இன்றிலிருந்து 9 நாள் என்ன விசேஷம் இருக்கிறது. நிறைய பேருக்கு இது தெரியாது. ஜனவரி 30 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 7ஆம் தேதி வரை சியாமளா நவராத்திரி ஆனது கொண்டாடப்படும். அதாவது தை மாதம் அமாவாசை திதி முடிந்தவுடன் அடுத்து வரக்கூடிய ஒன்பது நாட்கள் கடைபிடிக்கக்கூடிய வழிபாட்டு முறை தான் சியாமளா நவராத்திரி. இந்த நவராத்திரி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வெகு விமசியாக நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நவராத்திரி வழிபாடு வீட்டிற்கு சுபிட்சத்தை கொடுக்கும். நவராத்திரி என்றாலே நமக்கு புரட்டாசி மாதம் வரக்கூடிய நவராத்திரி மட்டும்தான் தெரியும். ஆனால் ஆஷாட நவராத்திரி, சாரதா நவராத்திரி, சியாமளா நவராத்திரி இப்படி நவராத்திரிகளும் பல வகையாக கொண்டாடப்படுகிறது.
சியாமளா நவராத்திரி 2025
சரி, இந்த நவராத்திரி வழிபாட்டை குறிப்பாக யார் செய்ய வேண்டும். கல்வியில் சிறந்த விளங்க வேண்டும், ஞானத்தில் சிறந்து விளங்க வேண்டும், அறிவுக்கடலில் மூழ்கி நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்த சியாமலான நவராத்திரி வழிபாடு அவசியம் தேவை. கலைத்துறையினர்கள் இந்த 9 நாளும் அம்பாளை வழிபாடு செய்யலாம்.
சங்கீதம் படிப்பவர்கள் நாட்டியம் கற்றுக் கொள்பவர்கள் இப்படி யாராக இருந்தாலும் இந்த ஒன்பது நாட்களும் சியாமளா தேவியை மனதார நினைத்து வழிபாடு செய்தால், உங்களுடைய துறையில் நீங்கள் மேலும் மேலும் முன்னேற்றம் அடைவீர்கள். இன்னும் ஒரு சில மாதங்களில் பிள்ளைகளுக்கு பொது தேர்வானது துவங்கவிருக்கிறது.
பொதுத்தேர்வில் உங்களுடைய பிள்ளைகள் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும், பிள்ளைகள் படிப்பில் மந்தமாகவே இருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கும் இந்த வழிபாடு சிறந்த பலனைத் தரும். நன்றாக படிக்கக்கூடிய பிள்ளைகள் இந்த வழிபாட்டை செய்தால் மாநிலத்தில் முதல் இடத்தைப் பிடிக்கக் கூடிய வாய்ப்புகள் கூட இருக்கிறது சரி இந்த வழிபாட்டை வீட்டில் இருந்தபடியே எளிமையாக எப்படி செய்வது.
சியாமளா நவராத்திரி வழிபாடு எப்படி செய்வது
இந்த துவங்கி மாலை நேரத்தில் தினமும் பூஜை அறையில், அம்பாளின் திரு உருவப்படத்திற்கு முன்பாக ஒரு விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். மதுரை மீனாட்சி அம்மன் திரு உருவப் படம் உங்கள் வீட்டில் இருக்கா, ரொம்ப சிறப்பு. அந்த அம்பாளுக்கு வாசனையை நிறைந்த பூக்களை போட்டு, பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்து, மனம் உருக வீட்டில் இருக்கும் பெற்றவர்கள், பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும் என்று ஏதாவது ஒரு நெய்வேத்தியம் வைத்து வழிபாட்டை மேற்கொள்ளலாம்.
வாழைப்பழம் கல்கண்டு நெய்வேத்தியமாக வைத்தால் கூட போதும். உங்களுடைய பிள்ளைகள் கொஞ்சம் பெரிய பிள்ளைகள் என்றால் ஒரு நோட்டு புத்தகத்தை எடுத்து வைத்து அதில் “ஓம் க்லீம் மாதங்கி தேவியை நமஹ!” என்ற மந்திரத்தை 108 முறை எழுதச் சொல்லுங்கள். சியாமளா தேவியின் இன்னொரு ரூபம் தான் மாதங்கி தேவி. ஒரு நாளில் 108 முறை எழுத முடியவில்லை என்றாலும், ஒரு நாளைக்கு 11 முறை என்று கணக்கில் எழுதலாம்.
எழுத முடியாது என்ற பிள்ளைகளை வாயால் இந்த மந்திரத்தை சொல்லச் சொல்லுங்கள். நிச்சயமாக அவர்களுடைய புத்தி ஒருநிலைப்படும். நிறைய படிக்க வேண்டும் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற ஆர்வம் அவர்களுக்குள்ளவே இருக்கும். தேவையற்ற நண்பர்கள் அவர்களை விட்டு தானாக விலகி விடுவார்கள். நல்லதே நடக்கும். பிள்ளைகளுடைய எதிர்காலம் சிறக்கும். இந்த வழிபாட்டை பெற்ற தாய் தந்தையர்களும் செய்யலாம்.
இதையும் படிக்கலாமே: தை வெள்ளிக்கிழமை மகாலட்சுமி வீட்டிற்கு வர மந்திரம்
பிள்ளைகளையும் இந்த வழிபாட்டை செய்யச் சொல்லலாம். மந்திரத்தைச் சொல்லி முடித்துவிட்டு மந்திரத்தை எழுதி முடித்துவிட்டு கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள் மொத்தமாக இந்த பூஜையை செய்ய 10 நிமிடம் எடுத்தாலே அதுவே அதிகம் இந்த ஒன்பது நாளும் மாதங்கி வழிபாட்டை மேற்கொள்பவர்களுக்கு, நிச்சயம் நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.