- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகோடி ரூபாய் கடனும் காணாமல் போக மூன்றாம் பிறை பரிகாரம்

கோடி ரூபாய் கடனும் காணாமல் போக மூன்றாம் பிறை பரிகாரம்

- Advertisement -

பணமே வாழ்க்கைக்கு பிரதானமாக திகழ்கிறது. அதனால்தான் பணத்தை அதிக அளவில் சம்பாதிக்க வேண்டும் என்று அனைவரும் ஆசைப்படுகிறார்கள். எவ்வளவுதான் கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும் ஏதாவது ஒரு இக்கட்டான சூழ்நிலையில் பிறரிடமிருந்து கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை வந்திருக்கும் அல்லது வீட்டில் இருக்கக்கூடிய நகைகளை அடமானத்தில் வைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகி இருக்கும். மறுபடியும் அதை திருப்புவதற்கு எவ்வளவு முயற்சி செய்தாலும் அந்த முயற்சிகள் வெற்றி பெறாமல் போகும் பட்சத்தில் தை மாதத்தில் வரக்கூடிய மூன்றாம் பிறை நாளன்று செய்ய வேண்டிய பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

மூன்றாம் பிறை பரிகாரம்

ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய மூன்றாம் பிறை என்பது மிகவும் சிறப்புக்குரியது என்று நம் அனைவருக்குமே தெரியும். அதிலும் இந்த மாதம் தை மாதம். தை மாதமே விசேஷம். தை மாதத்தில் வரக்கூடிய மூன்றாம் பிறை அதைவிட விஷசம். இந்த மூன்றாம் பிறை வரக்கூடிய கிழமை என்பது வியாழக்கிழமை. மூன்றாம் பிறை தோன்றும் நேரம் என்பது குபேர நேரம். அதனால் இந்த குபேர நேரத்தில் மூன்றாம் பிறை சந்திரனை தரிசனம் செய்பவர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. சந்திர தரிசனம் செய்ய இயலவில்லை என்பவர்கள் தங்களுடைய பணரீதியான பிரச்சினைகள் தீர்வதற்கு செய்ய வேண்டிய பரிகாரத்தை இப்பொழுது பார்ப்போம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை இன்று மாலை 6:00 மணியிலிருந்து இரவு 12 மணிக்குள் தங்களுடைய விருப்பத்திற்கு ஏற்றார் போல் எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம். இதற்கு ஒரே ஒரு ஸ்பூன் பச்சரிசி இருந்தால் போதும். முதலில் மேற்கு பார்த்தவாறு அமர்ந்து கொள்ளுங்கள். உங்களுடைய வலது கையில் பச்சரிசியை வைத்து மூடிக்கொள்ளுங்கள். அதை உங்களுடைய இடது கையின் மேல் வைத்துவிட்டு அப்படியே உங்களுடைய மடியில் வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது சந்திர பகவானை நினைத்து பின்வரும் இந்த ஒரு மந்திரத்தை குறைந்தபட்சம் கால் மணி நேரத்திலிருந்து அதிகபட்சம் அரை மணி நேரம் வரை கூற வேண்டும்.

சந்திர பகவானையும் குபேர பகவானையும் நினைத்து கடன் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் தீர வேண்டும், பண வரவு அதிகரிக்க வேண்டும், பண வசியம் உண்டாக வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும். பிறகு இந்த பச்சரிசியை எடுத்து வெள்ளை நிற துணியில் வைத்து மூட்டையாக கட்டி பணம் இருக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். ஆறு மதத்திற்கு ஒருமுறை இந்த அரிசியை கால்படாத இடத்தில் போட்டுவிட்டு புதிதாக பச்சரிசியை வைத்து விட வேண்டும்.

- Advertisement -

இப்படி செய்வதன் மூலம் நமக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய கடன் பிரச்சினைகள் அனைத்தும் தீர்வதோடு பண தேவைகள் பூர்த்தியடையும். அடமானத்தில் இருக்கக்கூடிய நகைகளும் திரும்ப கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். பண வசியம் உண்டாகும். அன்றாடம் குடும்பத்தை நடத்துவதற்கு கூட போதுமான அளவு பணவரவு இல்லை என்று கஷ்டப்படுபவர்களுக்கு கூட இந்த பரிகாரத்தின் மூலியமாக தாராள பணவரவு உண்டாக்கும்.

மந்திரம்

- Advertisement -

அமுத சம்பூதனம் வசி வசி

இதையும் படிக்கலாமே:தங்கம் சேர சுக்கிர பரிகாரம்

இந்த தாந்திரீக பரிகாரத்தை முழுமனதுடன் யார் ஒருவர் இன்று இரவுக்குள் செய்கிறார்களோ அவர்களுக்கு பண வசியம் ஏற்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. முழு நம்பிக்கையுடன் செய்து முழு பலனையும் பெறுங்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்