நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு ரூபத்தில் பணத்தை சம்பாதித்துக் கொண்டுதான் இருக்கிறோம். எவ்வளவு சம்பாதித்தாலும் சம்பாதித்த பணம் நம் கையில் தங்கவில்லை, பொருளாதாரத்தில் எந்தவித முன்னேற்றமும் இல்லை சம்பாதித்த பணம் எப்படி செலவாகிறது என்றே தெரியவில்லை என்று புலம்புபவர்கள் தான் பலர் இருக்கிறார்கள். இப்படி புலம்புவதோடு மட்டுமல்லாமல் திரும்பவும் தங்களுடைய தேவைக்காக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கும் தள்ளப்படுகிறார்கள். இப்படி சம்பாதித்த பணம் வீண் செலவாகாமல் கடன் வாங்கு கூடிய சூழ்நிலை ஏற்படாமல் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கு செய்ய வேண்டிய ஒரு வழிபாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட
நாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் ஒவ்வொரு பணமும் நமக்கு மிகவும் முக்கியம்தான். அப்படி வரக்கூடிய பணத்தில் ஏதேனும் தடைகள் இருந்தாலும் வந்த பணம் தேவையற்ற வீண் செலவுகளாக மாறினாலும் நம்மால் சேமிக்கவே முடியாத ஒரு சூழ்நிலை உண்டாகும். இதோடு மட்டுமல்லாமல் கடன் வாங்கக்கூடிய நிலையும் உண்டாகும். இவை அனைத்தையும் நீக்கி வீண் செலவுகளை குறைத்து பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படவும் கடன் இல்லாத நிம்மதியான வாழ்க்கை வாழவும் சிவபெருமானை வழிபாடு செய்யும் முறையைப் பற்றி இப்பொழுது பார்ப்போம்.
இந்த வழிபாட்டை திங்கட்கிழமை தோறும் நாம் செய்ய வேண்டும். அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு செல்ல வேண்டும். அங்கு சிவபெருமானுக்கு இரண்டு நல்லெண்ணெய் தீபங்களை ஏற்றி வைக்க வேண்டும். பிறகு வில்வத்தை வாங்கி சிவபெருமானுக்கு வீட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொருவரின் பெயரையும் சொல்லி வில்வர்ச்சனை செய்ய வேண்டும். அடுத்ததாக வீட்டிலேயே நம்முடைய கைப்பட சர்க்கரைப் பொங்கலை செய்து அதை சிவபெருமானுக்கு நெய்வேத்தியமாக வைத்துவிட்டு அங்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக தரவேண்டும்.
இப்படி ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை தோறும் தொடர்ச்சியாக 8 திங்கட்கிழமை நாம் இந்த முறையில் சிவபெருமானை வழிபாடு செய்ய நமக்கு ஏற்படக்கூடிய வீண் செலவுகள் குறையும், பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும், தடைப்பட்ட பணவரவு தடையின்றி கைவந்து சேரும், கடன் இல்லாத நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும். ஒரு வேளை அதிக அளவில் கடன் பிரச்சனை இருக்கிறது என்று நினைப்பவர்கள் இதே வழிபாட்டை தொடர்ச்சியாக 16 திங்கட்கிழமைகள் செய்வதன் மூலம் அவர்களுடைய கடன் பிரச்சினை தீர்வதற்குரிய வழி கிடைக்கும்.
இதையும் படிக்கலாமே:மன குழப்பம் தீர பஞ்சமி பரிகாரம்
சிவபெருமானை முழுமனதோடு இந்த முறையில் வழிபாடு செய்பவர்களுக்கு அவர்கள் சம்பாதித்த பணம் வீண் செலவாகாமல் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.