- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval20-2-2025 மைத்ரேய முகூர்த்தம்

20-2-2025 மைத்ரேய முகூர்த்தம்

- Advertisement -

கடன் சுமை குறைய, நம்மை பிடித்த கண் திருஷ்டி, ஏவல் பில்லி சூனியம், எல்லாம் நம்மை விட்டு விலக தேய்பிறை அஷ்டமி திதியில் பைரவர் வழிபாடு செய்வது மிக மிக சிறப்பான பலனை கொடுக்கும். அதிலும் இந்த தேய்பிறை அஷ்டமி திதியோடு சேர்த்து, கடனை அடைக்க கூடிய மைத்ரேய முகூர்த்த நேரமும் நமக்கு வந்திருக்கிறது.

இப்படி ஒரு அதி அற்புதமான நாளில், மேலும் ஒரு சிறப்பு இருக்கிறது. இந்த நாளில் மொத்தம் நான்கு 2 என்ற எண்கள் வந்திருக்கிறது. நான்கு இரண்டையும் ஒன்றாக கூட்டினால், 8 என்ற எண் கிடைக்கும். 8 என்பது அஷ்டமிக்கு உரிய எண். அமாவாசை முடிந்து வரக்கூடிய எட்டாவது திதி வளர்பிறை அஷ்டமி திதி.

- Advertisement -

பௌர்ணமி முடிந்து வரக்கூடிய எட்டாவது தேதி தான் தேய்பிறை அஷ்டமி திதி. இத்தனை சிறப்புகளையும் உள்ளடக்கிய இந்த நாளில் நாம் பரிகாரம் செய்தால் அதன் மூலம் நிச்சயம் முழு பலனை அடைய முடியும். இன்று மைத்ரேய முகூர்த்த நேரம் எப்போது வருகிறது, கடன் சுமை அடைய என்ன பரிகாரம் செய்வது, ஆன்மீகம் சார்ந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

வைகாசி மைத்ரேய முகூர்த்தம் 2025

20-2-2025 வியாழக்கிழமையான இன்று, நள் இரவில் தான் மைத்ரேய முகூர்த்த நேரம் வரவிருக்கிறது. இன்றைய தினம் மாலை 6:30 மணிக்கு மேல் உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று, கட்டாயம் கால பைரவரை வணங்கி, கடன் சுமையிலிருந்து வெளிவர சின்னதாக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

உங்களால் முடிந்த விஷயங்களை அந்த கோவிலுக்கு நீங்கள் செய்யலாம். பைரவருக்கு என்னென்ன தேவை, என்னென்ன சிறப்பு என்பது நிச்சயம் நாம் எல்லோரும் அறிந்ததே. இன்றைய மைத்ரேய முகூர்த்த நேரத்தில் செய்ய வேண்டிய பரிகாரம் என்ன என்பதை மட்டும் தற்போது இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

இன்று 20-02-2025 நள்ளிரவு 11:51Pm மணி முதல் 21-2-2025 அதிகாலை 2:02Am மணி வரை இந்த மைத்ரேய முகூர்த்தமானது நமக்கு இருக்கிறது. இதில் மையப் பகுதி என்றால் 12:34AM மணி முதல் 1:17AM வரை மையப்பகுதி நேரம் இருக்கிறது.‌ இந்த நேரத்தை தான் அதிசக்தி வாய்ந்த மைத்திரேய முகூர்த்த நேரம் என்று சொல்லுவார்கள். நள்ளிரவில் மைத்ரேய முகூர்த்த நேரம் வந்திருப்பதால், வங்கி கடன், நகை கடன் செலுத்துவதில் நமக்கு சிரமம் இருக்கும்.

