய்ப்புகளும் உங்களுக்கு கிடைக்கும். சொத்து பத்திரங்களை அடமானத்தில் வைத்திருந்தாலும் இதேதான். நாளை தினத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.