- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசகல பாவங்களை நீக்கும் ரதசப்தமி குளியல் பரிகாரம்

சகல பாவங்களை நீக்கும் ரதசப்தமி குளியல் பரிகாரம்

- Advertisement -

இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு உயிரினமும் தங்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ பல விதங்களில் பாவங்களை செய்கிறார்கள். அதிலும் குறிப்பாக மனிதனாக பிறந்து விட்டால் அவர் செய்யக்கூடிய பாவங்கள் கணக்கில் அடங்காமலேயே இருக்கும். நம்முடைய கைகளால் பிறருக்கு பாவங்களை செய்தாலோ அல்லது பிறருக்கு பாவம் நடக்கும் பொழுது அதை நாம் பார்த்தாலோ, பாவ வழியில் நடந்தாலோ நமக்கு பாவங்கள் என்பது உண்டாகும். இப்படிப்பட்ட பாவங்களை நீக்குவதற்கு உதவக்கூடிய மிகவும் முக்கியமான ஒரு நாளாக தான் ரதசப்தமி திகழ்கிறது. அப்படிப்பட்ட நாளில் நாம் எந்த முறையில் குளித்தால் நம்முடைய பாவங்கள் தீரும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ரதசப்தமி குளியல் பரிகாரம்

சூரிய பகவான் அவதரித்த தினமாக திகழக்கூடியது தான் ரதசப்தமி. அப்படிப்பட்ட நாளில் சூரிய பகவானை நாம் வழிபாடு செய்வதன் மூலம் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது. இந்த வழிபாட்டை மிகவும் எளிய முறையில் நாம் செய்துவிடலாம். முழுமனதோடு சூரிய பகவானை நினைத்து செய்ய வேண்டும் என்பதுதான் குறிப்பிடத்தக்கது. இந்த வழிபாட்டை சூரிய உதயம் ஆகும் பொழுது அல்லது சூரிய உதயம் ஆகுவதற்கு முன்பாகவோ செய்து விட வேண்டும்.

- Advertisement -

அந்த வகையில் பிப்ரவரி மாதம் நான்காம் தேதி சூரிய உதயம் என்பது காலை 6 மணி 34 நிமிடங்கள் நடைபெறுகிறது. அந்த நேரத்திலோ அல்லது அதற்கு முன்பாகவோ இந்த குளியல் பரிகாரத்தை நாம் செய்ய வேண்டும். இதற்கு நமக்கு தேவைப்படக்கூடியதுஎருக்கு இலை. எருக்கு இலை என்பது சூரிய சக்தியை குறிக்கக்கூடிய ஒரு ஆன்மீக இலையாக திகழ்கிறது. ஒருவருக்கு இந்த இலை ஏழு என்ற எண்ணிக்கையில் தேவைப்படும். எத்தனை நபர்கள் வீட்டில் இருக்கிறார்களோ அத்தனை நபர்களுக்கும் ஒவ்வொருவருக்கும் ஏழு என்ற எண்ணிக்கையில் இந்த இலையை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு வேளை அவ்வளவு எண்ணிக்கையில் இலைகள் கிடைக்கவில்லை என்னும் பட்சத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு இலை என்ற வீதமும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

இதற்கு சாதாரண எருக்கு அல்லது வெள்ளை எருக்கு என்று எதை வேண்டுமானாலும் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். இலையின் வெளிப்புறம் நரம்புகள் தெரியும் அல்லவா? அந்த இடத்தில் நடுவில் மஞ்சளை வைத்துக் கொள்ளுங்கள். மேல் புறமாக இருக்கும் பகுதியை தான் நம்முடைய உடம்பில் வைக்க வேண்டும். நம்முடைய மூளையால் நாம் செய்த பாவங்கள் தீர வேண்டும் என்பதற்காக தலையில் ஒரு இலையும், கண்களால் பார்க்கக்கூடாததை பார்த்து பாவத்தை ஏற்படுத்திருப்போம் அல்லவா? அதற்காக கண்களிலும், கைகளால் செய்த பாவங்கள் போக வேண்டும் என்பதற்காக கைகளிலும், தீய வழியில் நடந்து அதனால் பாவங்கள் ஏற்படும் அல்லவா? அதற்காக கால்களிலும் இந்த இலைகளை வைத்து தண்ணீரை ஊற்றி குளிக்க வேண்டும்.

- Advertisement -

ஒரு இலை மட்டும் இருக்கிறது என்னும் பட்சத்தில் தலையில் மட்டும் இந்த இலையை வைத்து குளித்தால் கூட நல்ல பலன் கிடைக்கும். இந்த முறையில் நாம் குளிக்கும் பொழுது கிழக்கு பார்த்தவாறு நின்று கொண்டு தான் குளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு குளித்து முடித்துவிட்டு இந்த இலையை கால்படாத இடத்தில் போட்டு விடுங்கள். சூரிய பகவான் உதயமாகும் பொழுது சூரிய பகவானை பார்த்து மனதார “ஓம் சூரிய நாராயணரே போற்றி” என்னும் மந்திரத்தை முழுமனதோடு தங்களால் இயன்ற அளவு கூறலாம். அதே போல் சூரிய பகவானுக்கு நீர் ஊற்றியும் வழிபாடு செய்யலாம்.

இதையும் படிக்கலாமே:பீரோவில் கட்டு கட்டாய் பணம் சேர
இந்த முறையில் சூரிய பகவான் அவதரித்த நாளான ரத சப்தமி நாளன்று நாம் குளித்து சூரிய பகவானே வழிபாடு செய்யும்பொழுது இதுவரை நாம் செய்திருந்த பாவங்கள் அனைத்தும் நீங்கும். அதன் மூலம் நல்ல வாழ்க்கை அமையும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்