இப்போதுள்ள சூழ்நிலையில் பணத்தை வாங்கியவர்களை விட பணத்தை கொடுத்தவர்கள் தான் பெரிதும் கவலைப்பட வேண்டும். ஏனெனில் அவசியத்திற்கும் தேவைக்கும் பணத்தை வாங்கும் பொழுது அவர்கள் எப்படியாவது பேசி வாங்கி விடுகிறார்கள். ஆனால் வாங்கிய அத்தனை பேரும் சொன்ன நேரத்திலோ அல்லது சொன்னபடியே பணத்தை திருப்பித் தருவதில்லை. இப்படி பணத்தை கொடுத்து ஏமாந்து நிற்பவர்கள் அந்த பணத்தை திரும்ப பெற செய்ய வேண்டிய எளிய பரிகார முறை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.
கொடுத்த பணத்தை திரும்ப பெற பரிகாரம்
இந்த பரிகாரம் கடனாக பணத்தை கொடுத்து இருந்தாலும் சரி அல்லது கைமாறாக கொடுத்திருந்தாலும் சரி யாராக இருந்தாலும் இந்த பரிகாரம் செய்யலாம். இந்த பரிகாரத்தை அமாவாசை தொடர்ந்து வரும் சனிக்கிழமையில் செய்யத் தொடங்க வேண்டும். இந்த பரிகாரம் செய்ய நமக்கு தேவையான பொருள் ஒரு சில்வர் பாத்திரம், கைப்பிடி அளவு கருப்பு உளுந்து, சுத்தமான பசுந்தயிர்.
வெள்ளிக்கிழமை இரவு இந்த பாத்திரத்தை சுத்தம் செய்து அதில் கருப்பு உளுந்தை போட வேண்டும். அந்த கருப்பு உளுந்து மூழ்கும் அளவிற்கு தயிர் ஊற்றி ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் அதாவது சனிக்கிழமை அன்று எழுந்து குளித்து முடித்த பிறகு ஊற வைத்த இந்த கருப்பு உளுந்தை அரச மரத்தின் வேர் பகுதியில் கொட்ட வேண்டும்.
இந்த பரிகாரத்திற்காக உளுந்து ஊற வைப்பது முதல் மறுநாள் கொண்டு மரத்தின் வேரில் ஊற்றும் வரை பணத்தை திரும்பப் பெற வேண்டும் உங்களிடம் அது வந்து சேர வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அமாவாசை தொடர்ந்து வந்த சனிக்கிழமையில் தொடங்கும் இந்த பரிகாரத்தை அதன்பின் தொடர்ந்து எட்டு வாரம் செய்ய வேண்டும். இந்த பரிகாரமானது நிச்சயம் நல்ல பலனை தரும் என்று சொல்லப்படுகிறது.
பொதுவாக அரச மரத்தில் அனைத்து தேவர்களும் வாசம் செய்வதாக ஒரு ஐதீகம் உண்டு. அதிலும் சனிக்கிழமை அன்று பெருமாளும் மகாலட்சுமி தாயாரும் வாசம் செய்வதாக சொல்லப்படுகிறது. ஆகையால் தான் பணம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் சனிக்கிழமையில் இந்த ஆலமர பரிகாரம் செய்யும் பொழுது நல்ல பலனை தரும் என்றும் சொல்லப்படுகிறது. உங்களிடம் பணம் வாங்கியவர்கள் திரும்ப தரக்கூடிய சூழ்நிலையிலே இல்லாமல் இருந்தாலும் கூட அதை திருப்பித் தருவதற்கான சூழ்நிலை அவர்களுக்கு இந்த பரிகாரம் ஏற்படுத்தித் தரும் என்று சொல்லப்படுகிறது.
இதையும் படிக்கலாமே:25-2-2025 அபிஜித் நட்சத்திர நேரம்
ஆகையால் பணத்தை கொடுத்து திரும்ப வருமா வராதா என்ற அச்சத்தில் இருப்பவர்கள் சனிக்கிழமையில் இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது அதற்கான பலன் நிச்சயம் கிடைத்து உங்கள் பணம் உங்களுக்கு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்து பலனை பெறலாம் என்ற தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.