- Advertisement -

ஆனால் குறிப்பிட்ட நபருக்கு ஜிபே மூலம் பணம் செலுத்த முடியும் என்றால் நீங்கள் மேல் சொன்ன இந்த நேரத்தை பயன்படுத்தி, குறிப்பிட்ட அந்த நபருக்கு கடன் தொகையை, குறிப்பிட்ட இந்த மைத்ரேய முகூர்த்த நேரத்தில் திருப்பிக் கொடுக்கும் போது, கடன் சுமையானது அதி விரைவாக குறையும் என்பது நம்பிக்கை. அதற்கும் வாய்ப்பு இல்லை என்பவர்கள், ஒரு கவரில் யாரிடம் கைநீட்டி கடன் வாங்கினீர்களோ, அவர்களுடைய பெயரை எழுதி, அந்த கவருக்கு உள்ளே ஒரு குறிப்பிட்ட தொகையை வைத்து மடித்து, அலமாரியில் வைத்து விடுங்கள். அந்த நேரத்தில் குறிப்பிட்ட நபரிடம் கடனை திருப்பிக் கொடுத்ததாக அர்த்தமாகிவிடும். இது முதல் பரிகாரம். இதை கடனை சீக்கிரம் அடைக்க நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.

வாங்கிய கடனிலிருந்து ஒரு தொகையை தான் இந்த மைத்ரேய முகூர்த்த நேரத்தில் திருப்பிக் கொடுத்து இருக்கின்றோம். மொத்த கடனும் சீக்கிரம் அடைய வேண்டும். 5 லட்ச ரூபாய் கடனுக்கு, ஐந்தாயிரம் ரூபாயை மட்டும் கொடுத்தால் போதுமா. மீதி கடனை எப்படி அடைப்பது. அதற்கான பரிகாரமும் இருக்கிறது. அதையும் நீங்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மைத்ரேய முகூர்த்த நேரத்தில், வீட்டில் இருந்தபடியே செய்வது மிக மிக சிறப்பான பலனை கொடுக்கும்.

தேய்பிறை அஷ்டமி என்றாலே அந்த வழிபாட்டில் மிளகிற்க்கு மிக மிக முக்கியத்துவம் உண்டு. வீட்டில் மிளகு தீபம் ஏற்றக்கூடாது. ஆனால் மிளகை வைத்து இந்த பரிகாரத்தை செய்யலாம். ஒரு மண் அகல் விளக்கு எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு கட்டி கற்பூரத்தை வைத்து ஏற்றி விடுங்கள். கையில் 8 மிளகு எடுத்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு இருக்கும் கடன் சுமை சீக்கிரம் தீர வேண்டும் என்று பைரவரிடம் மனதார பிரார்த்தனை செய்து, அந்த எட்டு மிளகையும் எரிந்து கொண்டிருக்கும் கற்பூரத்தில் போட்டு, அக்னி தேவனையும் கால பைரவரையும் மனப்பூர்வமாக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். என்னுடைய கடனும், இந்த மிளகு வெடித்து சிதறுவது போல, வெடித்து சிதற வேண்டும், கடன் தொல்லையிலிருந்து நான் சீக்கிரம் வெளிவர வேண்டும் என்று மனம் உருகி பிரார்த்தனை செய்து கொண்டால், நிச்சயம் நீங்கள் கடன் சுமையிலிருந்து சீக்கிரமாக வெளிவர அந்த இறைவன் நல்லாசியை வணங்குவான்.

இதையும் படிக்கலாமே: வருமான தடை விலக வெள்ளிக்கிழமை பரிகாரம்

கற்பூரம் எரிந்து முடியும் வரை நீங்கள் பிரார்த்தனையை வைக்கலாம் கற்பூரம் எரிந்து முடிந்தவுடன் மீதம் இருக்கும் சாம்பலை வீட்டிற்கு வெளியில் கொட்டி. கற்பூரத்தில் மிளகு போட்டு செய்ய வேண்டிய இந்த பரிகாரத்தையும் வீட்டில் மைத்ரேய முகூர்த்த நேரத்தில் செய்யுங்கள். முடிந்தால் மைத்ரேய முகூர்த்தத்தின் நடுப்பகுதி என்று குறிப்பிட்டு இருக்கும் அந்த நேரத்தில், இந்த பரிகாரத்தை செய்வது அதி அற்புதமான பலனை உடனடியாக பெற்று தரும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்