- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசுபிட்சம் உண்டாக செய்ய வேண்டிய தானம்

சுபிட்சம் உண்டாக செய்ய வேண்டிய தானம்

- Advertisement -

ஒரு குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் அந்த குடும்பத்தில் இருக்கக்கூடிய தலைவர் சிறப்பான முறையில் குடும்பத்தை வழிநடத்திச் செல்ல வேண்டும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட குடும்பத் தலைவருடைய வாழ்க்கையிலோ, தொழிலிலோ இருக்க கூடிய தடைகளை விலக்கி அவர்களுடைய முன்னேற்றத்திற்கு வழிவகை செய்யக்கூடிய ஒரு அற்புதமான வழிபாடாக தான் தை கிருத்திகை வழிபாடு திகழ்கிறது. அன்றைய தினத்தில் குடும்பத்தில் இருக்கக்கூடிய பெண்கள் குடும்ப தலைவருக்காக எந்த பொருளை முருகன் கோவிலுக்கு வாங்கி கொடுத்தால் குடும்பத் தலைவரின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

சுபிட்சம் உண்டாக செய்ய வேண்டிய தானம்

திருமணமான பெண்கள் இருக்கக்கூடிய வீட்டில் அவர்களுடைய கணவன் குடும்ப தலைவராக இருப்பார். ஒருவேளை திருமணம் ஆகவில்லை என்னும் பட்சத்தில் அவர்களுடைய தந்தையே குடும்பத்தலைவராக இருப்பார். திருமணம் ஆகியும் தனியாக வாழ்கிறோம் என்னும் பட்சத்தில் அவர்களுடன் இருக்கக்கூடிய நபர்களில் யார் வயதில் மூத்தவரோ அவர்களை குடும்பத் தலைவராக ஏற்றுக்கொள்ள வேண்டும். இப்படி குடும்ப தலைவராக இருக்கக் கூடியவரின் ராசிக்கு ஏற்ப தை கிருத்திகை நாளன்று முருகப்பெருமானுக்கு வாங்கி தர வேண்டிய பொருளை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

தை கிருத்திகை என்பது மிகவும் சிறப்புக்குரிய கிருத்திகை என்று நம் அனைவருக்குமே தெரியும். அன்றைய தினத்தில் விரதம் இருந்து வழிபாடு செய்பவர்கள் பலர் இருக்கிறார்கள். வீட்டிலேயே வழிபாடு செய்பவர்களும் இருக்கிறார்கள். ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்பவர்களும் இருக்கிறார்கள். விரதம் இருந்தும் விரதம் இருக்காமல் வழிபாடு செய்பவர்கள் இப்படி பலதரப்பட்ட முறையில் வழிபாடு செய்வதுண்டு. எப்படி இருந்தாலும் முருகப்பெருமானை அன்றைய தினம் வழிபாடு செய்தாலே நல்ல பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

குடும்பம் சுபிட்சமாக வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் குடும்பத் தலைவரின் ராசிக்கு ஏற்ப அருகில் இருக்கக்கூடிய முருகன் ஆலயத்திற்கு சென்று பின்வரும் இந்த பொருட்களை வாங்கித் தந்து குடும்ப தலைவரின் பெயரில் அர்ச்சனை செய்து வழிபாடு செய்வதன் மூலம் அந்த குடும்பத் தலைவருக்கு நல்ல காலம் பிறக்கும். அவருக்கு நல்ல காலம் பிறந்து விட்டாலே குடும்பத்திற்கும் நல்ல காலம் பிறந்துவிடும் அல்லவா? அனைத்து விதமான செல்வங்களும் வந்து சேர ஆரம்பிக்கும் என்றே கூறலாம். சரி இப்பொழுது எந்தெந்த ராசிக்கு என்னென்ன பொருட்களை வாங்கி தர வேண்டும் என்று தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

மேஷ ராசிக்காரர்களுக்கு வாசனை நிறைந்த மலர்களை வாங்கித் தர வேண்டும். ரிஷப ராசிக்காரர்களுக்கு அபிஷேகத்திற்கு மஞ்சள் வாங்கி தர வேண்டும். மிதுன ராசிக்காரர்களுக்கு ஆலயத்தில் தீபம் ஏற்றுவதற்கு தீப எண்ணெய் வாங்கித் தர வேண்டும். கடக ராசிக்காரர்களுக்கு அந்த தீபத்தை ஏற்றுவதற்கு பயன்படுத்தக்கூடிய திரியை வாங்கித் தர வேண்டும். சிம்ம ராசிக்காரர்களுக்கு கோதுமையோ அல்லது கோதுமை மாவால் செய்யப்பட்ட உணவுப் பொருட்களையோ ஆலயத்திற்கு வாங்கித் தர வேண்டும்.

கன்னி ராசிக்காரர்களுக்கு தீபம் ஏற்றுவதற்குரிய எண்ணெய் வாங்கித் தர வேண்டும். துலாம் ராசிக்காரர்களுக்கு மஞ்சள் நிற மலர்களை வாங்கித் தர வேண்டும். விருச்சிக ராசிக்காரர்களுக்கு நெய் வாங்கித் தர வேண்டும். தனுசு ராசிக்காரர்களுக்கு தீபம் ஏற்றுவதற்கு எண்ணெய் வாங்கித் தர வேண்டும். மகர ராசிக்காரர்களுக்கு முருகப்பெருமானுக்கு சாற்றுவதற்காக வஸ்திரம் வாங்கித் தர வேண்டும். கும்ப ராசிக்காரர்களுக்கு தூப தீபம் காட்டுவதற்கு தேவையான ஊதுபத்தி, சாம்பிராணி, கற்பூரம் போன்றவற்றை வாங்கித் தர வேண்டும். மீன ராசிக்காரர்களுக்கு முருகனுக்கு அபிஷேகத்திற்கு இளநீர் வாங்கி தர வேண்டும்.

இதையும் படிக்கலாமே:குபேர வாழ்க்கை அருளும் தை குபேர கிருத்திகை

இந்த முறையில் குடும்பத்தில் இருக்கக்கூடிய பெண்கள் இந்த பொருட்களை வாங்கி முருகப்பெருமான் ஆலயத்திற்கு தருவதன் மூலம் அவர்கள் குடும்பத்தில் நல்ல முன்னேற்றமும், சுபிட்சமும் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்