- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபீரோவில் கட்டு கட்டாக பணம் சேர பரிகாரம்.

பீரோவில் கட்டு கட்டாக பணம் சேர பரிகாரம்.

- Advertisement -

பீரோவில் பணம் சேருவதற்கான வழியை தேடி தேடி அலைகின்றோம். ஆனால் பீரோவில் பணம் வந்து நிலையாக நிரந்தரமாக தங்குவதில்லை. வைத்த பணம் எங்கே தான் காணாமல் போகிறது என்றும் தெரியவில்லை. செலவு செலவு செலவு செலவு. வீட்டில் இந்த பிரச்சனைக்கு மட்டும் முடிவே கட்ட முடியாதா என்று சிந்திப்பவர்களுக்கு நாளைய தினம் ஒரு வரப் பிரசாதம்.

நாளை வெள்ளிக்கிழமை காலை 7:00 மணி வரை அமாவாசை திதியும் இருக்கிறது. சுக்கிர ஹோரை நாளைக்கு காலை 6 மணியிலிருந்து 7 மணி வரை இருக்கிறது. இந்த நேரத்தில் நாம் செய்யக்கூடிய பரிகாரம் நமக்கு பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனையை தீர்த்து வைக்கும். பண பிரச்சனையை தீர்க்க வந்திருக்கும் அந்த பரிகாரம் என்ன சுருக்கமாக இப்போதே ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

உங்களுடைய பீரோ இரும்பு பீரோவாக இருந்தாலும் சரி, மர பீரோவாக இருந்தாலும் சரி, அதில் நாளை காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் சர்க்கரைப் பொங்கலுக்கு தேவையான பொருட்களை எல்லாம் வைக்க வேண்டும். குறிப்பாக நகை பணம் வைத்திருக்கும் லாக்கருக்குள் பச்சரிசி, நெய், வெல்லம், ஏலக்காய், முந்திரி, உலர் திராட்சை, கொஞ்சமாக பாசிப்பருப்பு இந்த பொருட்களை எல்லாம் வைக்க வேண்டும். இதோடு சிட்டிகை பச்சை கற்பூரம் சேர்த்து சர்க்கரை பொங்கல் செய்ய வேண்டும். முடிந்தால் பச்சை கற்பூரத்தையும் பீரோவில் வையுங்கள்.

நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் இந்த பொருட்களை எல்லாம் இன்றைய தினம் புதுசாக வாங்கி, வீட்டில் வையுங்கள். நாளைய தினம் காலை வீட்டில் இருக்கும் பெண்ணின் கையால், இந்த பொருட்களை பீரோவில் வைத்து எடுக்க வேண்டும். அதுவும் குறிப்பாக நாளை காலை 6:00 மணியில் இருந்து 7:00 மணிக்குள் பீரோவில் இந்த பொருட்களை வைத்து, எடுத்து பூஜையறையில் இந்த பொருட்களை எல்லாம் வைத்து மகாலட்சுமிக்கு சின்னதாக ஒரு பூஜை செய்து விடுங்கள்.

- Advertisement -

15 லிருந்து 20 நிமிடங்கள் இந்த பொருட்கள் எல்லாம் பீரோவில் இருந்தால் போதும். இப்படி பீரோவில் வைத்த பொருளை எடுத்து சர்க்கரை பொங்கல் சமைக்க வேண்டும். நாளைய தினமே உங்களால் முடிந்தால் சர்க்கரை பொங்கல் செய்யுங்கள். நாளை முடியாது என்றால் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது ஒரு ஞாயிற்றுக்கிழமை கூட சர்க்கரை பொங்கல் செய்தால் தவறு கிடையாது.

மணக்க மணக்க நெய் விட்டு ருசியாக ஒரு சர்க்கரை பொங்கல் செய்து, அந்த சர்க்கரை பொங்கலை இயலாதவர்களுக்கு கொண்டு போய் தானமாக கொடுக்க வேண்டும். இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயம் அடுத்த கோடீஸ்வரர் பட்டியலில் நீங்களும் வருவீர்கள். எப்படி சும்மாவே இருப்பீங்க. பணம் வந்து பீரோவில் அமருமா. அப்படியெல்லாம் கிடையாது.

- Advertisement -

பரிகாரத்தை செய்வதற்கு முன்பு நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் தடைகள் இருந்திருக்கலாம் முயற்சிகள் தோல்வி அடைந்திருக்கலாம். ஆனால் இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை செய்த பிறகு,  நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி அடையும். வருமானத்திற்கு மேல் வருமானம் குவியும். நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும். முயற்சிகளில் தோல்வி அடைய மாட்டீர்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

வியாபார நஷ்டம், லாபமாக மாறும். வீட்டை பிடித்த தரித்திரம் விளக்கும். நீங்கள் ஓஹோ என அம்பானி ஆவதற்கு கூட வாய்ப்புகள் இருக்கிறது. ஆசையை பெருசாக வைப்போம் தவறு ஒன்றும் கிடையாது. ஆசைப்படுவதற்கு அளவு இல்லை. பேராசை பட்டால் தான் தவறு. இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவு உங்களுக்காக. பணக்கஷ்டத்தை சுமந்து கொண்டிருக்கும் நீங்கள் அந்த சுமையை இறக்கி வைக்க இதை செய்யுங்கள்.

இதையும் படிக்கலாமே: 7 கிரக சேர்க்கையோடு வரும் சோடசக்கலை நேரம்

சர்க்கரை பொங்கல் எந்த அளவு செய்வது, உள்ளே எந்தெந்த பொருட்களை எவ்வளவு வைப்பது என்ற சந்தேகம் எல்லாம் வேண்டாம். ஒரு கிலோ பச்சரிசிக்கு என்ன தேவையோ அதை வாங்கி பீரோவில் வைத்து பரிகாரத்தை முடித்துக் கொள்ளுங்கள். நல்லது நினைத்தால் நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்