ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்கு உரிய நாள். நீங்கள் செய்யும் தொழில் வேலைக்கு எல்லாம் காரகத்துவமாக இருப்பவர் இந்த சூரிய பகவான் தான். இந்த ஞாயிற்றுக்கிழமையோடு சேர்த்து சங்கடஹர சதுர்த்தி திதியும் நாளைய தினம் வரவிருக்கிறது. 16-2-2025 ஞாயிற்றுக்கிழமை சங்கடஹர சதுர்த்தி.
இந்த நாளில் விநாயகப் பெருமானை பின் சொல்லக்கூடிய மந்திரத்தை சொல்லி வழிபாடு செய்து, வெறும் ஒரு டம்ளர் தண்ணீரை இப்படி குடித்து பாருங்கள். உங்கள் வேலை சம்பந்தப்பட்ட, தொழில் சம்பந்தப்பட்ட அத்தனை பிரச்சனைகளும் கூடிய விரைவில் சரியாகிவிடும். வருமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கலாம்.
சங்கடஹர சதுர்த்தி வழிபாடு
நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை. பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே எழுந்து குளித்து விடுங்கள். பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். 1 டம்ளர் தண்ணீரை உங்கள் முன்பு வைத்துக் கொள்ளவும். செம்பு சொம்பு இருந்தால் நல்லது. செம்பு டம்பளர், செம்பு பாத்திரம், செம்பு வாட்டர் கேன், எது இருந்தாலும் அதில் அந்த தண்ணீரை ஊற்றி, திறந்தபடி அந்த தண்ணீரை வைக்கவும்.
பூஜை அறையில் இருக்கும் விநாயகருக்கு அருகம்புல் போட்டு, உங்களால் முடிந்த பூக்களால் அலங்காரம் செய்து, ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, “ஓம் கணேசாய நமஹ” என்ற மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள். பிறகு உங்களுடைய ஒரு பிரச்சனையை விநாயகரிடம் சொல்லுங்கள். அந்த பிரச்சனை சரியாக வேண்டும் விநாயகா என்று வேண்டிக் கொள்ளுங்கள்.
உதாரணத்திற்கு நல்ல வேலை வேண்டும் இந்த அரசாங்க வேலைக்காக நான் முயற்சி செய்து கொண்டிருக்கின்றேன். இந்த தேர்வில் வெற்றி காண வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். வேலையில் யாராவது பிரச்சனையை உங்களுக்கு கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். அந்த குறிப்பிட்ட தொல்லை உங்களை விட்டு விலக வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்து கொள்ளலாம்.
வியாபாரத்தில் முன்னேற பிரார்த்தனை செய்யலாம். உங்களுக்கு இப்போது வேலை சம்பந்தப்பட்ட வியாபாரம் சம்பந்தப்பட்ட என்ன பிரச்சனை இருக்கிறது. அது சரியாக வேண்டிக் கொண்டு, அது உண்மையிலேயே விநாயகரை வழிபாடு செய்தால் சரியாகும் என்று நம்பி இந்த வழிபாட்டை மேற்கொள்ளவும். இறுதியாக தீப தூப ஆராதனை காண்பித்து கற்பூர ஆரத்தி காண்பித்து, இந்த பூஜையை நிறைவு செய்துவிட்டு, உங்கள் முன்பு பாத்திரத்தில் வைத்திருந்த தண்ணீரை எடுத்து விநாயகப் பெருமானை நினைத்து குடித்து விடுங்கள்.
இதையும் படிக்கலாமே: ஞாயிற்றுக்கிழமை சங்கடஹர சதுர்த்தி பரிகாரம்
இதை எல்லாம் நாளை தினம் பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்ய வேண்டும். நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பாருங்கள். காலை 5.30 மணிக்கு முன்பு இந்த பூஜையை நிறைவு செய்து விடுங்கள். இவ்வளவுதான். நம்பிக்கை உள்ளவர்களுக்கு விநாயகப் பெருமான் நாளைய தினம் நல்ல வழியை காட்டிக் கொடுப்பார் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.