இன்றைய தினம் சக்தி வாய்ந்த மாசி அமாவாசை நாள். அங்காள பரமேஈஸ்வரி கோவிலில் மயான கொள்ளை நடைபெறக்கூடிய நாள் இன்று. கெட்ட சக்திகள், அசுர சக்திகள் அழிக்கப்படக்கூடிய நாள் இன்று. ஆகவே உக்கிரமான தெய்வங்களை இன்றைய தினம் ஒரு நொடிப் பொழுதேனும் நம் மனதார நினைத்து வணங்குவது நல்லது.
இன்றைய தினம் உக்கிர தெய்வங்களை வழிபாடு செய்தால் நம்மை பிடித்து ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் எதிர்மறை சக்திகள் அழியும். ஆகவே “அங்காள பரமேஸ்வரி தாயே போற்றி போற்றி” என்ற நாமத்தை மூன்று முறை சொல்லி இந்த பதிவிற்குள் பயணிப்போம். இந்த பதிவில் கொடுக்கப்பட்டிருக்கும் பரிகாரம் உங்களுடைய கஷ்டங்களை போக்கக்கூடிய வகையில் சுலபமாக செய்யக்கூடிய பரிகாரமாக அமையும்.
மாசி அமாவாசை பரிகாரம்
இன்று அமாவாசை தினம் என்பதால், இந்த நாளில் உக்கிர தெய்வத்தை நினைத்து நாம் செய்யக்கூடிய பரிகாரங்கள் நமக்கு முழு பலனை கொடுக்கும். இன்று இரவு இரண்டு விதமான பரிகாரங்களை நாம் செய்யலாம். ஒன்று நம் உடம்பை பிடித்த, கெட்ட சக்திகள் அகல வேண்டும் என்றால் என்ன பரிகாரம் செய்வது.
இன்று இரவு 10 மணிக்கு மேல் ஒரே ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து அதை நான்கு துண்டுகளாக நறுக்கி, அதன் உள்ளே குங்குமம் தடவி, அதன் நடுவில் கொஞ்சம் கல் உப்பு கொட்டி அதன் மேலே ஒரு கற்பூரம் வைத்து கொளுத்தி, வீட்டில் இருக்கும் நபர்களை எல்லாம் அமர வைத்து மூன்று முறை சுற்றி, அந்த எலுமிச்சம் பழத்தை கொண்டு போய் முச்சந்தியில் போட்டுவிட்டு வரலாம்.(எலுமிச்சம் பழத்தை நான்காக வெட்டி கையில் எடுத்துக் கொள்ளக் கூடாது. நான்கு பாகங்களாக பிரித்தது போல வெட்டிக் கொள்ளுங்கள்.)
முச்சந்தியில் அந்த எலுமிச்சம் பழத்தை போட முடியாதவர்கள் அந்த எலுமிச்சம் பழத்தை ஒரு கவரில் போட்டு குப்பைத்தொட்டியில் போடுங்கள். குப்பைத்தொட்டியை வீட்டிற்கு வெளி பக்கத்தில் வைத்து விடுங்கள். உங்கள் குலதெய்வத்தை நினைத்து இந்த பரிகாரத்தை செய்தால் குடும்பத்தில் இருப்பவர்கள் உடம்பில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் விலகிவிடும். கண் திருஷ்டி ஆனது விலகும்.
நம்மில் எல்லோர் வீட்டிலும் பணக்கஷ்டம் வருவதற்கு முதல் காரணமாக இருப்பது அடுத்தவர்களுடைய பொறாமை கண்கள் தான். கொஞ்சம் வசதி படைத்தவர்களாக மாறும்போதே, அடுத்தவர்களுடைய கண் பார்வை நம் மீது விழுந்து விடும். இவர்கள் மட்டும் எப்படி பணம் சம்பாதிக்கிறார்கள் என்று, பொறாமை பார்வை பார்த்து அடுத்தவர்கள் ஒரு பெருமூச்சு விட்டால் போதும். நமக்கு பண கஷ்டம் வந்துவிடும். அப்படி இல்லை என்றால் வீட்டில் ஏதாவது ஒரு தீராத சண்டை வந்துவிடும். இதிலிருந்து வெளிப்படவும் இன்று இரவு பரிகாரத்தை நீங்கள் மேற்கொள்ளலாம்.
கடன் சுமை தீர வேண்டும், பணக்கஷ்டம் தீர வேண்டும், என்று மூன்று கிராம்பை உள்ளங்கைகளில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் தலையை 9 முறை சுற்றுங்கள். ஒரு சின்ன மண் அகல் விளக்கில் கற்பூரத்தை கொளுத்தி கையில் இருக்கும் கிராம்பை அந்த நெருப்பில் போட்டு பொசித்து விடுங்கள் போதும். (இந்த பரிகாரத்தை ஒரு தனி நபர் தனக்குத்தானே செய்து கொள்ளலாம்). எரிகின்ற இந்த நெருப்புக்கு முன்பாக அமர்ந்து உங்கள் குலதெய்வத்தை பிரார்த்தனை செய்து கொண்டால் போதும்.
உங்களுடைய பணப் பிரச்சனைகள் தீரும். கடன் சுமையானது நிச்சயம் குறையும். இது ஒரு எளிமையான பரிகாரமாக தெரியலாம் இருப்பினும் நெகட்டிவ் எனர்ஜியை முழுசாக அழிக்கக்கூடிய சக்தி இதற்கு இருக்கிறது. அதிலும் அமாவாசை இரவு இந்த பரிகாரத்தை செய்தால், முற்றிலும் உங்களால் கடன் சுமையிலிருந்து வெளிவர முடியும். முயற்சி செய்து பாருங்கள்.
இதையும் படிக்கலாமே: பீரோவில் கட்டு கட்டாக பணம் சேர பரிகாரம்.
பரிகாரத்தை முயற்சி செய்வதோடு சேர்த்து கடனை அடைப்பதற்கு உண்டான முயற்சிகளையும் நீங்கள் தான் மேற்கொள்ள வேண்டும். உங்களுடைய முயற்சிகளில் வெற்றிக்கான பரிகாரம் உறுதுணையாக அமையும். மற்றபடி மந்திரத்தால் என்றுமே மாங்காய் காய்க்காது என்ற தகவலுடன் இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.