- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபிள்ளைகள் பரிட்சையில் நல்ல மதிப்பெண்கள் பெற

பிள்ளைகள் பரிட்சையில் நல்ல மதிப்பெண்கள் பெற

- Advertisement -

இப்பொழுது அனைத்து பள்ளி மாணவ மாணவியருக்கும் பரீட்சை நேரம் தொடங்கிவிட்டது. பலரும் பரிட்சையில் நல்ல மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்பதற்காக இரவு பகல் பாராமல் படித்துக் கொண்டு இருப்பார்கள். பலருக்கும் படித்த பாடங்கள் அனைத்தும் ஞாபகம் இருந்து பரிட்சையில் நல்ல விதமாக எழுதி நிறைய மதிப்பெண்கள் எடுப்பார்கள். இன்னும் சிலரோ எவ்வளவு படித்தாலும் பரிட்சை எழுதும் அந்த நேரத்தில் மறந்துவிட்டு சரியாக பரீட்சை எழுதாமல் வந்துவிடுவார்கள். அப்படிப்பட்ட பிள்ளைகளும் நன்றாக பரீட்சை எழுதுவதற்கும் படித்த படிப்பு மனதில் பதிவதற்கும் பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகள் செய்ய வேண்டிய வழிப்பாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பிள்ளைகள் பரிட்சையில் நல்ல மதிப்பெண்கள் பெற

கல்விக்கு அதிபதியாக திகழக்கூடியவர் சரஸ்வதி தேவி என்றாலும் இன்னொரு பக்கம் ஹயக்ரீவரையும் நாம் வழிபாடு செய்வோம். இவர்கள் இருவரை தவிர்த்து விநாயகர் பெருமானும் சிறந்த கல்வி அறிவைத் பெறுவதற்கு உதவக்கூடியவராக திகழ்கிறார். இவர்கள் அனைவரையும் நாம் அனுதினமும் வழிபாடு செய்ய வேண்டும். அப்படி அனுதினமும் வழிபாடு செய்யாவிட்டாலும் பரீட்சை சமயத்திலாவது வழிபாடு செய்ய வேண்டும். பிள்ளைகள் பரீட்சை எழுதுவதற்காக எடுக்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கும் அவர்களுடைய முயற்சிகள் வெற்றி அடைவதற்கும் பெற்றோர்களும் சில வழிபாட்டை பின்பற்ற வேண்டும். இந்த வழிப்பாட்டு முறையை பற்றி இப்பொழுது பார்ப்போம்.

- Advertisement -

பிள்ளைகளுக்கு பரீட்சை நடக்கும் சமயத்தில் வரக்கூடிய செவ்வாய் மற்றும் புதன்கிழமையில் இந்த வழிபாட்டை நாம் செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை நாம் அருகில் இருக்கக்கூடிய விநாயகர் ஆலயத்திலும் செய்யலாம் அல்லது வீட்டிலும் செய்யலாம். ஒரு தட்டில் பச்சரிசியை பரப்பிக் கொள்ளுங்கள். அந்த பச்சரிசிக்கு மேல் இரண்டு அச்சு வெல்லத்தை வைக்க வேண்டும். இந்த அச்சு வெல்லத்திற்கு மஞ்சள் குங்குமம் வைத்து மலர்களால் அலங்காரம் செய்து கொள்ள வேண்டும்.

அந்த அச்சு வெல்லத்தின் நடுப்பகுதியில் இருக்கக்கூடிய பள்ளத்தில் நெய்யில் நனைத்த பூத்திரையை போட்டு தீபம் ஏற்றி விநாயகப் பெருமானை வழிபாடு செய்ய வேண்டும். இந்த முறையை நாம் வீட்டிலேயும் செய்யலாம். தீபம் தானாக மலையேறிய பிறகு இந்த பச்சரிசி மற்றும் அச்சு வெல்லத்தை அருகில் இருக்கக்கூடிய பசு மாட்டிற்கு தானமாக தந்துவிட வேண்டும்.

- Advertisement -

இப்படி செவ்வாய் மற்றும் புதன்கிழமையில் விநாயகப் பெருமானை நாம் வழிபாடு செய்தோம் என்றால் நம்முடைய பிள்ளைகளுக்கு நல்ல அறிவு ஏற்பட்டு அதன் மூலம் படிக்காத பிள்ளைகளும் படிப்பதற்குரிய வழி உண்டாகும். மேலும் பிள்ளைகள் தினமும் காலையிலும், மாலையிலும் பின்வரும் இந்த ஒரு மந்திரத்தை 11 முறை உச்சரிப்பதன் மூலம் வாக் தேவதையின் அருளால் அவர்கள் படிக்கும் படிப்பானது அவர்கள் மனதில் பதிந்து பரீட்சை சமயத்தில் ஞாபகத்திற்கு வரும் என்று கூறப்படுகிறது.

மந்திரம்

- Advertisement -

வத வத வாக்தேவியே நமஹ

இதையும் படிக்கலாமே:வளமான வாழ்க்கை அருளும் வளர்பிறை பஞ்சமி

நன்றாக படித்து ஞாபகம் வைத்துக் கொள்வதற்கும் படித்த படிப்பை பரிட்சையில் எழுதுவதற்கும் இறைவனின் அருள் கண்டிப்பாக வேண்டும். இந்த முறையில் நாம் வழிபாடு செய்தால் பிள்ளைகள் நன்றாக படித்து பரிச்சையில் நல்ல மதிப்பெண்கள் எடுப்பார்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்