- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகடன் தீர்க்கும் தைப்பூச வழிபாடு

கடன் தீர்க்கும் தைப்பூச வழிபாடு

- Advertisement -

நீச்சல் தெரிந்தவர்கள் கூட கடலில் நீச்சல் அடிப்பதற்கு யோசிப்பார்கள் எந்த நேரத்தில் பெரும் அலை வந்து இழுத்துக் கொண்டு செல்லும் என்று யாராலும் கணிக்க முடியாது. அதனால்தான் கடனையும் கடலுக்கு இணையாக ஒப்பிட்டு கூறுவது உண்டு. கடன் என்ற ஒன்றை நாம் வாங்கி விட்டோம் என்றால் நம்முடைய வாழ்க்கையை இழக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அதனால்தான் முடிந்த அளவிற்கு தங்களுடைய வருமானத்திற்குள் சமாளிக்கும் அளவிற்கு கடனை வாங்க வேண்டும் என்றும் முடிந்த அளவிற்கு கடனே வாங்காமல் இருப்பது நல்லது என்றும் நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட கடன் என்னும் பெருங்கடலில் இருந்து தப்பிப்பதற்கு முருகப்பெருமானை எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

கடன் தீர்க்கும் தைப்பூச வழிபாடு

கடனுக்கு காரணமாக திகழக்கூடியவர் செவ்வாய் பகவான் என்று நம் அனைவருக்கும் தெரியும். செவ்வாய் பகவானுக்குரிய அதி தேவதையாக திகழக்கூடியவர் முருகப்பெருமான் என்றும் நமக்கு தெரியும். அதனால் கடன் பிரச்சினை தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் செவ்வாய்க்கிழமை அன்று முருகப்பெருமானை வழிபாடு செய்ய வேண்டும் என்று பலரும் கூறி கேள்வி பட்டிருப்போம். அப்படிப்பட்ட செவ்வாய்க்கிழமையோடு முருகப்பெருமானுக்கு உகந்த தைப்பூசமும் சேர்ந்து வருகிறது. இது எவ்வளவு பெரிய விசேஷமான நாள். அப்படிப்பட்ட நாளில் நம்முடைய கடன் பிரச்சினை தீர்வதற்கு நாம் செய்ய வேண்டிய ஒரு வழிப்பாட்டு முறையை பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய தைப்பூச நாளன்று செய்ய ஆரம்பித்தோம் என்றால் விரைவிலேயே நம்முடைய கடன் பிரச்சனை தீரும். என்ன செய்ய வேண்டும்? அருகில் இருக்கக்கூடிய முருகன் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் பொழுது முருகப்பெருமானுக்கு செவ்வரளி மலர்களை வாங்கித் தர வேண்டும். தங்களால் இயலும் பட்சத்தில் முருகப்பெருமானின் சிலைக்கு இணையாக மாலையாக வாங்கி கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும். ஒருவேளை அவ்வளவு பெரிய மாலை வாங்கும் அளவிற்கு கையில் பணம் இல்லை என்று நினைப்பவர்கள் அவர்கள் வீட்டில் இருக்கக்கூடிய முருகனின் படத்திற்காவது செவ்வரளி மலரால் மாலையாக முழுமையாக போட வேண்டும்.

அடுத்ததாக முருகப்பெருமானின் ஆலயத்தில் முருகப்பெருமானுக்கு ஆறு மாவிளக்கு தீபங்களை ஏற்றி வைத்து முருகப்பெருமானை ஆறு முறை வலம் வர வேண்டும். இவ்வாறு வலம் வரும்பொழுது நம்முடைய கடன் பிரச்சினை தீர வேண்டும் என்ற வேண்டுதலை வைத்து வலம் வர வேண்டும். முருகப்பெருமானை வழிபாடு செய்த பிறகு அங்கு இருக்கக்கூடிய நவகிரகங்களில் செவ்வாய் பகவானுக்கு முன்பாக முழு துவரம் பருப்பை பரப்பி அதற்கு மேல் ஒரு அகல் விளக்கில் நெய் தீபம் ஏற்றி செவ்வாய் பகவானையும் வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

இப்படி தொடர்ச்சியாக ஆறு செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானை வழிபாடு செய்தோம் என்றால் அந்த ஆறு வாரங்களுக்குள்ளேயே கடன் பிரச்சினை தீர்வதற்குரிய வழியும் வாய்ப்பும் நமக்கு கிடைக்கும். கடன் பிரச்சினை அதிக அளவில் இருக்கிறது என்று புலம்புபவர்கள் ஆறு வாரங்கள் செய்யாமல் தொடர்ச்சியாக 48 நாட்கள் இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலமும் அவர்களுடைய கடனை அடைவதற்குரிய நல்ல வழியை முருகப்பெருமான் அருள்வார்.

இதையும் படிக்கலாமே:தைப்பூச வேல் வழிபாடு

முழு மனதோடு விடாமுயற்சியோடு கடன் பிரச்சினை தீருவதற்குரிய வழியை கண்டுபிடித்து அந்த கடன் பிரச்சினையை தீர்ப்பதற்குரிய முயற்சிகளை மேற்கொள்வதோடு இந்த வழிபாட்டையும் முழுமனதோடு முருகப் பெருமானை நினைத்து செய்பவர்களுக்கு கண்டிப்பான முறையில் முருகப் பெருமானின் அருளால் கடன் பிரச்சினை தீர்வதற்குரிய முயற்சிகள் வெற்றியடையும் கடனிலிருந்து வெளிவந்து நிம்மதியான வாழ்க்கையை வாழ்வார்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்