நம்முடைய வாழ்க்கையை நாம் தினமும் நடத்துவதற்கு தேவையான அனைத்து விஷயங்களையும் தந்து நம்மை காப்பாற்ற கூடிய தெய்வமாக திகழக்கூடியவர் பெருமாள். அப்படிப்பட்ட பெருமாளுக்கு உரிய நட்சத்திரம் திருவோண நட்சத்திரம். மேலும் பெருமாளுக்கு உரிய கிழமையாக புதன் கிழமை திகழ்த்தது. இந்த திருவோண நட்சத்திரமும் புதன்கிழமையும் சேர்ந்து வரக்கூடிய இன்றைய நாளில் தை அமாவாசையும் வருகிறது. இது மிகவும் சிறப்பு மிகுந்ததாக கருதப்படுகிறது. இன்றைய நாளில் நாம் எந்த முறையில் பெருமாளை வழிபாடு செய்தால் ராஜயோகம் கிடைக்கும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
தை அமாவாசை வழிபாடு
அமாவாசை, பௌர்ணமி போன்ற தினங்களில் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு மிகுந்ததாக கூறப்படுகிறது. மகாலட்சுமி தாயாரின் பரிபூரணமான அருளை பெறுவதற்கு உகந்த நாட்கள் ஆகவே இந்த நாட்கள் கருதப்படுகின்றன. அப்படிப்பட்ட மகாலட்சுமிக்குரிய தை அமாவாசை நாள் அன்று பெருமாளுக்குரிய திருவோண நட்சத்திரமும் பெருமாளுக்கு உரிய புதன்கிழமையும் சேர்ந்து வருவது கூடுதல் சிறப்பை தரக்கூடியதாக திகழ்கிறது. இன்றைய நாளில் மகாலட்சுமி தாயாரை வழிபடுவதை விட பெருமாளை நாம் வழிபாடு செய்தோம் என்றால் பெருமாளின் அருளோடு மகாலட்சுமி தாயாரின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும்.
இந்த வழிபாட்டை மாலை 6:00 மணிக்கு மேல் இரவு 12 மணிக்குள் எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம். வீட்டில் கண்டிப்பாக முறையில் பெருமாளின் படம் இருக்கும். பெருமானின் படத்திற்கு முன்பாக அகல் விளக்கில் நெய் ஊற்றி தாமரை தண்டு திரி அல்லது பஞ்சு திரி இவை இரண்டில் ஏதாவது ஒன்றை போட்டு தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள். அதேபோல் ஒரு டம்ளரில் சுத்தமான தண்ணீர், இரண்டு துளசி இலைகள், இரண்டு ஏலக்காய் இதையும் போட்டு பெருமாளுக்கு முன்பாக வைத்து விடுங்கள்.
இப்பொழுது நாம் ஏற்றி வைத்த தீபத்தை பார்த்து நம்முடைய பணகஷ்டம், மன கஷ்டம் எதுவெல்லாம் இருக்கிறதோ அவை அனைத்தையும் கூற வேண்டும். அந்த தீபத்தை பார்த்து கூறிய பிறகு பெருமாளுக்கு உரிய பின்வரும் இந்த நாமங்களை ஒரு முறை முழு மனதோடு கூறி மலர்கள் அல்லது துளசி இலைகளால் அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டிவிட்டு பெருமாளுக்கு முன்பாக நாம் வைத்திருந்த தீர்த்தத்தை வீட்டில் இருக்கக்கூடிய அனைவரும் அருந்த வேண்டும். இந்த முறையில் ஒவ்வொரு திருவோண நட்சத்திர நாள் அன்றும் நாம் வழிபாடு செய்தோம் என்றால் பெருமானின் அருளால் ராஜயோகம் கிடைப்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
மந்திரம்
“ஓம் சங்கர்ஷனாய நமஹ
ஓம் நாராயணாய நமஹ
ஓம் வாசுதேவாய நமஹ
ஓம் மாதவாய நமஹ
ஓம் ப்ரத்யும்னாய நமஹ
ஓம் கோவிந்தாய நமஹ
ஓம் அனிருத்தாய நமஹ
ஓம் விஷ்ணவே நமஹ
ஓம் புருஷோத்தமாய நமஹ
ஓம் மதுசூதனாய நமஹ
ஓம் அதோக்ஷஜாய நமஹ
ஓம் த்ரிவிக்ரமாய நமஹ
ஓம் லட்சுமி நரசிம்ஹாய நமஹ
ஓம் வாமனாய நமஹ
ஓம் அச்சுதாய நமஹ
ஓம் ஸ்ரீதராய நமஹ
ஓம் ஜனார்தனாய நமஹ
ஓம் ஹ்ரிஷீகேசாய நமஹ
ஓம் உபேந்த்ராய நமஹ
ஓம் பத்மநாபாய நமஹ
ஓம் ஹரயே நமஹ
ஓம் தாமோதராய நமஹ
ஓம் ஸ்ரீ கிருஷ்ணாய நமஹ”
இதையும் படிக்கலாமே:செல்வம் பெருக்கும் வெள்ளிக்கிழமை பரிகாரம்
காக்கும் கடவுளாக திகழக்கூடிய பெருமாளை வழிபாடு செய்வதற்கு உரிய நாளான இன்றைய நாளை தவிர விடாமல் வழிபாடு செய்து பெருமாளின் அருளால் வாழ்க்கையில் ராஜ யோகத்தை பெறுவோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.