- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசெல்வ வளம் அதிகரிக்க வெற்றிலை பரிகாரம்

செல்வ வளம் அதிகரிக்க வெற்றிலை பரிகாரம்

- Advertisement -

பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்தவுடன் நம்மால் சம்பாதிக்க முடியாது. அந்த பணத்தை சம்பாதிப்பதற்காக ஏதாவது ஒரு வழியை தேர்வு செய்வோம். வேலை செய்வதோ அல்லது தொழில் செய்வதோ என்று ஏதாவது ஒரு வழியை தேர்வு செய்து அதன் மூலம் பணத்தை சம்பாதிப்போம். இப்படி வேலை செய்பவர்களாக இருந்தாலும் சரி தொழில் செய்பவர்களாக இருந்தாலும் சரி அவர்கள் செய்யக்கூடிய அந்த செயலில் அவர்களுக்கு வெற்றிகள் கிடைத்தால் தான் அதன் மூலம் லாபம் ஏற்பட்டு செல்வ வளமும் உயரும். அப்படி லாபம் ஏற்படவும் செல்வ வளம் அதிகரிக்கவும் வெற்றிலையை வைத்து செய்யக்கூடிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

வெற்றிலை பரிகாரம்

செல்வ வளம் அதிகரிக்க வேண்டும் என்றால் அதற்கு மகாலட்சுமியின் அருள் நமக்கு வேண்டும். அப்படி மகாலட்சுமியின் அருளை பெறுவதற்கு பலவிதமான பரிகாரங்கள் இருந்தாலும் வெற்றிலையை வைத்து ஒரு எளிமையான பரிகாரம் ஒன்று இருக்கிறது. மகாலட்சுமிக்குரிய அம்சமாக திகழக்கூடிய வெற்றிலையை வைத்து பரிகாரம் செய்வதன் மூலம் நமக்கு செல்வ வளம் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த பரிகாரத்தை ஒவ்வொரு வாரமும் வரக்கூடிய புதன்கிழமை மதியம் 1 மணியிலிருந்து 2 மணிக்குள் இருக்கக்கூடிய புதன் ஹோரையில் செய்ய வேண்டும். புதன் பகவானுக்குரிய அதி தேவதையாக பெருமாள் திகழ்கிறார். பெருமாளுக்கு உகந்த நாளாக புதன்கிழமை திகழ்கிறது என்பதால் அது மகாலட்சுமிக்கும் உகந்த நாளாகவே திகழ்கிறது. பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று கூறுவார்கள் அல்லவா? அந்த அளவிற்கு சிறப்பு வாய்ந்த புதன்கிழமை அன்று நாம் இந்த ஒரு பரிகாரத்தை செய்யும் பொழுது வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும் லாபமும் உண்டாகும்.

இதற்கு கிழியாத நல்ல வெற்றிலையாக 5 வெற்றிலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த ஐந்து வெற்றிலைகளையும் சுத்தமாக கழுவி ஈரம் இல்லாமல் துடித்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு வெற்றிலையின் மீதும் மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய நெய்யை தடவ வேண்டும். பிறகு ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து அதை ஒரு பச்சை நிற துணியில் வைத்து மடித்து மூட்டையாக கட்டிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இதை வீட்டு பூஜை அறையில் குலதெய்வம், இஷ்ட தெய்வம், பெருமாள் மகாலட்சுமி இவர்களின் படத்திற்கு முன்பாக வைத்து செல்வ வளம் அதிகரிக்க வேண்டும் நான் செய்யக்கூடிய வேலையிலோ தொழிலிலோ எனக்கு நல்ல முன்னேற்றம் உண்டாக வேண்டும் என்று மனதார வேண்டிக்கொண்டு இதை அப்படியே எடுத்துக் கொண்டு போய் பணம் வைக்கும் இடத்தில் வைத்துவிட்ட வேண்டும். அடுத்த வாரம் இந்த வெற்றிலையை கால்படாத இடத்தில் போட்டுவிட்டு புதிதாக ஐந்து வெற்றிலை வாங்கி வைத்து இதே முறையில் செய்ய வேண்டும்

இப்படி செய்வதன் மூலம் சொந்த தொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் உண்டாகும். வேலை செய்பவர்களுக்கு அவர்கள் வேலையில் முன்னேற்றம் ஏற்பட்டுஅதன் மூலம் பணவரவு ஏற்படும். புதிதாக தொழில் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களும் இந்த பரிகாரத்தை செய்ய ஆரம்பித்த பிறகு தொழில் தொடங்கினார்கள் என்றால் அந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:வெட்டிவேர் தீபம் ஏற்றும் பலன்

மகாலட்சுமியை முழு மனதோடு நம்பி மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய வெற்றிலையை வைத்து இந்த முறையில் பரிகாரம் செய்யும் பொழுது கண்டிப்பான முறையில் பெருமாள் மகாலட்சுமி மற்றும் குலதெய்வத்தின் அருளால் நாம் செய்யக்கூடிய செயலில் முன்னேற்றம் உண்டாகி அதன் மூலம் செல்வ வளம் அதிகரிக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்