- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதைப்பூசம் 6 ரூபாய் பரிகாரம்

தைப்பூசம் 6 ரூபாய் பரிகாரம்

- Advertisement -

ஒவ்வொருவர் மனதிலும் இன்று ஆறாத வடுவாக, ஆறாத ரணமாக இருப்பது கடன் பிரச்சனை தான். கடன் இல்லாத வாழ்க்கை கவலை இல்லாத வாழ்க்கை. கடன் இல்லாத வாழ்க்கை கஷ்டம் இல்லாத வாழ்க்கை. கடன் இல்லாத வாழ்க்கை கலவரம் இல்லாத வாழ்க்கை. கடன் இல்லாத வாழ்க்கை கம்பீரமான வாழ்க்கை. கடன் இருக்கும் போது தலை குனிந்து தான் நடப்பீர்கள்.

யாரிடமும் கைநீட்டி கடன் வாங்கவில்லை, ஏழ்மை நிலையில் இருந்தாலும், தலைநிமிர்ந்து நடக்கக்கூடிய தைரியம் நம்மிடத்தில் இருக்கும். முதலில் இரவு நிம்மதியான தூக்கத்தை பெறுவோம். இத்தனை இத்தனை பிரச்சனைகளுக்கும் காரணமாக இருக்கும் கடனை அடைக்க வேண்டும் என்றால், செவ்வாய்க்கிழமையை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

கடனுக்கு காரணமாக இருப்பது செவ்வாய் பகவான் தான். இந்த செவ்வாய் கிழமையோடு சேர்த்து தைப்பூசத் திருநாளும் வந்திருக்கிறது. இந்த நாளை தவிர விடலாமா. நீங்கள் கோவிலுக்கு சென்றாலும் சரி, வீட்டிலேயே இருந்தாலும் சரி, இந்த ஒரு பரிகாரத்தை மட்டும் முருகனை நினைத்து செய்து விடுங்கள். காலத்திற்கும் கஷ்டமில்லாமல், கடன் இல்லாமல் சந்தோஷமாக வாழலாம். நீங்கள் செய்ய வேண்டிய அந்த எளிமையான பரிகாரம் என்ன. இதோ இப்போதே ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

தைப்பூசம் முருகன் பரிகாரம்

முருகன் என்றாலே ஆறுமுகன். ஆறு நட்சத்திரங்களைக் கொண்ட கோலம், ஆறு விளக்கு, அறுபடை வீடு, இப்படி சொல்லிக் கொண்டே செல்லலாம். இதில் பொதுப்படையாக இருப்பது 6. ஆறு, ஒரு ரூபாய் நாணயங்களை எடுத்துக் கொள்ளுங்கள். செவ்வாய்க்கு உரிய நிறம் சிவப்பு நிறம். புது துணியாக இருக்க வேண்டும். காட்டன் துணியாக இருக்க வேண்டும். சதுர வடிவில் ஒரு துணி, புது ஜாக்கெட் பிட் டை வீட்டிலிருந்து கூட வெட்டி எடுத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

ஜாக்கெட் பிட் காட்டனில் இல்லை என்றால் லைனிங் துணி கூட வெட்டி எடுத்துக்கலாம் தவறு கிடையாது. ஆனால் பயன்படுத்தாத புது துணையாக இருக்க வேண்டும். அந்த புது துணியை ஒரு முறை தண்ணீரில் போட்டு நனைத்து, காய வைத்து பரிகாரத்திற்கு பயன்படுத்த வேண்டும். அவ்வளவுதான்.

நாளைய தினம் தைப்பூசம் அன்று முருகப்பெருமான் முன்பு நீங்கள் இதை செய்ய வேண்டும். வீட்டில் இருந்தாலும் சரி, கோவிலில் இருந்தாலும் சரி, உங்கள் முன்பு ஒரு முருகர் படம், முருகர் சிலை, வேல் எது இருந்தாலும் சரிதான். அந்த இடத்தில் அமர்ந்து ஆறு ஒரு ரூபாயை சிவப்பு துணியில் வைத்து முடிச்சு போட்டு கட்டிக் கொள்ளுங்கள். கண்களை மூடி முருகா என்னுடைய கடனை எல்லாம் குறைத்து விடு, என்னுடைய கஷ்டங்களை எல்லாம் போக்கிவிடு என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒருவேளை உங்களுக்கு திருமணம் நடக்க வேண்டும், குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும், நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்ற பிரார்த்தனை இருந்தாலும் வைக்கலாம். தவறு கிடையாது. அந்த ஆறு, ஒரு ரூபாயை அந்த துணியில் வைத்து முடிந்து உங்கள் கையிலே வைத்துக் கொள்ளுங்கள். முருகனை நம்பிக்கையோடு பிரார்த்தனை செய்யுங்கள். பிரார்த்தனையை முடித்துவிட்டு அந்த முடிச்சை, நீங்கள் வீட்டில் இருந்தால் பூஜை அறையில் வைத்து விடுங்கள்.

நீங்கள் வைத்த வேண்டுதல் நிறைவேறிய பின்பு இதை முருகன் கோவில் உண்டியலில் செலுத்துவதாக வேண்டிக் கொள்ளுங்கள். வேண்டுதல் பலித்தவுடன் உங்களால் எந்த முருகன் கோவிலுக்கு செல்ல முடியும், உங்கள் வீட்டிற்கு பக்கத்து தெருவில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்றாலும் சரிதான். அல்லது பிரபல்யமான முருகன் கோவிலுக்கு சென்று இந்த காணிக்கையை செலுத்தினாலும் சரிதான்.

நாளைய தினம் முருகனை நினைத்து இந்த வேண்டுதலை வைத்து 6 ரூபாயை சிவப்பு துணியில் வைத்து முடித்து போட்டு விட்டால், அந்த முடிச்சு அந்த முருகப்பெருமானின் உண்டியலில் சேர வேண்டும். அதற்கான வேலைகள் கடகடவென நடக்கும். உங்கள் பிரச்சனைகளை முருகன் பார்த்துக் கொள்வான். இந்த முடிச்சு எப்படியாவது முருகன் கோவில் உண்டியலில் சேர வேண்டும் என்பது மட்டும்தான் இந்த பிரபஞ்சத்தின் நோக்கமாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: மரகதலிங்க வழிபாடு

அப்போது நீங்கள் வைத்த வேண்டுதல் சீக்கிரம் பறிப்பதற்கு உண்டான அத்தனை வேலைகளும் நடக்கும். அவ்வளவு சக்தி வாய்ந்த பரிகாரம் இது. நாளைய தினம் நீங்கள் கோவிலில் இருந்தால் முடிச்சை அப்படியே பேகில் வைத்து வீட்டிற்கு கொண்டு வந்து வீட்டு பூஜை அறையில் வைக்கலாம் தவறு கிடையாது. நம்பிக்கை இருப்பவர்கள் பரிகாரத்தை செய்து பலன் பெறலாம். இந்த எளிய பரிகாரம் முருக பக்தர்களுக்கு சமர்ப்பணம்.

சற்று முன்